கோவை
”அப்போ பாட்டி உங்க பேரன் வசீயை கட்டி வைக்கனும்னுதான் என்னை இந்த ஊருக்கு கூட்டிட்டு வந்தீங்களா ஏதோ கல்யாணத்தை நிறுத்த வந்தீங்கன்னு நினைச்சேன்” என மானஸா கோபமாக உமையாள் பாட்டியிடம் கேட்க அதற்கு அவரும்
”இல்ல மானஸா மாதவன் என்னை தஞ்சையில பார்த்தப்ப அவன் எல்லாத்தையும் என்கிட்ட சொல்லிட்டான் இந்த வீட்ல என்ன நடக்குது யார் யார் என்ன செய்றாங்கன்னு”
”அப்படியா மாதவனுக்கு தெரிஞ்ச விசயம் ஏன் வசீக்கு தெரியல”
”நான் கண்ணிருந்தும் குருடனாயிட்டேன் மானஸா எல்லாரையும் நான் நல்லவங்களா பார்த்தேன் இந்த வீட்ல எல்லாமே சரியா நடக்குதுன்னு நினைச்சேன். ஆனா இப்பதானே தெரியுது எல்லாமே தப்பாயிருக்குன்னு” என்றான் வசிகரன் வருத்தமுடன்
”மாதவன் சொன்னது இருக்கட்டும் அப்ப இந்த கல்யாணத்தை நிறுத்த நீங்க வரலியா பாட்டி” என மானஸா கேட்க அதற்கு அவரோ
”இல்லம்மா நான் எதுக்கு கல்யாணத்தை நிறுத்த போறேன். இங்க வந்து மாதவன் கிட்ட ரூம்ல பேசினதுமே எல்லாமே புரிஞ்சிகிட்டேன் மில் நிலம் எதுவுமே என் பேரன்கள் மேல இல்லன்னும் டாக்டருக்கு படிச்சதால மாதவன் வெளிநாட்டுல போய் வேலை செய்றதாவும் காலம் முழுக்க வசீயை மில்லுலயே வைச்சி வேலைக்காரன்னு மாதிரி வேலை வாங்கனும்னு மத்தவங்க பேசறதை ஒட்டுக்கேட்டு என்கிட்ட தகவல் சொன்னான் அப்பதான் இவங்க நினைக்கிறதையும் நான் தெரிஞ்சிகிட்டேன். அதனாலதான் அவசர அவசரமா உன்னை என் பேரனுக்கு கட்டிவைச்சேன்.”
”ஆக இதெல்லாம் உங்க திட்டம் அப்படிதானே சரி, அம்மா எங்க பாட்டி”
”ஈஸ்வரியை நான் ஊருக்கு அனுப்பிட்டேன் எப்படியும் இங்க ஒரு பிரச்சனை வரும் அவள் எதுக்கு இருக்கனும் தேவையில்லாம அவளை பத்தி இவங்க பிரச்சனை பண்ணுவாங்க இங்க நிலைமை எல்லாம் சரியானதும் அவளை நான் மறுபடியும் கூப்பிட்டுக்குவேன்”
”ஓ பாட்டி சூப்பர் நீங்க என்னவோ நல்லது செய்றதா நினைச்சி செய்துட்டீங்களே கொஞ்சம் யோசிங்களேன் உங்களையே விஷத்தை வெச்சி கொல்ல பார்த்தாங்க என்னை மட்டும் விட்டு விடுவாங்களா என்ன, ஏன் பாட்டி என்னை குழந்தையில இருந்து வளர்த்தீங்களே உங்க மருமக கையால என்னை கொல்லத்தானா வளர்த்தீங்க”
”இல்ல மானஸா நான் உயிரோட இருக்கற வரைக்கும் உனக்கு எதுவும் ஆகவிடமாட்டேன் ” என்றான் வசீ
”நீங்களா உங்களால முடியாது வசீ இந்த வீட்ல இருக்கறவங்க செய்யற தப்பையே உங்களால