பிறைநிலா தங்கி இருந்த ரூமை விட்டு வெளியே வந்தாள். அவளுடனே அவளுடைய பர்சனல் செக்ரட்டரியும் வந்தாள்.
பிறைநிலாவின் கண்ணுக்கு தெரியாததுப் போல காரிடாரில் இருந்த அலங்கார தூணுக்கு பின்னே நின்றிருந்த விஜயன் அவளை கண்களால் அளந்தான்.
க்ரீம் கலரில், சிவப்பு நிற பார்டர் வைத்த சேலையை கட்டி இருந்தாள் பிறைநிலா. சேலை முழுதும் அங்கொன்றும் இங்கொன்றுமாக ஓடிய சின்ன வேலைப்பாடுகள், அதை இன்னும் மிளிர செய்தது. கைகளிலும் கழுத்திலும் அந்த வேலைப் பாடுகளுக்கு மேட்ச் ஆகும் ஆனால் சிம்பிளாக தெரியும் அணிகலன்கள் அணிந்திருந்தாள்... அவற்றின் விலை அதிகமாக இருக்கும் ஆனால் பார்வைக்கு சிம்பிளாக தெரிந்தது...
அப்படி சிம்பிளாக காட்டிக் கொள்வது பிறைநிலாவிற்கு பிடிக்கும்... அது அவளிடம் அவனுக்கும் பிடித்த ஒன்று...
“நீ கான்ஃபரன்ஸ் ரூம் பக்கத்துல வெயிட் செய் தியா. நான் வரேன்” என சொல்லி தன் செக்ரட்டரியை அங்கிருந்து அனுப்பினாள் பிறைநிலா.
தியா சென்ற அதே பக்கமே மெல்ல நடந்துச் சென்றாள் பிறைநிலா. அவளின் கண்கள் மட்டும் சுற்றும் முற்றும் எதையோ தேடியது!
விஜயனின் மனதில் மலரால் வருடிய இனிய உணர்வு வந்தது... அவள் யாரைத் தேடுகிறாள் என்பது அவனுக்குத் தெரியாதா என்ன???!!!!
“ஃபுல் மார்க்ஸ் ஹனி!” என்றபடி ஒரு சின்ன தூணின் பின்னே நின்றிருந்த விஜயன் வெளியே வந்தான்.
பிறைநிலாவின் விழிகள் விஜயனை நுனி முதல் அடி வரை தழுவி சென்றது.
அதுவரை தீவிரமான யோசனையில் இருந்த அவளின் முகம் மென்மையானது... இதழ்களில் புன்னகை தோன்றியது... கண்களில் காதல் எட்டிப் பார்த்தது!
ஒவ்வொரு முறை அவனைப் பார்க்கும் போது அவளின் முகத்தில் வரும் மாற்றம் தான் அது... ஆனாலும் விஜயனால் அதை ரசிக்காமல் இருக்க முடியவில்லை...
“என் பொறுமையை ரொம்ப சோதிக்குற ஹனி...” என்றான் காதலை மறைக்காமல்...
“நீங்க இங்கே என்ன செய்றீங்க???” என்றுக் கேட்ட பிறைநிலாவின் விழிகள் இப்போதும் விஜயனை தான் ரசித்துக் கொண்டிருந்தது...
காணக் கிடைக்காத அதிசயப் பொருள் எதையோ கண்டு விட்டதுப் போன்ற அவளின் செய்கை அவனின் மனதின் கிளர்ச்சியை அதிகமாக்கியது...
பிறைநிலாவின் பார்வைக்கு பின்னால் இருக்கும் அவளின் மன உணர்வுகளை அவன் அறிய
lovely update Bindu ma'am 👏👏👏👏👏👏
Live wires connect aguradhukku munadiye adhurudhu
Thank you.
Picture perfect. I see that you are enjoying your writing. Good for you and all of us
Akila vs Pirainila, what to expect? 1000 wala or flower pot
Either way, can't wait to read.
Keep up the tempo
Ha ha akila nee nadathu
Ninga pora range-a sariya ilai
ena ma nadakuthu
ipothaiku 🤐
looking fwd to read about the neruku ner
Thanks