(Reading time: 10 - 19 minutes)
Kanavu Meippadum
Kanavu Meippadum

தொடர்கதை - கனவு மெய்ப்படும் – 16 - ஜெய்

னைவரும் பிரமாதமாக விளையாடியதாகக் கூறி பயிற்சியாளர் கைத்தட்ட வீராங்கனைகள்  சற்று கலங்கியபடியே அவரைப் பார்த்தனர்.... மைத்திக்கும், துளசிக்கும் கூடுதல் கலக்கம் கண்களில்....

பயிற்சியாளர் புதியவர்... கடந்த ஒரு மாதமாகத்தான் இவரின் கீழ் இருவரும் விளையாடுகிறார்கள்....  பயிற்சியின்போதே சற்று கடுமையுடனே காணப்படுபவர்....  தங்களை பற்றி பெரிதாக அவருக்கு எதுவும் தெரியாத நிலையில் இன்றைய தோல்விக்கு தங்களை காரணமாக்கி விடுவாரோ என்ற அச்சம் கூடுதலாக அவர்களிடம் இருந்தது....

“சொல்லுங்க எதுனால இன்னைக்கு மேட்ச் ஜெயிக்க முடியாம போச்சு....”, பயிற்சியாளர் கேட்க நீண்ட மௌனம் அனைவரிடத்திலும்....

“சொல்லுங்க வாயை மூடிட்டு இருந்தா எப்படி.... இங்க நிறைய பேர் ஏற்கனவே ரஞ்சி விளையாடினவங்க....   அதுவும் இதே டீமோட... ஓரளவுக்கு உங்களுக்கு அவங்க பலம், பலவீனம் தெரியும்... அப்படியும் ஏன் இத்தனை மோசமான தோல்வி....”, மறுபடி மௌனமே பதிலாக இருந்தது....

துளசிக்கும், மைத்திக்கும் இந்த மீட்டிங்கே புதுசாக இருந்தது.... சாதாரணமாக விளையாட்டு முடிந்ததா, பரிசை வாங்கிக் கொண்டு சென்று விடுவார்கள்.... ஏதேனும் குறை இருந்தாலும் பாஸ்கர் அதை அடுத்த நாள் பயிற்சியின்போதே சொல்லுவார்.... எனவே இப்பொழுது இவர் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்லவதா, கூடாதா என்று இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்...

யாரிடமிருந்தும் பதில் வராததால், துளசியை நோக்கிய பயிற்சியாளர்...

“துளசி உன்னோட பாஸ்ட் ரெகார்ட்ஸ் வச்சுத்தான் எக்ஸ்பீரியன்ஸ் இல்லைனாலும் பரவாயில்லைன்னு ரஞ்சிக்கு  உன்னை செலக்ட் பண்ணினது.... ஆனால் இன்னைக்கு உன்னோட ஸ்கோர் ஏன் இவ்ளோ கம்மி ஆச்சு....  அதுவும் இல்லாம ஏன் பொறுமையே இல்லாம ஆடின...”

பயிற்சியாளரின் கேள்விக்கு என்ன பதில் சொல்வதென்று மைத்தியை பார்த்தாள் துளசி.... மைத்தி தைரியமா உண்மையை சொல்லு என்று சைகை செய்ய...

“அது சார்,  நான் ஆட்டம் தொடங்கும்போது நிதானமாத்தான் ஆட ஆரம்பிச்சேன்...  ஆனா ரன் ஓட வேண்டிய நேரத்துல எல்லாம் அந்த அக்கா நின்னுட்டே இருந்தாங்க.... எனக்கு வேற வழி தெரியலை... அதுதான் அடிச்சு ஆட ஆரம்பிச்சேன்....  ரன் அவுட் கூட என்னோட தப்பு இல்லை, அவங்கதான் ஓடி வரலை... நான் வேற வழி இல்லாம திரும்ப கிரீஸ் வர முயலும்போது அவுட் ஆகிட்டேன்....”, துளசி கூற, பயிற்சியாளர் துளசியுடன் களமிறங்கிய வீராங்கனையை

10 comments

• Doing good ma'am.trust all is well with you too...
3 illa 5 😉 read everything in one go...appadiya climax enannu curiosity build aitte irundhadhy....very motivational series Jayanthi ma'am 👍
• Thanks for your comments AdharvJo... Missed your comments so much for the past 3 updates... Hope you are doing good.... Raghu oorai vittu ponathaalathaan maithi avalukkunnu pesa aarambichaa... Illainaa innum Raguvoda mudhugu pinnaalathaan olinjindu iruppaa...
• Super super
Adutha matchi la mythi ponnu vachi seiva
Vilayatu ipa arasiyal agiduchi thiramaiku vaipila alaga soliteenga jay
• 👌 summa dhool kalakuringa natamai :hatsoff: 👏👏👏👏👏👏 lively and realistic screen play.....katchigalai pakathula irundhu pakura feel, ivanga emotions ellam rombha etharthama portray seithu irukinga 👌

:hatsoff: to these two girls... Mythri avanga veetula vadhaduvadhu superb...likewise thulasi thanoda tharpodhiya nilai portt paduthamal aduvadhu awesome 👍

Family and relative avanga nalanai sinthithu pesuradhum sari for n against rendume well balance..perfect blend!! :hatsoff: but raguannanai ippadi state vittu thurathitingale ma 😉😉 coach ellathayum match munadi kettum adhai appove sort pattame vittutare facepalm anyway it is resolved now.
adutha epi padika curious madam ji...keep rocking.

Thank you.

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.