Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - தூங்காத விழிகள் நான்கு...! – 08 - பத்மினி செல்வராஜ் - 5.0 out of 5 based on 2 votes
Thoongatha vizhigal nangu
Pin It

தொடர்கதை - தூங்காத விழிகள் நான்கு...! – 08 - பத்மினி செல்வராஜ்

ஹை அத்தை..... “ என்று சந்தோச கூச்சலிட்டவாறு ஓடிவந்து தன் கால்களை கட்டிக் கொண்ட அந்த இரு வாண்டுகளையும் குனிந்து மனம் நிறைந்த பூரிப்புடன் இருவரையும் தன் இரு கைகளில் அள்ளிக் கொண்டாள்  லாவண்யா..

அவர்கள் இருவரின் பட்டு கன்னத்திலும் ஆசையாக முத்தமிட்டாள்..  அவர்களும் அதில் மகிழ்ந்து லேசாக வெட்கப்பட்டு அவள் கழுத்தை கட்டிக் கொண்டு அவள் கன்னத்திலும் இருபக்கமும் தன் பிஞ்சு இதழ்களால் முத்தமிட்டனர்..

அதில் இன்னுமே சிலிர்த்துப் போனாள் லாவண்யா.. இருவரையும் அணைத்தவாறு உள்ளே வந்தவள்

“என்னடா..  மருமகன்களே..  இந்த அத்தையை மறந்துட்டீங்களா? “  என்று அவர்களை பார்த்து செல்லமாக முறைத்தாள்..

அவர்கள் இருவருமே இல்லை என்று தலையை இரு பக்கமும் வேகமாக உருட்டினர்..

“ஹ்ம்ம் அப்புறம் ஏன் இந்த அத்தை வீட்டிற்கு இத்தனை நாளா வரவில்லை? “  என்றாள் மீண்டும் செல்லமாக முறைத்தவாறு..

அந்த வாண்டுகள் இருவரின் பார்வையும் அங்கே மார்புக்கு குறுக்காக கைகளை கட்டிக்கொண்டு தன் தங்கையை பார்த்து புன்னகைத்தவாறு நின்றிருந்த அவர்கள் தந்தையிடம் சென்று ஒரு பாவமான லுக் உடன் திரும்பி வந்தது..

அவர்கள் பார்வை சென்று வந்த திசையை கண்டதும்

“ஹ்ம்ம் எல்லாம் உங்க அப்பன் வேலைதானா?  உங்களை என் வீட்டிற்கு அழைத்து வர நேரமில்லையாக்கும்? அவ்வளவு பயங்கர பிசி தான் உன் அப்பா.. “  என்று தன் அண்ணனை பார்த்து முறைத்தவாறு உள்ளே வந்தாள் லாவண்யா..

அவளை தொடர்ந்து அவள் கணவன் ஆதவனும் அவர்களுடைய செல்ல மகன் அமுதனை தூக்கிக் கொண்டு புன்னகைத்தவாறு உள்ளே வந்தான்..

லாவண்யா ஆர்யமனின் இரண்டாவது தங்கை..ஆர்யமன் நண்பனான ஆதவனை மணந்து கொண்டு சென்னையில் வேளச்சேரியில் குடியிருக்கிறாள்.. அவர்களுடைய ஒரே மகன் அமுதன்.. லவன் குசனை விட  விட ஒரு வயது மூத்தவன்..

தற்பொழுது லாவண்யா ஆதவன் தம்பதியருக்கு ஒரே மகனாக விளங்குபவன்..

தனக்கு ஒரு மகள் வேண்டும்.. தன் அண்ணன் மகன்களில் ஒருவனை தனக்கு மருமகன் ஆக்கி கொள்ள வேண்டும் என்று தன் கணவனிடம் அடம்பிடித்து வருகிறாள் லாவண்யா..  

ஆனால் அவனோ நாம் இருவர் நமக்கு ஒருவர் மட்டுமே போதும் என்று அடுத்த குழந்தைக்கு தடா சொல்லிவிட்டான்..

About the Author

Padmini Selvaraj

Padmini Selvaraj's Popular stories in Chillzee KiMo

  • Azhagana Ratchashiyae!!!Azhagana Ratchashiyae!!!
  • Enge enathu kathai??Enge enathu kathai??
  • En madiyil pootha malareEn madiyil pootha malare
  • Kanden En Kadhalai...Kanden En Kadhalai...
  • Kaathoduthaan naan paaduven...Kaathoduthaan naan paaduven...
  • Poonkathave thaal thiravaai...Poonkathave thaal thiravaai...
  • Ragasiya SnegithaneRagasiya Snegithane
  • Unnai vida maatten... ennuyireUnnai vida maatten... ennuyire

Completed Stories
On-going Stories

Add comment

Comments  
# RE: தொடர்கதை - தூங்காத விழிகள் நான்கு...! – 08 - பத்மினி செல்வராஜ்Saratha 2020-10-25 17:34
Lovely update paddu
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - தூங்காத விழிகள் நான்கு...! – 08 - பத்மினி செல்வராஜ்Arunaa 2020-10-25 15:54
Nice epi. Waiting for manda s flashback
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - தூங்காத விழிகள் நான்கு...! – 08 - பத்மினி செல்வராஜ்AdharvJo 2020-10-25 15:51
Happy festival 🎊 Padmini ma'am!! Thank you for the long update 👌 karasaramana vivadhathodu, mr eman oda sight adiching padalam was cool and interesting 👏👏👏👏👏 adhan mandha mele ivarukku interest vandhudiche avanga amma va tension panama wedding k s sollungale boss...but adhukku muna mandha yen ippadi payapaduranga nu therinjikonga :yes: kutties nalla parthukuren ivaru avangala neriya crave pana vachi irukaru..... Rules vera idhula 😈

Vadhi vittula prichanai yenunu theriyala buy ivaru pakkathu veedukku panjayathu panurare :Q: Lavi edutha kariyatha kudukama vidamatanga pole...look forward to see what happens next.
Thank you once again for this happy update.
Reply | Reply with quote | Quote
# Thungatha vizhigal nanguMrs fayaz 2020-10-25 14:42
Nice epi mam.. thanx for 38 pages... want manda's FB soon...
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - தூங்காத விழிகள் நான்கு...! – 08 - பத்மினி செல்வராஜ்madhumathi9 2020-10-25 13:52
:clap: nice & galatta epi mam (y) eagerly waiting 4 next epi :clap: :thnkx: & :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - தூங்காத விழிகள் நான்கு...! – 08 - பத்மினி செல்வராஜ்madhumathi9 2020-10-25 11:40
:dance: heyyyyyy 38 pages :clap: (y) :thnkx: :thnkx: big epi mam (y) :GL:
Reply | Reply with quote | Quote

Coming Soon...

Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)

Come join the FUN!

Write @ Chillzee
Go to top