(Reading time: 10 - 20 minutes)
Unakkaagave uyir vazhgiren
Unakkaagave uyir vazhgiren

ஆனால் குயிலி எதையும் கவனிக்காமல் தான் புகைப்படத்தில் பார்த்த பெண்ணிற்கும் தன் எதிரே நின்று கத்திக் கொண்டிருக்கும் இந்தப் பெண்ணிருக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை. நிச்சயம் அந்த புகைப்படத்தில் இருப்பது இவர்களாக இருக்க முடியாது. இவர்கள் தான் அம்மா என்றால் நான் புகைப்படத்தில் பார்த்த அந்த பெண் யார். மிகவும் அன்போடு ராகவ்வை அணைத்துக் கொண்டு நிற்கும் அந்தப் பெண் யாராக இருக்கும். இவர்களிடம் கேட்கலாமா என்று யோசித்துக்கொண்டே இருக்கும் பொழுது அவளது கண்களில் பட்டார் ராமு.

ராமுவை கண்டதும் குயிலின் கண்களில் ஒரு ஒளிவட்டம் தோன்றியது. அவரைப் பார்த்ததுமே அவளுக்கு எங்கேயோ பார்த்தது போல தோன்ற அவரையே கூர்ந்து கவனித்தாள் குயிலி. புஷ்பா இன்னும் கோபத்தில் குயிலியிடம் கத்தி கொண்டிருந்ததால் குயிலியின் விழிகள் ராமுவை பார்ப்பதை அவள் கவனிக்கத் தவறிவிட்டாள்.

 புஷ்பாவிற்கு பின்னால் நின்று  கலங்கிய விழிகளுடன் கைக்கூப்பி தயவு செய்து சென்று விடு என்று சைகை காட்ட குயிலிக்கு இன்னும் குழப்பம் அதிகரித்தது. அதோடு ராமுவை அடையாளம் கண்டு கொண்டாள். செய்திதாளில் ராகவ் பக்கத்தில் நின்ற ஆண் இவர் தான் என்று. ஆனால் இப்பொழுது மிகவும் வயதான வராக தெரிகிறார். அப்படி என்றால் இவருக்கு எல்லா உண்மைகளும் தெரியும். பிறகு ஏன் இவர் ராகவ் விடம் சொல்லவில்லை என்று யோசிக்க அவரோ போ என்று சொல்லி கொண்டே இருந்தார்.

 இப்பொழுது தன்னிடம் இருக்கும் புகைப்படத்தை தன் எதிரே நிற்கும் இந்த பெண்ணிடம் காட்டுவது சரியாக இருக்காது என்று உணர்ந்தவள் அதன்பிறகு சிறிதும் தாமதிக்காமல் அங்கிருந்து வெளியேறினாள்.

 நேராக ஆசிரமம் சென்றவள் ஆசீர்வாதம் தாத்தாவை அழைத்து கொண்டு தன்னுடைய கிராமத்தை நோக்கி புறப்பட்டாள்.

தாத்தா உடன் வளர்ந்த அந்த இடத்தையும் அந்த கிராமத்தையும் பார்த்ததுமே குயிலிக்கு இனம் புரியாத ஒரு சந்தோஷம் பரவத்தொடங்கியது. அவளை அறியாமலேயே அவள் கண்களில் நீர் கோர்த்துக் கொண்டது.

 தாத்தாவுடன் பழகிய ஒவ்வொரு இடங்களையும் தொட்டு தொட்டு பார்த்தாள். அவரோடு அமர்ந்து பேசிய மரத்தடியில் சென்று அமர்ந்து கொண்டாள். அவரோடு நடந்து திரிந்த அந்தப் பாதைகளில் மீண்டுமாக நடந்து நடந்து பார்த்தாள்.

 அவர் பேசிய ஒவ்வொரு வார்த்தைகளையும் நினைவு கூர்ந்தாள். அவருடன் சென்று பூ பறித்த அந்த தோட்டங்களை பார்த்தாள். தாத்தாவுடன் சென்று வணங்கிய அந்தக்

18 comments

  • Ouch 😱😱😱 ena karpanai ena karpanai 👌 thatha graveyard la clue va vachi irukaru yammadiyo :eek: idhai ellam.pana ivarukku neram irundhadha...abathunu therinjum ivalo risky plan ah facepalm good they escaped 👍 raghav suzhnilai kaidhiyaga irukaro?? Is he pretending for some reason??? Hope Kuyili ellathayum kadandhu varuvanganu??? Semma Interesting aga konduporinga jeba ma'am 👏👏👏👏👏👏 how is Ramu connected to their family?? <br />look forward to read the next move.<br />Thank you.
  • இவ்வளவு பெரிய பாராட்டு கிடைத்ததே மிக பெரிய கிஃப்ட் .. மிக நன்றி.. தங்களின் அன்பு மெய்சிலிர்க்க வைக்கிறது. மிக்க நன்றி uncle
  • Sema viruviru epi mam :clap: oru thriller movie paakra pola feel :hatsoff: eagerly waiting for the next update mam.
  • அன்புள்ள ஜெபா! கதையின் போக்கு, கற்பனையின் உச்சம். சிக்கல் நிறைந்த மர்மம் மிகுந்த சரித்திரக் கதையா, துப்பறியும் நாவலா என நினைக்கத் தோன்றுகிறது. பிரமாதம்! கல்கியின் நினைவு வருகிறது! சில்சீக்கு வெளியேயும் தங்கள் படைப்புகள்<br />வரவேற்கப்படும் என்பது உறுதி!

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.