எனக்கொரு சினேகிதி சினேகிதி தென்றல் மாதிரி
நீ ஒரு பௌர்னமி பௌர்னமி பேசும் பைங்கிளி
"அம்மா நான் செஞ்சது தப்பான்னு தெரியல ஆனா அது முரளி மனசை காயப்படுத்தியிருக்கும் இல்லையா? நான் என்னம்மா பண்ணட்டும்? இப்போ நான் இதை சொல்லாம இருந்தா நாளைக்கு அப்பா காதுக்கு முரளி இப்படி என் பின்னாடி சுத்தற விஷயம் தெரிஞ்சா? அவன் லைப் ஸ்பாயில் ஆயிடுமே... உங்களுக்கே தெரியும் அப்பா மத்த விஷயங்கள்ல எவ்ளோ ஜெனெரஸா இருக்காரோ அதே அளவுக்கு இந்த காதல் விஷயத்தை வெறுக்குறாருனு...எந்த காரணத்துக்காகவும் நான் அப்படி ஒரு தவறை பண்ண மாட்டேன்மா. அதே மாதிரி என்னால இன்னொருத்தர் பாதிக்க படக்கூடாது" தமிழ்செல்வி அந்த பக்கத்தில் எழுதியிருந்ததை படித்த ராம்க்கு அவள் ஏன் அப்படி நடந்து கொண்டாள் என புரிந்தது. தன்னுடைய அவசர புத்தியை எண்ணி நொந்து கொண்டான்.
அதற்கு அடுத்தடுத்த பக்கங்களில் அவ்வப்போது கல்லூரியில் நடக்கும் முக்கியமான நிகழ்வுகளை பதிவேற்றியிருந்தாள்.
வெற்றிகரமாக கல்லூரியின் இரண்டாம் வருட துவக்கம் என்ற தலைப்புடன் கையில் வெற்றி குறி காண்பித்தபடி புன்னகைத்து கொண்டிருந்தவளின் புகைப்படம் ஒட்டப்பட்டிருந்தது அடுத்தபக்கத்தில். அதை மெல்ல வருடியவன் உதடுகளில் அவனறியாமல் புன்னகை மலர்ந்தது. அடுத்த பக்கத்தை திருப்பினான்..
"தமிழ், உன்னை பாக்க யாரோ வந்திருக்காங்க... ரிஷப்ஷன்ல வெயிட் பன்றாங்க " அவள் வகுப்பு தோழி ஒருவள் சொல்லவும் "யாராக இருக்கும்???" என்ற யோசனையுடன் வரவேற்பறையை நோக்கி சென்றாள்.
அங்கே உள்ளே நுழையும் போதே அவளை ஊடுருவும் பார்வையுடன் நின்றிருந்தவனை கண்டதும் அவள் முகம் உணர்வுகளை எல்லாம் துடைத்து வைத்ததை போல இறுகி போனது. அவனருகே சென்று நின்றவள் எதுவும் பேசாமல் அமைதியாக நிற்க, மேலிருந்து கீழாக அவனின் பார்வை அவளை அளந்தது. அந்த பார்வையில் அவளுக்கு நெருப்பை பற்ற வைத்தது போல இருக்க, "என்ன விஷயமா இங்க வந்திங்க?" என்றாள்.
"அமெரிக்கால இருந்து வந்ததும் என் வருங்கால மனைவியை தான் பார்க்கணும்னு ஓடிவந்துருக்கேன். மாமான்னு ஓடி வந்து கட்டிக்குவேன்னு பார்த்தா எதுக்கு வந்தேன்னு காரணம் கேக்கற???" அவனின் பார்வையும் பேச்சும் அவளுக்கு வெறுப்பை தர, "விக்னேஷ் இந்த மாதிரி காலேஜ் வராது இதுவே முதலும் கடைசியா இருக்கட்டும். இனிமேல் இப்படி வராதீங்க. அதே மாதிரி நான் உங்களை கல்யாணம் பண்ணிக்க போறேன்னு எப்பவுமே
Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.
Ini tamil solvala enna achi nu
So ini ena anadhu nu yaru solla poranga??? Rama and Selvi oda moments rombha kurachitinga....
Thank you.
Thamizh oda appa marana edhavadhu pannitaara...