(Reading time: 12 - 23 minutes)
Priyamaanavale
Priyamaanavale

ஜாப்க்கு ஏற்பாடு பண்ணிருக்கறதா  சொன்னார்.நீ அம்மாவையும் தங்கச்சிகளையும் இங்கயே கூட்டிட்டு வந்துடலாம்ல..." தமிழ்செல்வி கேட்க, "இல்லை தமிழ். நான் தான் சொன்னனே அம்மா கையில் இருந்த சேவிங்ஸ் எல்லாம் வெச்சு எங்களுக்கு அங்க இருந்த நிலத்தில ஒரு சின்ன வீட்டை கட்டிருக்காங்க. இங்க வந்தா வீடு வாடகை அது இதுனு செலவு அதிகம். அதுவும் இல்லாம அம்மாக்கு இன்னும் ரெண்டு வருஷம் சர்வீஸ் இருக்கு. இங்க வரதுனா அதை ரிசைன் பண்ணனும். தங்கச்சிக ரெண்டு பெரும் அங்கேயே படிக்கிறாங்க. அதனால அங்க இருக்கறது தான் வசதி" மாறன் சொல்வது சரி என  ஆமோதிப்பாக தலையசைக்க தமிழ்செல்வியை பார்த்தவனுக்கு அப்போது தான் ஞாபகம் வந்தது.

"தமிழ் சொல்ல மறந்துட்டேன். என் கிளாஸ் மேட்  விஷ்ணு சொல்லிருக்கேன்ல" மாறன் சொல்ல, "ஹ்ம்ம் ஆமாம் அந்த லவ் பேர்ட் விஷ்ணு தான???" என சிரித்தாள் தமிழ்.

"எஸ் எஸ் அந்த லவ் பெர்ட்ஸ்க்கு ஒரு சின்ன ப்ரோப்லேம். என்கிட்டே ஹெல்ப் கேட்ருக்காங்க. நான் உன்கிட்ட ஹெல்ப் கேக்கறேன்" என்றான் மாறன்.

"முதல்ல என்ன ப்ரோப்லேம்னு சொல்லு??" தமிழ்செல்வி கேட்க, "உனக்கு தான் தெரியுமே விஷ்ணு பமிலி லோவெர் மிடில் கிளாஸ், அவன் லவ் பண்ற பொண்ணு நல்ல வசதியான குடும்பம். அவங்க வீட்ல லவ் மேட்டர் தெரிஞ்சு போயிடுச்சு. அந்த பொண்ணுக்கு இந்த செமஸ்டர் முடிஞ்சதும் மேரேஜ் பிக்ஸ் பண்ணிருக்காங்க. அதான் இவங்க ரெண்டு பேரும் இப்போ ரெஜிஸ்டர் ஆபீஸ்ல மேரேஜ் ரெஜிஸ்டர் பண்ணிடலாம் அப்படினு முடிவு பண்ணிருக்காங்க. அதான் நாளைக்கு ரெஜிஸ்டர் ஆபீஸ் போகணும். இன்னொரு சாட்சி வேணும்னு சொன்னாங்க நான் உன்னை கூட்டிட்டு வரேன்னு சொல்லிட்டேன்" மாறன் சொல்ல, "நோ வே மாறா. உனக்கே தெரியும்ல நான் இந்த மாதிரி விஷயத்துல எல்லாம் இன்வால்வ் ஆக மாட்டேன்னு.அப்பாக்கு தெரிஞ்சா அவ்ளோ தான் அப்பாக்கு இதெல்லாம் சுத்தமா பிடிக்காது" தமிழ்செல்வி மறுக்க, "ப்ளீஸ் தமிழ். இந்த ஒரு முறை...ப்ளீஸ் ப்ளீஸ் நான் ப்ரோமிஸ் பண்ணிட்டேன்" மாறன் கெஞ்சவும் சில நிமிடங்கள் யோசித்தவள் "சரி இது தான் லாஸ்ட் இனிமேல் இந்த மாதிரி யாருக்கும் ப்ராமிஸ் பண்ணாத..." எனவும் "தேங்க்ஸ் தமிழ் தேங்க்ஸ்" என சந்தோசத்துடன் சிரித்தான் மாறன்.

"இந்த மாதிரி ரெஜிஸ்டர் மேரேஜ் எல்லாம் நான் சினிமால தான் பார்த்திருக்கேன். எனக்கு பயமா இருக்கு மாறா...ஒன்னும் பிரச்சனை வராதுல?" எப்போதும் போல தோட்டத்தில் இருந்த இருக்கையில் அமர்ந்து படித்து கொண்டிருந்த தமிழ்செல்வி மாறனிடம் கேட்க, "அதெல்லாம் ஒன்னும் வராது. ஜஸ்ட் ரெண்டு பெரும் ரெஜிஸ்டர் ஆபீஸ் போறோம் கையெழுத்து போடறோம் அவ்ளோ தான். ரொம்ப நேரம் எல்லாம் எடுக்காது. சீக்கிரமே மேரேஜ் ரெஜிஸ்டரேஷன்  முடிஞ்சிடும். நீ நாளைக்கு காலேஜ் பஸ்ல வந்துடு. காலேஜ் முன்னாடி

20 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.