(Reading time: 12 - 23 minutes)
Priyamaanavale
Priyamaanavale

திரும்பி பார்த்தார் விசாலம்.  அடர்ந்த பவள நிற உடையில் அதற்க்கு பொருத்தமான ஒற்றை பவள கல் வைத்த ஒரு மெல்லிய சங்கிலியும் நடுவே சிறியதாக கிளிப்பில் அடக்கப்பட்ட அடர்ந்த கேசமும் தமிழ்செல்வியை ஒரு இளவரசி போல காட்ட, தோளில் கிடந்த துப்பட்டாவை சரி செய்தபடி கீழே இறங்கியவள் பார்வை ராமின் பார்வையை சந்தித்தது. அவனின் பார்வையில் அவளின் உடலில் மின்சாரம் பாய்ச்சியதை போல ஒரு உணர்வு தோன்ற பார்வையை தழைத்தபடி கீழே இறங்கியவள் நேராக விசாலத்திடம் சென்று நிற்க, ராமின் பார்வையை கண்ட விசாலம் "டேய் அவ உன் பொண்டாட்டி எங்கயும் போக மாட்டா. எதுக்கு இப்படி பார்க்கற...நேரமாச்சு பாரு கெளம்பு" என அவனின் காதில் கிசுகிசுக்க, சிரித்தபடி எழுந்தவன் "வா" என கண்ஜாடையால் தமிழை அழைத்து விட்டு செல்ல, "பாட்டி நான் கிளம்பறேன். ஈவினிங் வரும்போது ஏதாவது வாங்கிட்டு வரணும்னா கால் பண்ணுங்க" என்றவள் ராமின் பின்னால் காரை நோக்கி ஓடிஏ, கல்லூரி செல்வதற்காக பேகை எடுத்து கொண்டு கீழே இறங்கி கொண்டிருந்த நித்யாவின் பார்வையில் இதெல்லாம் பட தவறவில்லை.

இத்தனை நாள் ராமுக்கும் தமிழுக்கும் இடையே ஏதோ ஒரு இடைவெளி இருப்பதை தெளிவாக அறிந்திருந்தவளுக்கு இன்று ராமின் கண்களில் தமிழை கண்டதும் தெரிந்த அந்த மாற்றத்தை கண்டதும் "எப்படி இந்த மாற்றம் திடீரென" என குழப்பமும் கோவமும் உண்டானது. இதை வளர விடமாட்டேன் என மனதிற்குள் உறுதி எடுத்து கொண்டாள் நித்யா.

தமிழ் காரில் அமர்ந்ததும் காரை எடுத்தான் ராம். வெளியே வேடிக்கை பார்த்தபடி வந்தவளை அவ்வப்போது திரும்பி பார்த்தபடி காரை செலுத்தியவன்  "தமிழ், உனக்கு இந்த கலர் அழகா இருக்கு" எனவும் அவனின் திடீர் பாராட்டில் அவளின் கன்னங்கள் அவளை அறியாமல் சிவக்க, அவளின் வயிற்றில் பட்டாம்பூச்சிகள் பறப்பதை போல இருக்க, அவளின் கன்ன சிவப்பை கண்ட ராமின் மனம் உல்லாசமானது. மெல்லிய முறுவலுடன் அவன் காரை செலுத்த, "தேங்க்ஸ்" என மெல்லிய குரலில் கூறியவளுக்கு ராமிற்கு திடீரென என்னவாயிற்று என்று குழப்பம் உண்டானது.

"திடீரென ஏன் இப்படி எல்லாம் நடந்து கொள்கிறார்???" அவள் அவளையே கேட்டு கொள்ள, "அவர் நடப்பது இருக்கட்டும்...உனக்கு என்னாச்சு தமிழ்? ராம் இந்த டிரஸ் அழகா இருக்குனு சொன்னதும்  ஏதோ கரண்ட் ஷாக் அடிச்ச மாதிரி இருக்கு...கன்னம் எல்லாம் சிவந்து போகுது...வயிற்றுல ஏதோ பட்டாம்பூச்சி எல்லாம் பறக்குது... என்ன நடக்குது??" அவள் மனம் கேள்வி கேட்க, "எல்லாருக்குமே பாராட்டுனா பிடிக்கத்தான் செய்யும். முதல் முறையா அவர் வாயில இருந்து இப்படி ஒரு பாராட்டு வந்துருக்கு. அதான் வேற ஒன்னும் இல்ல" அவளுக்கு அவளே சமாதானம் சொல்ல, "அப்படியா வேற ஒன்னும் இல்லையா??" மீண்டும் அவள் மனம்

11 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.