(Reading time: 10 - 19 minutes)
Kanavu Meippadum
Kanavu Meippadum

அங்க பண்ணின அரசியலை பாஸ்கர் அம்பலப்படுத்தி இவங்க ரெண்டு பேரையும்  செலக்ட் ஆக வச்சுட்டார்....  அதுவும் இல்லாம ரஞ்சிக்கும் அவருக்கு வேண்டப்பட்டவங்கள செலக்ட் பண்ண முடியாம போச்சு...  இது எல்லாத்துக்கும் காரணமானவங்கள விளையாட விடாம பண்ண உங்களை ஏவி விட்டிருக்கார்... எப்படி இப்படி சரியா சொல்றேன்னு பார்க்கறீங்களா....  ரஞ்சன்கிட்ட இருந்து போன் என்னும்போதே கொஞ்சம் டவுட் வந்தது... அதனால நீங்க பேசறதை முழுக்க இன்னொரு ரூம்ல இருந்த எக்ஸ்டென்ஷன்  போன்ல நாங்க கேட்டோம்... நீங்க மொதல்ல பண்ண முடியாதுன்னு மறுக்கறது, அவர் உங்களை வற்புறுத்தி செய்ய சொல்றது எல்லாம் கேட்டோம்....   ஆனா எனக்கு என்ன வருத்தம்ன்னா அவர் போன் வச்ச உடனே நீங்க என்கிட்டே வந்து சொல்லுவீங்கன்னு ரொம்ப எதிர்பார்த்தேன்....”

கோச் பேச பேச இருவருக்கும் வாய் பேச முடியா நிலை... தாங்கள் செய்ததை யாராலும் கண்டுபிடிக்க முடியாது என்று நினைத்திருக்க தங்கள் பயிற்சியாளர் கண்டு பிடித்ததுடன் அதற்கு காரணமானவரையும் சேர்ந்து கண்டுபிடித்திருக்கிறார்கள்  என்பதை நம்ப முடியாத அதிர்ச்சியில் இருந்தார்கள் இருவரும்...

“சார் எங்களை மன்னிச்சுடுங்க.... அவர் எங்களை கட்டாயப்படுத்தினதுல எங்களுக்கு வேற வழி இல்லாம போச்சு....”

“வேற வழி இல்லைன்னு சொல்லாதீங்க... உடனே வந்து எங்கக்கிட்ட சொல்லி இருக்கலாமே...”

“சார் அவர் யாருக்கும் தெரியக்கூடாதுன்னு சொன்னார்...  விஷயம் வெளிய தெரிஞ்சா எங்களுக்கு அடுத்து விளையாட வாய்ப்பு இல்லாம பண்ணிடுவேன்னு மிரட்டினார்....  அவர் அப்படி மிரட்டவும் நாங்களும் பண்ணிட்டோம்....”

“ஏம்மா நீங்க விளையாட வரும்போது இந்த மாதிரி யாராவது பண்ணி இருந்தா இன்னைக்கு நீங்க இந்த அளவுக்கு வளர்ந்து இருப்பீங்களா.... நம்ம நாட்டோட சாபக் கேது  என்னன்னு தெரியுமா... எங்க பார்த்தாலும் அரசியல்....  எத்தனையோ திறமையானவங்க இருந்தும் ஏன் ஒலிம்பிக்ல ஒரு தங்கம் கூட வாங்க முடியலை... இந்த பாழாப் போன அரசியல்தான்....   திறமையானவங்களை விட்டுட்டு வேண்டியவங்க, காசு கொடுக்கறவங்கன்னு ஆளை சேர்க்க வேண்டியது.... அப்பறம் எங்க இருந்து மெடல் வரும்...   நேத்து ராத்திரி எங்களுக்கு தெரிஞ்ச உடனேயே  உங்களை மிரட்டி செய்ய விடாம செஞ்சிருக்க முடியும்... ஆனா நீங்க என்ன பண்றீங்கன்னு பார்க்கத்தான் உங்களை எதுவும் கேட்கலை.... அதே மாதிரி அத்தனை பேரும் இருக்கும் இடத்துல இந்த விஷயத்தை கேக்கறதுக்கும் காரணம், நாளைக்கு வேற யாரும் இதே தப்பை பண்ணக்கூடாதுன்னுதான் ...”

“சார் மன்னிச்சுடுங்க சார்... அவர் சொன்னதை பண்ணலைன்னா அடுத்து விளையாட முடியாம

10 comments

• Doing good ma'am.trust all is well with you too...
3 illa 5 😉 read everything in one go...appadiya climax enannu curiosity build aitte irundhadhy....very motivational series Jayanthi ma'am 👍
• Thanks for your comments AdharvJo... Missed your comments so much for the past 3 updates... Hope you are doing good.... Raghu oorai vittu ponathaalathaan maithi avalukkunnu pesa aarambichaa... Illainaa innum Raguvoda mudhugu pinnaalathaan olinjindu iruppaa...
• Super super
Adutha matchi la mythi ponnu vachi seiva
Vilayatu ipa arasiyal agiduchi thiramaiku vaipila alaga soliteenga jay
• 👌 summa dhool kalakuringa natamai :hatsoff: 👏👏👏👏👏👏 lively and realistic screen play.....katchigalai pakathula irundhu pakura feel, ivanga emotions ellam rombha etharthama portray seithu irukinga 👌

:hatsoff: to these two girls... Mythri avanga veetula vadhaduvadhu superb...likewise thulasi thanoda tharpodhiya nilai portt paduthamal aduvadhu awesome 👍

Family and relative avanga nalanai sinthithu pesuradhum sari for n against rendume well balance..perfect blend!! :hatsoff: but raguannanai ippadi state vittu thurathitingale ma 😉😉 coach ellathayum match munadi kettum adhai appove sort pattame vittutare facepalm anyway it is resolved now.
adutha epi padika curious madam ji...keep rocking.

Thank you.

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.