(Reading time: 8 - 16 minutes)
Unakkaagave uyir vazhgiren
Unakkaagave uyir vazhgiren

தொடர்கதை - உனக்காகவே உயிர் வாழ்கிறேன்... - 17 - ஜெபமலர்

நேரம் சென்று கொண்டே இருப்பதை உணர்ந்த தாத்தா குயிலியின் வருகையை எதிர்பார்த்து அமர்ந்து இருந்தார். அவர் அமர்ந்து இருந்தது ஒருபக்கம் எனில் அவரது தலையோ அடிக்கடி திரும்பித் திரும்பி குயிலி சென்ற திசையையே பார்த்துக் கொண்டு இருந்தது.

மலைக்கோயிலின் அடிப்பகுதியை அடைந்தவள் மீண்டும் படியேறி கோயிலை நோக்கி வந்து கொண்டிருந்தாள்.

ஆசீர்வாதத்தின் மனம் முழுவதும் அச்சம் நிரம்பியிருக்க, இறைவா எப்படியாவது குயிலியை சீக்கிரம் அழைத்துவா... அவளுக்கு எந்த வித ஆபத்தும் நேர்ந்து இருக்ககூடாது.. நல்ல காரியத்திற்காக சென்று இருக்கிறாள். அவளுக்கு துணையாக நீரே இருக்க வேண்டும் என்று கண் மூடி வேண்டிக் கொண்டு இருந்தார்.

படிகளில் ஏறி வரும் போது தொலைவிலேயே ஆசீர்வாதம் தாத்தாவை குயிலி பார்த்து விட்டாள். அவர் தனக்காக காத்து இருக்கிறார் என்பது புரிய இரண்டு இரண்டு படிக்கட்டாக தாண்டி மேலே வந்தாள்.

அவள் உடம்பில் ஏற்பட்ட காயங்களால் வலியோ அசதியோ சோர்வோ இல்லை. எல்லாம் அந்த ஒரு நொடியில் பறந்து போய்விட்டது. தனக்காக ஒரு ஜீவன் காத்து இருக்கிறது என்று தெரிந்ததும் ஒரு புதுவித உற்சாகம் அவளைத் தொற்றிக் கொண்டது. அவளது நடையில் ஒருவித துள்ளலுடன் கண்களில் ஒரு வித பூரிப்புடன் தாத்தாவை நோக்கி முன்னேற அவள் கண் முன்னே வந்து சென்றது அவனது புறக்கணிப்பும் பாராமுகமும். ஆம்... ராகவ் வின் முகம் வந்து இம்சித்தது. ஆனால் அதுவும் ஒரு வித சுகமாகவே தெரிந்தது குயிலிக்கு‌.

மனதை இலகுவாக்க சோர்வை நீக்க என பல பல தியாகங்களை செய்து வெற்றி பெற்ற குயிலியால் ராகவ்வின் நினைவுகளை மறப்பது மட்டும் அவ்வளவு எளிதாக இருக்கவில்லை.

ஒரு வருடம், ஒரே ஒரு வருடம் ஒரே பள்ளியில் படிக்கும் போது பார்த்து பேசிக்கொண்டது மட்டும்தான். அந்த சமயம் அவர்களின் பேச்சு ஆழமாக ஆத்மார்த்தமாக நெருக்கமாக இருந்ததில்லை. ஆனால் அவன் காட்டிய பாசம் மட்டும் பெண்னவளுக்கு வாழ்க்கையில் நிறைவை தந்தது. அந்த நினைவில்தான் நான்கு வருடம் அவனுக்காக காத்து இருந்தாள். அவனை நான்கு வருடமாக பார்க்கவில்லை தொடர்பு கொள்ளவில்லை என்றாலும் அவன் வருவான் என்று ஒரு நம்பிக்கையிலேயே வாழ்ந்து வந்தாள்.

அந்தப் பிரிவு அவளுக்குள் ஒரு புதுவித உணர்வுகளை ஏற்படுத்தி இருக்க அதோடு உடலில் ஏற்பட்ட ஹார்மோன் மாற்றங்களும் இணைந்துகொள்ள அவனுக்காக காத்திருப்பதே வாழ்க்கை என்ற எண்ணத்தோடு காத்திருந்தாள்.

அவளது எதிர்பார்ப்பையும் ஏக்கத்தையும் புரிந்தவனாக அவனும் அவள் முன்னே வந்து

15 comments

• Thank you for the wishes ma'am .

[quote name="Jeba..."]12std finished panum pothu 17 age complete agidum la... So ipo epadium 18 irukum so big girl Jo...[/quote]
Oh yeah...I just got fixed to the initial number...that she was in class six plus 4yrs our grand master went to pursue his bachelor's :P so I assumed her to be class 10 pass out 😷

Good night and sweet dreams.
• Thank you dear Jo... 12std finished panum pothu 17 age complete agidum la... So ipo epadium 18 irukum so big girl Jo... Neenga sonathukaga mission work la irunthu kuyilia releaf panidalam... Thank you so much Jo.. Happy Diwali to u & ur family
• Puppy love 😍😍 thatha, ninga avangala meet pana mudiyumandradhu doubt than so ninga unga safety parthukonga...enala ellam vandhu kapatha mudiyadhu 😉😉 :P but ramu enga than ponaru???
Guess kuyili has to go long way to accomplish the mission 😱 hope as she expects Karthik stays besides her to reach the mission...
pavam oru 16yrs girl kk indha mission rombha big ji :eek:
interesting update jeba ma'am 👏 👏👏👏👏👏👏👏 thank you and keep rocking.
Happy and sparkling diwali to you and your family 🎉
• ஹீரோ இப்படி இருப்பது சரியில்லை தான்.. புரிய வைத்து விடுவோம் சீக்கிரம்.. thank you so much sir... :thnkx:
• ஏற்கனவே கதைப்படி ஹீரோ ஒரு பேக்கு. இதுல அவனுக்கு ஆபத்து வேறயா. அவன் கொலை செய்யப்பட்டால் கூட பிரச்சினை இல்லை.

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.