(Reading time: 20 - 40 minutes)
Priyamaanavale
Priyamaanavale

"அந்த நாள் தான் எங்க அப்பா கடைசியா என்னோடவும் எங்க அம்மாவுடனும் பேசுன நாள். அதுக்கு அப்பறம் தான் தெரிஞ்சுது அது எல்லாம் விக்கியுடைய வேலைனு. ஆனாலும் அதை சொல்லி தமிழ்க்கிட்ட அப்பா போகலை. அப்பாவுடைய கோபம்,  கௌரவம் தான் மாறனுடைய மரணத்துக்கு காரணம்னு அந்த தண்டனையை அவர் ஏத்துக்கிட்டார். இத்தனை வருசத்துக்கு அப்பறம் அப்பா இறந்ததும் அப்பறம் தான் தமிழ் திரும்ப வந்துருக்கா." நடந்தை சொல்லி முடித்த நந்து, "தமிழ் ரொம்ப சாப்ட். யாரையும் சத்தமா பேசி கூட ஹர்ட் பண்ணகூடாதுனு நினைப்பா. ஆனா அவளுக்குள்ளே இப்படி ஒரு கோபமும் பிடிவாதமும் இருக்கும்னு நாங்க நினைக்கலை" என்றான் நந்தா.

வீட்டை அடைந்த ராம் அவர்களின் அறைக்கு வந்து மெல்ல கதவை திறந்தான். அந்த மெல்லிய விளக்கின் வெளிச்சத்தில் அங்கிருந்த கட்டிலில் அயர்ந்து உறங்கி கொண்டிருந்தாள் தமிழ்செல்வி. ஏதோ ஒரு புகைப்படத்தை கட்டி பிடித்திருந்தாள். அவளின் கன்னத்தில் இருந்த கண்ணீர் தடம் அவள் அழுதிருப்பதை காட்டியது. அவள் கையில் இருந்த அந்த புகைப்படத்தை மெல்ல எடுத்து பார்த்தான். அவளும் அவளின் அப்பாவும் சேர்ந்து எடுத்து கொண்ட புகைப்படம். அவள் அருகே அமர்ந்து அவளின் முகத்தில் இருந்த முடிக்கற்றையை மெல்ல விளங்கியவன் அவள் முகத்தையே பார்த்தவாறு அமர்ந்தான்.

அவளின் வேதனையை அவனால் உணர முடிந்தது. தன்னுடைய தந்தை செய்த தவறுக்கு தர்மப்படி தண்டனை தந்திருந்தாலும் அது அவளுக்குமான தண்டனையாக தான் இருந்திருக்கும் என புரிந்தது. இந்த நொடி இத்தனை நாள் தந்தை பிரிந்திருந்ததற்காக ஒரு மகளாக தன்னை தானே குற்றப்படுத்தி கொண்டிருப்பாளாயிருக்கும். அவளின் வாழ்க்கையில் அவள் இவ்வளவு பெரிய துயரத்துடன் வாழ்ந்திருக்கிறாள் என புரியாமல் சிறுபிள்ளைத்தனமாக எப்போதோ எங்கேயோ யாருடனோ அவள் பேசியதை முழுதாக கூட கேட்காமல் அவளை வருத்தியதை எண்ணி அவனுக்கே அவமானமாக இருந்தது. தன்னை விட வயதில் சிரியவளாக இருந்தாலும் அவளின் அந்த பக்குவம் அவனை ஆச்சரியப்படுத்தியது. அந்த வயதில் தன்னால் இப்படி யோசித்திருக்க முடியுமா என எண்ணிப்பார்த்தான். நிச்சயமாக முடிந்திருக்காது என தோன்றியது. அவள் அபூர்வமான பெண் என ஏன் அசோக் சொன்னான் என புரிந்தது ராமிற்கு.

அந்த உரக்க நிலையிலும் அவள் புருவங்கள் சுருங்கி இருக்க, அவளின் முகத்தில் இருந்த வேதனையை கண்டவன் மெல்ல அவளின் நெற்றில் தன்னுடைய இதழால் ஒற்றினான். அவளின் புருவ சுளிப்பும் அவளின் முகத்தில் இருந்த வேதனையும் மறைந்து அவள் முகம் இலகுவானது.

தொடரும்

Next episode will be published on 24th Oct. This series is updated weekly on Saturday mornings.

Go to Priyamaanavale story main page

The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. All the copyright content at chillzee.in are protected by national and international laws & regulations. We are against plagiarism! If you find our site's content copied in any other website or being broadcasted in audio / video format, we request you to let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it..
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.

21 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.