(Reading time: 12 - 23 minutes)
Priyamaanavale
Priyamaanavale

எதிர்கேள்வி கேட்க, "ஐயோ நிறுத்து போதும்" என தமிழ் அவளின் மனசாட்சியை அடக்க, "என்னாச்சு தமிழ்? எதுக்கு வண்டியை நிறுத்தணும்?" என ராம் கேட்க, அப்போது தான் அவள் மனதிற்குள் பேசுவதாக நினைத்து சத்தமாக பேசியிருக்கிறாள் என புரிந்தது தமிழுக்கு.

ராமிற்கு என்ன பதில் சொல்வது என தெரியாமல் அவள் திருதிருவென விழிக்க, அவளின் அந்த அழகிய விழிகள் விரிந்ததை கண்டவனுக்கு அவளை அனைத்து கொள்ளும் ஆசை தோன்ற, காரை சட்டென நிறுத்தினான் ராம்.

அவன் காரை நிறுத்தவும் "அய்யயோ நெஜமாவே நிறுத்திட்டாரே" என அவள் மிரண்டு விழிக்க, அவளையே பார்த்தபடி அமர்ந்திருந்த ராம், "தமிழ்....எதை கேட்டாலும் இப்படி கண்ணை விரிச்சு முழிக்காத ...அதும் இந்த மாதிரி டிரைவ் பண்ணும்போது.... அப்பறம் என்னால கண்ட்ரோல் பண்ண முடியாது, ரோட்ல போறவங்களுக்கு தான் கஷ்டம் அதுக்கு அப்பறம்...." எனவும் "என்ன கண்ட்ரோல் பண்ண முடியாது???" என மீண்டும் அதே திருத்திரு விழிகளுடன் தமிழ் கேட்க, "ஹ்ம்ம்... பிரேக்கை..." என்றவன் "என் மக்கு பொண்டாட்டியே" என மனதிற்குள் சலித்து கொண்டபடி காரை கிளப்பினான்.

"மேம், மீட்டிங்க்குக்கு டைம் ஆச்சு" என கீர்த்தி வந்து சொல்ல, அவள் எடுத்த குறிப்புகளுடன் மீட்டிங் நடக்கும் அறையை நோக்கி சென்றாள் தமிழ்.

அந்த கம்பெனியின் அனைத்து மேலதிகாரிகளுக்கு அங்கே இருந்தனர்.

"லாஸ்ட் குவாட்டரோட கம்பேர் பண்ணும்போது தனிப்பட்ட ப்ரொடக்டிவிட்டி கம்மியாயிருக்கு. தினமும் நூறு டிசைன்ஸ் அப்படினு இருந்த ப்ரோடக்ஷன் இப்போ எழுபத்தி அஞ்சு வரைக்கும் வந்திருக்கு. அதுக்கு என்ன காரணம்?" ராம் கேட்கவும், "சார், போன முறை இருந்ததை விட இந்த முறை எல்லாருக்கும் இன்கிரிமெண்ட் கொடுத்துருக்கோம். அது மட்டும் இல்லாம எல்லாருக்கும் அவங்கவங்க இருக்கற இடத்துக்கே காலைலயும் ஈவினிங்கும் பிரேக் டைம்ல காபி டீ  எல்லாம் போகுது. ஆனாலும்..." மேலதிகாரி ஒருவர் யோசனையுடன் சொல்ல,

"இது இப்பொன்னு இல்லை...கடந்த ஒரு வருஷமா நம்ம கம்பெனில எம்பலோயீஸ் எண்ணிக்கை அதிகம் ஆயிருக்கு. ஆனா ப்ரொடக்டிவிட்டில பெரிய மாற்றம் இல்லை...அப்போ பேசிக்கா ஏதோ ஒரு ப்ரோப்லேம் இருக்கு. அது என்னனு யாருக்காவது தெரியுமா?" ராமின் கேள்விக்கு அனைவரும் அவர்களுக்கும் பேசி கொண்டனர்.

"எக்ஸ்கியூஸ் மீ, நான் சொல்லலாமா?" தமிழின் குரலில் அவள் புறம் திரும்பியவன், "எஸ் " என்றான்.

"நம்ம கம்பெனில ஒர்க் பண்றவங்கள்ல மோர் தென் போர்ட்டி பெர்சென்ட் லேடிஸ். அதுல, நெய்ன்ட்டி பெர்சென்ட் மேரீட் அண்ட் குழந்தைகள் இருக்கறவங்க. குழந்தைங்க ஸ்கூல்

11 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.