எனக்கொரு சினேகிதி சினேகிதி தென்றல் மாதிரி
நீ ஒரு பௌர்னமி பௌர்னமி பேசும் பைங்கிளி
சமயலறையில் பாக்கியத்துக்கு உதவி செய்து கொண்டிருந்தவள் அலுவலகம் செல்ல நேரம் ஆவதை உணர்ந்து தன்னுடைய அறையை நோக்கி சென்றாள். அவள் அறைக்கதவை திறக்கையில் ராம் கிட்டத்தட்ட அலுவலகம் செல்ல தயாராகி இருக்கவும் அவசர அவசரமாக கப்போர்டில் இருந்து கையில் கிடைத்த ஒரு சுடிதாரை எடுக்க செல்ல, அவளின் அந்த கையை அப்படியே பற்றி நிறுத்தினான் ராம்.
அவனுடைய இந்த திடீர் செயலால் ஸ்தம்பித்து போனவள் அவனையே பார்க்க, அவன் அவளின் கையை பிடித்து நேற்று அவன் வாங்கி வந்த உடையை எடுத்தவன், "இந்த ட்ரெஸ்ஸை போடு. அதுக்கு நான் மேட்சிங்கா வாங்கிட்டு வந்த ஜுவெல்ஸையும் போட்டுக்கோ" என்றவன் அங்கிருந்து நகர்ந்து கீழே செல்ல, சில நிமிடங்கள் அப்படியே நின்றவள் தன்னிலை பெற்று தன்னுடைய கையில் இருந்த உடையை பார்த்தாள்.
கீழே சென்ற ராம் செய்தித்தாளை புரட்டி கொண்டிருந்த விசாலத்தின் அருகே சென்று அமர்ந்து பேசியபடி இருந்தான் ராம். "ராம்!!!" என அவனை விளித்தபடி வந்து அவனருகே அமர்ந்தாள் நித்யா.
"ராம் கிளம்பலாமா??" என அவனின் கையில் தனது கையை கோர்த்தபடி நித்யா கேட்க, விசாலம் முகம் கோபத்தில் சிவந்தது. அனால் மறுகணமே ராமின் பதிலில் அவரின் முகத்தில் இருந்த கோபம் மறைந்து ஆச்சர்யம் உண்டானது.
"என்ன நித்யா, நீ எதுக்கு டெய்லி ஆபீஸ் வர? நீ இங்க இன்டெர்ன்ஷிப் பண்ணனும்னு தான சொன்ன? இப்படியே போனா கடைசில அட்டெண்டன்ஸ் அஃபெக்ட் ஆகும். சோ இன்னைக்கு நீ ஆபீஸ் வர வேண்டாம். இனி நீ வீக்லி ஒன்ஸ் ஆர் டிவைஸ் வந்தா போதும். போ போயி காலேஜ் கெளம்பு" என்ற ராமின் பதிலை நித்யாவும் எதிர்பார்த்திருக்கவில்லை, விசாலமும் எதிர்பார்த்திருக்கவில்லை.
"இல்லை ராம்...அது...." நித்யா முகம் சுணங்கி போனபடி எதையோ சொல்ல முயல, "நீ இப்போ சொன்னதை கேக்கலைனா வேற கம்பெனி பார்க்க வேண்டி வரும் இன்டெர்ன்ஷிப்புக்கு" எனவும் எதுவும் பேசாமல் எழுந்து பேகை எடுக்க மேலே சென்றாள் நித்யா.
ராம் பேசியதை ஆச்சர்யமாக பார்த்தபடி விசாலம் அமர்ந்திருக்க, அவனின் கவனம் அவ்வப்போது மாடிப்படியை நோக்கி சென்றது. அதை கண்ட விசாலம் அப்படி என்ன பார்க்கிறான் என புரியாமல் அவனை நோட்டம் விட்டு கொண்டிருந்தார். அவர் பார்த்து கொண்டிருக்கையிலேயே அவனின் கண்கள் பளபளக்க, அவனின் பார்வை சென்ற திசையை
M | Tu | W | Th | F |
---|---|---|---|---|
TA 🎵 MM-1-OKU 🎵 |
RTT |
MM-2-AMN |
PT |
UKEKKP 🎵 MM-1-OKU 🎵 |
UKEKKP |
UANI |
CM |
UANI |
UKAN |
RTT 🎵 UKEKKP 🎵 |
MM-2-AMN |
UKAN |
TM 🎵 UKEKKP 🎵 |
* - Change in schedule / New series
If you would like to start a series @ Chillzee, please read this article or e-mail us!
Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.
Ram and Selvi oda moments are cute n
Look forward to see what happens next..
Thank you. Happy and sparkling diwali to you and your family 🎉