இல்லாம விளையாடுவேன்...”
“கோச் இன்னைக்கு அந்த பிளேயர் பண்ணினது சரி இல்லை.... இதை நாம அந்த அணி பயிற்சியாளர் காதுக்கு எடுத்துட்டு போகணும்.... இதென்ன நேர்மையில்லாத ஆட்டம்...”, துளசி கோவத்துடன் கேட்டாள்...
“அடுத்து நீயா... உனக்கும் இதுதானே முதல் போட்டி அதுதான் குதிக்கற... இதெல்லாம் விளையாட்டில் சகஜம்... நாமதான் உஷாரா இருக்கணும்... நம்ம இப்போ போய் கேட்டாலும் அப்படி எந்த விஷயமும் நடக்கலைன்னு சொல்லுவாங்க... வீடியோ ஆதாரம் காமிச்சாலும் நான் மைத்தி நல்லா பௌலிங் பண்ணினான்னு சொன்னேன்... அதை அவங்க இப்படி மாத்தி சொல்றாங்கன்னு சொல்லுவாங்க... ஏன் அவங்க பயிற்சியாளரே மைத்தி கவனத்தை திசை திருப்புன்னு சொல்லி அனுப்பி இருக்கலாம்... அதனால் புகார் சொல்வதால் ஒரு நன்மையும் இல்லை.... நேர்மைக்கும், விளையாட்டுக்கும் இப்போலாம் ரொம்ப தூரம் ஆகிடுச்சு...”
“அப்போ அவங்களை அப்படியே விட சொல்றீங்களா கோச்... தப்பு செஞ்சவங்களுக்கு தண்டனை கிடையாதா...”
“கண்டிப்பா கொடுக்கணும்... நம்ம அதிரடி ஆட்டத்தால... அடுத்தடுத்த போட்டிகள்ல உங்க மொத்தத் திறமையையும் காட்டி அவங்க எழும்ப முடியாதபடி செய்ங்க... அதுதான் குறுக்கு வழில வெற்றி பெற்றவங்களுக்கு கொடுக்கற சரியான அடியா இருக்கும்....”, பயிற்சியாளர் கூற அனைவரும் தலையசைத்தார்கள்...
தலைவி இடையில் புகுந்து, ”இன்னைக்கு நிறைய பேர் மைத்தி மேல புகார் சொன்னீங்க... அவளாலதான் இந்த மேட்ச் தோத்ததா.... அது சரிதான்னாலும் ஒன்பது ஓவர் அற்புதமா போட்ட பொண்ணு ஏன் கடைசி ஓவர் அப்படி பண்ணினான்னு அவளோட பதிலை கூட கேட்காம குற்றவாளி ஆக்கீட்டீங்க... அதை இனிமே பண்ணாதீங்க... கிரிக்கெட் ஒரு குழு விளையாட்டு... இதில் விளையாடும் பதினோரு பேரும் ஒரே குழுவா இருக்கணுமே தவிர... தனித்தனி குழுவா பிரிஞ்சு இல்லை... எல்லாருக்கும் நான் சொல்ல வர்றது புரியும்ன்னு நினைக்கிறேன்... அதே மாதிரி எதிராளி உங்களை என்ன சொன்னாலும் உடனடியா என்னோட கவனத்துக்கு கொண்டு வாங்க... இன்னைக்கே மைத்தி இந்த விஷயத்தை அப்பவே சொல்லி இருந்தான்னா, நாம அம்பயர் கிட்ட சொல்லி இருக்கலாம்... இல்லன்னா மன ரீதியா அவளுக்கு தெம்பு கொடுத்திருக்கலாம்... அவ சொல்லாததால இது ரெண்டுமே பண்ண முடியாம போச்சு... அதனால இனி எந்த ஒரு சின்ன விஷயமானாலும் அதை மறைக்காம என்கிட்டையோ, இல்லை கோச் கிட்டயோ சொல்லுங்க...”, தலைவி கூற பயிற்சியாளரும் அதை ஆதரித்தார்...
“மைத்தி இப்போ உங்கப்பாக்கு எப்படி இருக்குன்னு கேட்டுத் தெரிஞ்சுக்கலாம்.... ஆனா இதுதான்
pitty mythi's innocence however captain oda kindness is much appreciated and her advise to the team
happy to see their victory
Wish you happy and prosperous Diwali to you and you family 🎉
Thank you and keep rocking 👍
Anda adrichi ah
Ila vera eduma
Lovely update jay