இங்கு இப்படியிருக்க மறுபக்கம் சென்னையின் இன்னொரு பக்கத்தில் பல வெற்றிப் படங்களுக்கு தயாரிப்பாளராக இருந்தவர், பிரபலமானவர், டிவியில் ஓடிய வைரஸ் பற்றிய செய்தியைக் கேட்டு நொந்துப் போனார்.
”இந்த வைரஸால பல பேருக்கு ஆபத்து வரும் போல இருக்கே, நான் வேற புதுப்படம் ஆரம்பிச்சி நிறைய பணத்தையும் போட்டேன், திடீர்னு ஏதாவதுன்னா சூட்டிங் நின்னுபோனா போட்ட பணம் மொத்தமா போயிடுமே” என புலம்ப அவரின் பிஏ. அவரிடம்
”சார் புதுசு புதுசா டைர்க்டர்ங்க கதையோட காத்திருக்காங்க சார் அவங்களை என்ன சார் செய்றது”
”ஆமாம் அவங்களும் பல மாசமா இங்கயே அலையறாங்க, என்ன செய்றது இப்ப”
”சார் நீங்க வேற புதுசா திறக்கப் போற ஸ்டூடியோக்கு விழா ஏற்பாடு செய்யனும்னு சொன்னீங்களே“
”ஆமாம் அது வேற இருக்கு, கடவுளே என்னடா இது, சுத்திலும் நிறைய பிரச்சனைகள் இருக்கு, எப்படி இதையெல்லாம் நான் முடிக்கறது”
”சார் என்னை தப்பா நினைக்காதீங்க, புது டைரக்டர்ங்க காத்திருக்காங்க அவங்களை இப்படியே காக்க வைச்சா பெரிய பிரச்சனையாயிடும், உங்க மேல சொசைட்டியில நல்ல மதிப்பு இருக்கு சார் அது இவங்களால போயிடப் போகுது சார்”
”இருய்யா நீ ஒண்ணு இதைப்பத்தி நான் யோசிச்சி முடிவு எடுக்கறேன், ஆமாம் எத்தனை பேர் வந்திருக்காங்க”
”எப்பவும் போல 20 பேர் வந்திருக்காங்க சார்”
”20 பேரா அதுல யாரு ரொம்ப சின்சியரா இருக்காங்கன்னு கவனிச்சியா”
”உங்க தயாரிப்பில படத்தை எடுக்கனும்னு அவனவன் தவமா கிடைக்கறான் சார், வந்திருக்கற எல்லாருமே சின்சியரா இருக்கானுங்க சார், இதிலிருந்து ஒருத்தனை நீங்கத்தான் தேடி பிடிக்கனும், அவனை வைச்சி சினிமா எடுக்கனும் சார்”
”ஆமாம் ஆனா 20 பேரும் விதவிதமா கதைகளை வைச்சிருப்பானுங்கய்யா, ஒவ்வொருத்தனோட கதையை கேட்டு முடிக்கவே நேரமாயிடும், அப்படியே கதையை கேட்டு வைச்சி வேற ஆளு வச்சி நான் படம் பண்ணா என் கதையை திருடிட்டான்னு என்மேலயே கேஸ் போட்டு ஆடுவானங்க அது பெரிய பிரச்சனையாயிடும்”
”இப்ப என்னதான் செய்யப் போறீங்க சார், புது ஸ்டூடியோ லான்ச் வேற இருக்கு”
”ஆமா எந்த நாள்ல திறக்கறோம்”
”இன்னும் 1 மாசம் சார்”
Thank you.