(Reading time: 12 - 23 minutes)
Unakkum Enakkum thaan porutham
Unakkum Enakkum thaan porutham

அவரைத் தன் தந்தை போன்று கூறினானே. அவர் அதற்கு தகுதியானவர்தான்.

இப்போது மாதவன் அவருக்கு செய்யும் நன்றியுபகாரமாய் பரத்தின் படிப்பை தான் பொறுப்பெடுத்துக்கொண்டிருக்கிறான். பரத்தும் பொறுப்பை உணர்ந்து படிக்கிறான்.

அத்துடன் மாதவன் மீது மரியாதை கலந்த அன்பும் அவனுக்கு அதிகம் இருக்கிறது என்று அவன் பேச்சிலிருந்தே மகாலட்சுமி உணர்ந்திருந்தாள். அவனை தன் முன்மாதிரியாக பின்பற்ற நினைக்கிறான். அவன் மீது ஒரு சகோதரப் பாசம் உள்ளது.

ஆனால் அவனுடைய சகோதரி செல்விக்கு அந்த மாதிரி எல்லாம் நன்றியுணர்ச்சியோ, பாசமோ  இருப்பது போல் தெரியவில்லை. அவர்களுக்கு செய்ய வேண்டியது மாதவனின் கடமை என்பது போல்தான் அவளது நடத்தை இருக்கிறது. திருமணம் ஆகி இத்தனை நாட்களில் செல்வி அதுபோல் நடந்துகொண்டதை அவள் பார்த்துக்கொண்டுதானே இருக்கிறாள்.

அவர்கள் வீட்டுக்குள் இயல்பாக நுழைவது கூட தவறில்லை. ஆனால் அங்குள்ள பொருட்கள் மீது உரிமை கொண்டாடும்போது மகாலட்சுமிக்கு கோபம் வரும். அதை வேண்டும் என்று கேட்டு எடுத்துக்கொண்டால் கூட போதும். ஆனால் அவள் ஆசைப்பட்டதை கொடுக்க வேண்டியது மாதவனின் கடமை. அதனால் அவனது மனைவியான மகாலட்சுமிக்கும் அது கடமை என்பதுபோல் அவள் நடத்தையிருந்தது. பல நேரங்களில் அவள் சமைப்பது இல்லை. அடுத்தவர் வயிறு வாடாமல் உணவு படைக்கும் தொழில்தான் மகாலட்சுமியின் குடும்பத் தொழில். அவளும் அதைப் பின்பற்றுகிறவள்தான்.

ஆனால் வீட்டிலேயே எந்த வேலையும் இல்லாமல் எந்நேரமும் தொலைக்காட்சிப்பெட்டியின் முன்னே சோம்பி உட்கார்ந்துவிட்டு உணவு நேரம் தாண்டியும் குழந்தைகளுக்கும், கணவனுக்கும் உணவு சமைக்காமல் திடீரென்று அவள் வீட்டிற்கு வந்து அவள் சமைத்ததை உரிமை உள்ளவள் போன்று எடுத்துக்கொண்டு செல்லும்போது அவளுக்கு எரிச்சலாக தான் வரும். முன்பே சொல்லியிருந்தால் அவள் சேர்த்து சமைத்திருப்பாள். அதையும் சொல்வதில்லை. இங்கோ மாதவன் உணவு வீணாக்கவும் கூடாது என்கிறான். அவளை நம்பி சமைத்து வைத்தால் அவள் அன்று பார்த்து நான் ஹோட்டலில் வாங்கிவிட்டேன் என்று சாதாரணமாக கூறிவிடுவாள். இங்கு மாதவனிடம் அவள்தான் திட்டு வாங்க வேண்டியிருக்கும்.

அத்துடன் அவள் தன் குழந்தைகளையும் கவனம் எடுத்துக் கவனிப்பதில்லை. இரண்டு பேருமே பெண் குழந்தைகள். அவர்களின் பாதுகாப்பு இந்த காலத்தில் எத்தகையதாக இருக்க வேண்டும். ஆனால் அவளோ அலட்சியமாக குழந்தைகளை விட்டுவிட்டு கவனம் எடுத்துக்கொள்வதில்லை. பிள்ளைகளை விளையாட விட வேண்டியதுதான். ஆனால் பிள்ளைகள் மீது ஒரு கண் வைத்துக்கொள்ள வேண்டும் அல்லவா? அடுத்தவர் வீட்டில் விட்டாலும் சென்று அவர்கள் என்ன

11 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.