(Reading time: 5 - 9 minutes)
Nalla Mudivu
Nalla Mudivu

தொடர்கதை - நல்ல முடிவு - 10 - ரவை

லாவின் போன் இசைத்தது. எடுத்துப் பேசினாள். " கலா! ஒரு குட் ந்யூஸ்! நம்ம வீட்டுக்கு செட்டியார் இன்று விஜயம் செய்யப்போறார்..." " ரொம்ப சந்தோஷம்! லஞ்ச் அவருக்கு இன்று நம்ம வீட்லேன்னு சொல்லிடுங்க!" " நிச்சயமா! இன்னும் ஒரு மணி நேரத்திலே வருவோம். சரியா?"

 கலா உடனே தன் மகனை அழைத்து நிரஞ்சன் போனில் சொன்னதை மிக குதூகலத்துடன் தெரிவித்து சேகரின் முகத்தைப் பார்த்து அவனுடைய ரியாக்‌ஷனுக்கு காத்திருந்தாள்.

எதிர்பார்த்தபடி, அவனும் சந்தோஷப்பட்டான்.

  " அம்மா! அப்பாவிடம் ஒரு வசீகர சக்தி இருக்குன்னு நம்பறேன். பில்டிங் சங்கம் அவரை தலைவராகத் தேர்வு செய்திருக்காங்க, அப்பாவைவிட படித்தவங்க, வயசானவங்க இருக்கும்போது! செட்டியார் அதே போல, அப்பாவின் சொல்லுக்கு மதிப்பு தரார். பாரேன்! இப்ப செட்டியார் எவ்வளவு பெரிய செல்வந்தர்! நம்ம வீட்டுக்கு வரேங்கறாரு"

 "சரி, வீட்டை சுத்தமா வைச்சுக்கணும். நீயும் உன் தங்கையுமா அதை செய்து முடிங்க! நான் சமையலை கவனிக்கிறேன்....."

  பிற்பகல் மணி ஒன்று! வீட்டுக்குள் நுழைந்தனர், நிரஞ்சனும் செட்டியாரும்!

 செட்டியாரின் கையில் ஒரு பெரிய பை! அதில் பழங்கள்!

உள்ளே வந்ததும், கலா அவரை 'வாங்க' என வரவேற்றாள். அவள் கையில் பையை கொடுத்துவிட்டு, செட்டியார் கையெடுத்து கும்பிட்டார்.

" என்னங்க! நீங்க மூத்தவர் என்னைப் போய் கும்பிடறீங்க கையை எடுங்க!"

" அம்மா! வயசைவிட, குணம்தாம்மா முக்கியம், மனுஷனுக்கு! நிரஞ்சன் உன்னைப்பற்றி சொன்னார். அவருடைய நேர்மைக்கு நீ தான் முழுமுதல் காரணம்னு! அந்த நேர்மையைத் தாம்மா கும்பிட்டேன், உன்னையல்ல!

   அம்மா! பணம், பதவி, புகழ் எல்லாமே நேர்மைக்கு அடங்கித்தான் இருக்கணும். இல்லேன்னா, நிம்மதி சிறிதும் கிடைக்காது.

  இன்றைய உலகத்திலே லட்சத்திலே ஒருத்தர்தான் நேர்மையாக இருக்காங்க!

 அதிலே நீங்க ஒருத்தர்!"  " ஐயா! என் பேரு, கலா! என்னை நீங்க பெயர்சொல்லி கூப்பிடுங்க! மரியாதையா நீங்க, வாங்கன்னு சொல்ல வேண்டாம். நான் உங்க மகள்போல! உட்கார்ந்து பேசுங்க!

 எங்க வீட்டுக்கு நீங்க வந்திருக்கிறது, எங்களை பெருமைப் படுத்தினமாதிரி!

இதுதான் எங்க பிள்ளை சேகர்! இது மகள் பிரேமா!"

சேகரும் பிரேமாவும் செட்டியாரை கும்பிட்டனர். செட்டியார், தன் கழுத்தில் இருந்த தங்கச்

8 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.