பொழுது… அவனை நாம் பிடித்து தண்டனை வாங்கிக் கொடுத்தால்தான் குற்றங்கள் குறையும். அதுதான் நம்முடைய வேலை. நீ அதை ஒரு வழியில் செய்கிறாய். நான் என்னுடைய வழியில் செய்கிறேன்"
"ஆமாம்… ஒரு விஷயம் எனக்கு மனதில் படுகிறது. நீங்கள் உண்மையை சொல்லுங்கள். உண்மையிலேயே நீங்கள் இங்கு மாற்றல் வாங்கிக் கொண்டு வந்தீர்களா அல்லது வேறு ஏதாவது சிக்கலா?"
"அதை நான் யாரிடமும் வெளியே சொல்லவில்லை. அது எனக்கும் என்னுடைய உயர் அதிகாரிக்கு மட்டும்தான் தெரியும். இது கட்டாயமான மாற்றல். என்னை அந்த இடத்திலிருந்து மாற்றி விடும்படி என்னுடைய உயர் அதிகாரிக்கு மேலிடத்திலிருந்து அழுத்தம் தரப்பட்டு உள்ளது. அதனால் அவர் என்னிடம் கேட்டார். நானும் இதுதான் சந்தர்ப்பம் என்று தமிழ்நாட்டிற்கு மாற்றல் வாங்கிக்கொண்டு வந்து விட்டேன். என்னுடைய அதிர்ஷ்டம் நம்முடைய ஊரிலேயே வேக்கன்சி இருந்ததால் இங்கு பணிமாற்றம் செய்து விட்டனர்"
”அப்படி என்ன சிக்கல் வந்தது அண்ணா?"
" ஒரு மிலிட்டரி ஆபீஸர் கொலையை பற்றி என்னால் துப்பு துலக்க முடியவில்லை. அதாவது எனக்கு அதற்கு அதிக நேரம் தேவைப்பட்டது. ஆனால் அவர்கள் அவசரப்பட்டு எனவே என்னை அந்த இடத்திலிருந்து மாற்றிவிட்டு அவர்களுக்கு வசதியான ஒரு அதிகாரியை அங்கு கொண்டுவந்து வைக்க நினைத்தார்கள். அரசியல் செல்வாக்குடன் செய்து விட்டார்கள். அதுதான் உண்மை"
"நீங்கள் அப்படி எல்லாம் தாமதப்படுத்த மாட்டீர்களே"
"உண்மையை சொல்லப்போனால் நான் இந்த இடத்திற்கு மாற்றல் வாங்கி வந்தது அந்த கேசை முடிப்பதற்காகதான். ஏனெனில் அந்த மிலிட்டரி ஆபீசர் யாருக்கும் தெரியாமல் தமிழ்நாட்டிற்கு சென்னைக்கு வந்ததாக ஒரு ரகசிய தகவல் கிடைத்தது. ஆனால் அந்த தகவலை உறுதிப்படுத்திக் கொள்ள நான் மேற்கொண்டு விசாரணை செய்யும் பொழுது அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்றார்கள். குறிப்பிட்ட அந்த நேரத்தில் அவர் காஷ்மீரில் இருந்ததாக சொல்கிறார்கள். ஆனால் எனக்கு அவர் சென்னைக்கு வந்த தகவல் உறுதியானதாக