அந்தி மாலை தென்றல் இதமாக வருடிச் செல்ல, மொட்டை மாடியில் இருந்து அமுதாவிடம் கதைப் பேசிக் கொண்டு இருந்தாள் மஞ்சு...
சற்றுத் தொலைவில் மனோஜ் ஷண்முகம் மற்றும் ஜோதியுடன் அரட்டை அடித்துக் கொண்டிருந்தான்.
சீமந்தம் முடிந்து வினோதினியை அவள் பெற்றோர் தங்கள் வீட்டுக்கு அழைத்து சென்று விட்டிருந்தனர். மஞ்சுவின் பெற்றோரும் சாதனா காலேஜில் இருந்து வருவதற்கு முன் வீட்டிற்கு போக வேண்டும் என்று சொல்லி கிளம்பி இருந்தார்கள்.
ஊரில் இருந்து வந்த உறவினர்கள் தவிர மற்றவர்கள் அனைவரும் கிளம்பி இருக்க, வீட்டினர் எல்லோரும் சற்றே ரிலாக்ஸ் ஆகி கதை அடித்துக் கொண்டிருந்தார்கள்...
அண்ணன், தங்கையுடன் பேசிக் கொண்டிருந்த மனோஜின் பார்வை வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் மஞ்சு பக்கம் வந்துப் போய் கொண்டிருந்தது...
அமுதாவிடம் சீரியஸாக பேசிக் கொண்டிருந்தாலும் அவளையும் அறியாமலே மஞ்சுவுமே அதை தான் அவ்வப்போது செய்துக் கொண்டிருந்தாள்...
“... நான் சென்னை வரேன்னு சொன்னப்புறமும் அத்தை அவங்க அண்ணன் வீட்டுக்கு போயிட்டு தான் வருவேன்னு கிளம்பிட்டாங்க... சராவும் கேட்டுப் பார்த்தார்... ஹுஹும்... ஒன்னும் நடக்கலை... இங்கே அம்மாவும் இல்லை, அத்தையும் இல்லை... மனோஜ் இப்போ வந்திருக்கலைனா ஒரு மாசம் கழிச்சு வந்திருப்பேன்னு நினைக்கிறேன்....” என தன் வீட்டு விஷயத்தை தோழியிடம் பகிர்ந்துக் கொண்டிருந்தாள் அமுதா.
மஞ்சுவிற்கு சரவணனின் அம்மா மீது கோபமாக வந்தது. இப்போது அமுதா சென்னை வரும் போது தன் உறவினர் வீட்டிற்கு சென்றதற்கு என்று மட்டும் இல்லை... எப்போதுமே அது என்னமோ அவர்கள் அமுதாவை எதிரியாகவே பாவித்தார்கள்... எதை செய்தாலும் அமுதாவிடம் போட்டி போட்டுக் கொண்டு தான் செய்வார்கள்...
“நீ கன்சீவாகி இருக்கிறது அவங்களுக்கு தெரியுமா???”
“இல்லை மஞ்சு... இன்னும் சொல்லலை... அவர் நேருல பார்க்கும் போது சொல்ல சொல்லி இருக்கார். என அம்மாக்கு கூட தெரியாது... தெரிஞ்சிருந்தா உடனே கிளம்பி வந்திருப்பாங்க... அதான் அவங்க கிட்டேயும் மெதுவா சொல்லலாம்னு யோசிச்சேன்...”
“இந்த குழந்தைக்கு அப்புறமாவது சரவணன் அம்மா மாறினா நல்லா இருக்கும்... சரவணனை நீ லவ் செய்றது தெரியுறதுக்கு முன்னாடி வரைக்கும் அவங்களுக்கு உன்னை பிடிச்சு தானே இருந்துச்சு... பெரியவங்களா இருந்துட்டு ஏன் இப்படி மெச்சூரிட்டி இல்லாம இருக்காங்கன்னு புரியலை...”
Manju irundha manoj forgets the surroundings
Amudho oda talk about maturity was superb
Interesting and cute update ma'am 👏👏👏👏👏 thank you.
Make or Break ----- Give and Take -> ellam related
MnM intha hurdle epadi tandranga parpom.
Last but not least, Amudha