(Reading time: 9 - 17 minutes)
Kanavu Meippadum
Kanavu Meippadum

தொடர்கதை - கனவு மெய்ப்படும் – 22 - ஜெய்

ந்தவிதத் தடங்கலும் இல்லாமல் தொடரை வென்றது, கூடவே தொடர் நாயகி பட்டம் என்று ஏகப்பட்ட சந்தோஷங்களுடன் சென்னையை அடைந்தாள் மைத்தி...  விமான நிலையத்திற்கு துளசியின் தந்தை கண்ணனும், மைத்தியின் மாமா வேணுவும் வந்திருந்தனர்... கூடவே பத்ரியும் ...

நீண்ட நெடிய ஒரு மாதத்திற்கு பின் தன் குடும்பத்தை பார்த்த மகிழ்ச்சியில் துளசியும், மைத்தியும் தங்கள் பெட்டிகளையும் மறந்து ஓடிச் சென்று குடும்பத்தாரை அணைத்துக் கொண்டனர்...

“பிரயாணம் சௌகர்யமா இருந்துதாடா குட்டி.. ஒண்ணும் ஸ்ரமம் இல்லையே... ஏதானும் சாப்பிட்டியா...”

“ஒரு ஸ்ரமும் இல்லை மாமா...  ஏரோப்ளேன்ல சாப்பிட்டோம்...  வரும்போதாவது ரகுண்ணா பார்க்கலாம் நினைச்சேன்... இப்போவும் பார்க்க முடியலை... போனும் எடுக்கலை அண்ணா....”

“அவனுக்கு வேலை அதிகம்டி குட்டி... அதுதான் வர முடியலைன்னு சொன்னான்... துளசிம்மா நன்னா விளையாடி பெரிய பேர் வாங்கிட்டியே... ஹிந்து ஸ்போர்ட்ஸ் ஸ்டார்ல உங்க ரெண்டு பேர் பத்தித்தான் நிறைய போட்டிருந்தா... படிக்கவே பெருமையா இருந்தது...”

“தேங்க்ஸ் மாமா....  மைத்திக்காதான் என்னைவிட சூப்பரா விளையாடினா....”

“ரெண்டு பேருமே ஒருத்தருக்கு ஒருத்தர் சளைச்சவா இல்லைடி குட்டி.... அவ பௌலிங் நன்னா போட்டா... நீ பாட்டிங்ல கலக்கின...”

“அப்பா எப்படி இருக்கார் மாமா...  ஆத்துக்கு வந்தாச்சுன்னு நான் கிளம்பறதுக்கு முன்னாடி பேசறச்ச அம்மா சொன்னா... அப்பாக்கிட்டதான் பேச முடியலை... மாத்திரை போட்டுண்டு தூங்கறான்னு அம்மா சொன்னதால நானும் தொந்தரவு பண்ண வேண்டாம்ன்னு சொல்லிட்டேன்...”

“நன்னா இருக்கார்டா... உன்னோட லக்கேஜ் எல்லாம் சரியா பார்த்து எடுத்துண்டியா... எதையும் மறக்கலையே....”

“இல்லை மாமா... எல்லாம் எடுத்துண்டாச்சு... நாம கிளம்பலாம்...”

“வாங்க சார்.... நான் கார் எடுத்துட்டு வந்திருக்கேன்..... உங்களை ட்ராப் பண்ணிட்டு அப்பறம் கிளம்பறேன்...”

“உங்களுக்கு எதுக்கு ஸ்ரமம் கண்ணன் சார்... நாங்க டாக்ஸி புக் பண்ணிண்டு போய்க்கறோம்...”

“ஒரு கஷ்டமும் இல்லை... வாங்க...”, கண்ணன் சொல்ல, அனைவரும் காரில் ஏற, முதலில் மைத்தியை அவர்கள் வீட்டில் விட்டுவிட்டு தங்கள் வீட்டை நோக்கி காரை திருப்பினார் கண்ணன்...

10 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.