(Reading time: 7 - 13 minutes)
Nalla Mudivu
Nalla Mudivu

தலைக்குமேல் இருக்கு!

நிம்மதியாக காலம் ஓடிக்கொண்டிருந்தால், சரி இல்லையே! மறுபடியும் பிரச்னை தலைதூக்க, வந்தது வாய்ப்பு!

 நிரஞ்சனின் போன் சிணுங்கியது. நிரஞ்சன் எடுத்துப் பேசினார்.

" வணக்கம்! நல்லா இருக்கீங்களா?"

" வணக்கம். நல்லா இருக்கேன். யார் பேசறது?"

" சாம்பு பேசறேன், திருச்சியிலிருந்து! "

" ஓ! என்ன திடீர்னு! சொல்லுங்க!"

" மறுபடியும் அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வருது....."

" அதிர்ஷ்டத்தின்மீது நம்பிக்கையே போகிறமாதிரி பண்ணிட்டீங்களே, இனிமேல் யாரும் நீங்களோ, நானோ, சொல்றதை நம்பமாட்டாங்க"

" விரக்தியா பேசாதீங்க அந்த தி.நகர் மனையை வாங்குகிற யோசனையை செட்டியார் கைவிட்டு அடுத்து உங்க மனையை வாங்கத் தயாராயிட்டார்."

" சாம்பு! இனிமேல் நான் உங்க பேச்சை நம்பத்தயார் இல்லே! செட்டியாரையே என்னிடம் பேச சொல்லுங்க! அவர் அதற்கு தயாரில்லேனு சொன்னா, பேசவே தேவை இல்லை!"

" நீங்க ரொம்ப கோபமா இருக்கீங்க! நிதானமா நான் சொல்றதை கேளுங்க! இந்த முறை நானா பேசலே, என் பக்கத்திலேயே செட்டியார் இருக்காரு, அவர்தான் இப்ப உங்களிடம் பேசப்போறாரு, சம்மதமா?"

"சரி! பேசட்டும்!"       "நமஸ்காரம், நிரஞ்சன்! செட்டியார்தான் பேசறேன், அதுவும் சென்னையிலிருந்தே பேசறேன். சந்தோஷமா?"

" ரொம்ப சந்தோஷம், செட்டியார்! நீங்க பெரியவர்! நான் ஏதாவது தப்பா பேசி யிருந்தால், மன்னிச்சுக்குங்க! சொல்லுங்க!"

" இந்த முறை எந்த புரோக்கரையும் நம்பத்தயாரா யில்லே! நீங்களும் நானும் நேரிடையாகவே பேசி முடிவு செய்வோம்.

ஏன் சொல்றேன்னா, அந்த தி.நகர் மனை கைவிட்டுப் போனதுக்கு புரோக்கர் செய்த தில்லுமுல்லுதான் காரணம்!

அதனாலே, நானே இந்த முறை உங்களோட பேசி முடிவு பண்ணுவதா நேரிலேயே வந்திருக்கேன்.

நான் ரெண்டுநாள் சென்னையிலே தங்கப் போறேன். இன்னிக்கோ, நாளைக்கோ, உங்க வீட்டை வந்து பார்க்கிறேன். உடனே உங்களை இங்கே அழைத்து வந்து விவரமா பேசறேன். உங்களோட வேற ஓனர்கள் வருவதாக இருந்தாலும், வரட்டும், மற்ற ஓனர்களை கேட்டுச்

6 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.