(Reading time: 9 - 17 minutes)
Kanavu Meippadum
Kanavu Meippadum

“கோந்தே எப்படி இருக்கடிம்மா...”, அந்த நேரத்தில் உள்நுழைந்த காமாட்சி பாட்டி கேட்க...

“பாட்டி அப்பாக்கு என்னாச்சு பாட்டி... ஏன் இப்படி படுத்துண்டு இருக்கா..  நான் வந்தது கூட தெரியலை போல இருக்கே... இன்னைக்கு நான் வரப்போறதை யாரும் அப்பாக்கிட்ட சொல்லலையா...”

“மைத்திக்குட்டி அப்பாக்கு கொஞ்சம் மோசமான அடிடா கண்ணா...  முதுகுத் தண்டுல பட்ட அடின்னால அவனால இனி நடக்கிறது கஷ்டம்ன்னு டாக்டர்ஸ் சொல்லிட்டா...  இடுப்புக்கு கீழ அவனுக்கு முழுக்க மறத்து போயிருக்கு... ஒரு உணர்ச்சியும் தெரியாது...  பயிற்சி கொடுத்து கொஞ்ச கொஞ்சமா சரிபன்ணலாம்... ஆனா அதுக்கு ரொம்ப வருஷம் ஆகும்ன்னு சொல்லிட்டா... அதுவும் இனி பழையபடி எழுந்து நடக்கறது ரொம்பவே கஷ்டம்ன்னு சொல்லிட்டா...  ஓரளவுக்கு வேணா அசைவுகள் கொடுக்க முடியும்....  முழு பலம் வராதுன்னு சொல்லிட்டா...”, காமாட்சி பாட்டி கண்கலங்கியபடி சொல்ல, மைத்தி வருகையை அறிந்து மற்றவர்களும் அங்கு வந்து சேர்ந்தார்கள்...

“ஏன் பாட்டி யாருமே நான் போன் பண்ணறச்ச இதை பத்தி சொல்லலை....  அப்பா நன்னா இருக்கான்னே சொல்லி ஏமாத்திட்டேளே...”

“இல்லைடா குட்டி... நீ முதல் மேட்ச் விளையாடும்போதே அங்க ஏதோ பெரிய கலாட்டாவாகி உன்னோட வாய்ப்பே பறிபோக இருந்தது... இதையும் சொல்லி இன்னும் உன் மனசை சஞ்சலபடுத்த வேண்டாமேன்னுதான் சொல்லலை...  அதுவும் இல்லாம உன்னால பாதில அங்க இருந்து கிளம்பி வரவும் முடியாது...    அதுதான் ரகுண்ணா நீ இங்க ஆத்துக்கு வந்து சேர்ற வரைக்கும் அத்திம்பேரோட நிலை பத்தி சொல்ல வேண்டாம்ன்னு சொல்லிட்டான்...”, பத்ரி கூற இன்னுமே அழுதபடி இருந்தாள் மைத்தி...

அனைவரும் சேர்ந்து அவளை சமாதானம் செய்ய அழுகை விசும்பலிற்கு மாறியது... கற்பகம் பாட்டி அவளுக்கு  ஆறுதலளித்து குளித்து சாப்பிட வர சொல்ல, குளித்து வந்தவள், பசிக்கவில்லை என்று கூறி தன் தந்தையின் அருகில் சென்று அமர்ந்து கொண்டாள்...

“அம்மா அப்பா எப்போம்மா முழிச்சிப்பா...”

“அப்பாக்கு வலி தெரியாம இருக்கணும்ன்னு தூக்கத்துக்கு நிறைய மருந்து கொடுத்திருக்கா மைத்தி... அதனால முக்காவாசி நேரம் தூக்கம்தான்...  இன்னும் கொஞ்ச நேரத்துல எழுந்துப்பா...  சாப்பாடு கொடுக்கற நேரம் வந்தாச்சு...”

“நீங்க ஸ்கூல் போய்ட்டா யாரும்மா அப்பாவை பார்த்துக்கறா....”

“நான் அடுத்த வாரத்துல இருந்துதாண்டி போப்போறேன்....  இனிதான் அதை பத்தி யோசிக்கணும்...”, இவர்கள் பேசிக்கொண்டிக்கும்போது கையில் பாலுடன் வந்தார் காமாட்சி

10 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.