(Reading time: 8 - 15 minutes)
இதோ ஒரு காதல் கதை - பாகம் 2
இதோ ஒரு காதல் கதை - பாகம் 2

நல்லது.  என்னால முடியாதுன்னு என்னோட முடிவை நேரடியா அவன்கிட்ட சொல்லிட்ட பின்னாடி, இதுல என்ன இருக்கு?நான் பேசாமல் படிக்கிற வேலைய மட்டும் பார்க்கணும்.

“சரி ரம்யா! ஸ்டடி ஹாலிடேஸ்ல நல்லாப் படி! இதெல்லாம் மறந்திரு!”

“ம்! ட்ரை பண்றேன். ஸ்டில் ஹௌ டேர் ஹி இஸ்?”

“விடு ரம்யா! இதை இத்தோட விட்ரு!”

“வா பஸ்ஸுக்கு நேரம் ஆகுது. சீக்கிரம்!”

“சரி சரி வர்றேன். ஜன்னல் சீட் புடிக்கனுமே நீ!” என்றதும் இருவரும் சிரித்து விட்டனர்.

தேவையான புத்தகங்கள் எல்லாவற்றையும் லைப்ரரியில் எடுத்துவிட்டு வந்திருந்தாள் ரம்யா. எனினும் ஆங்கிலத்துக்கு சில புத்தகங்கள் தேவையாக இருந்தது. சத்யாவிடம் வாங்கிவிட்டு இன்று கல்லூரியில் நடந்ததையும் அவளிடம் சொல்லிவிடலாம் என்று கிளம்பினாள்.

“சத்யா! இன்னிக்கு நான் துளியும் எதிர்பார்க்காத ஒண்ணு நடந்திருச்சு?”

“என்னது? எக்ஸாம் டேட் மாறிடிச்சா?” சத்யா கேட்கவும்.

“அட! அது இல்லடி, எப்பவும் தினேஷ்னு ஒருத்தன் கீதான்னு ஒரு பொண்ண பார்க்க என்  கிளாஸ்ல வந்து நின்னுட்டு இருப்பான்னு உன்கிட்ட சொல்லிருக்கேனே, அவன் இன்னிக்கு என்ன செஞ்சான் தெரியுமா?”

“என்ன செஞ்சான் அவன் ? லாஸ்ட் ஒர்க்கிங் டேன்னு ரொம்ப பீல் பண்ணி எதாவது காமெடி பண்ணிணானா?”

 சீரியசான விஷயம்டி

புதிர் போடாம சட்டுன்னு சொல்லு ரம்மி!

சத்யா, அவன் என்னை ..

உன்னை ? சொல்லித் தொலை!

பிசிக்ஸ் மேம் கூப்பிடறாங்கன்னு சொல்லி லேபுக்கு வரச்சொன்னான். அதுவும் கிளாஸ்ல சார் இருக்கும் போது பெர்மிஷன் கேட்டு.

எதுக்கு லேபுக்கு?உன் ரெக்கார்ட் நோட் கேட்டா?

லூஸு ! லூஸு! அவரசப் படாத! ரம்யா சொல்ல.

நீயும் டக்குனு சொல்லிராத! இழுத்துட்டே இரு! கடுப்பான சத்யாவை இருத்தி, ஒரு பேப்பரை எடுத்து என்கிட்டே கொடுத்தான்!

என்ன பேப்பர்? என்று அவள்  கேட்கவும், ரம்யா தொடர்ந்தாள், ஒரு சின்ன பேப்பர்!அதில எதை வச்சு எழுதியிருந்தான் தெரியுமா ? அவனோட ரத்தம்!

சத்யா முகத்தில் அதிர்ச்சி.

4 comments

  • காதலில் சரி எது தவறு எதுவென்று வரையறுக்கும் மனநிலையில் சிலர் இருப்பதில்லை ! நன்றி தோழி!
  • முதல் பாகம் போலவே இரண்டாம் பாகமும் உங்களுக்குத் பிடிக்கும் என்று நம்புகிறேன் ! நன்றி தோழி!
  • :lol: arambichitangaya arambichitanga. College galatta :dance: <br />nice to see you back with the second part ma'am..... Naa vero etho series nu ninaichen, indha part padika first part padikanumanu ninaichen....but it is the same Miranda girl ah 😁😁😁 <br />Indha suspense la mudikuradha vidalai parunga.... Interesting and cool kick off 👏👏👏👏👏👏<br />Hopefully indha part la yavdhu ivanga rendu perum onnu serattum....<br />Good luck and thank you.

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.