(Reading time: 15 - 30 minutes)
Nesam nalgum nayanilan nencham
Nesam nalgum nayanilan nencham

அப்பா சொல்ல...

"அப்பாஒன்னுல்ல இரண்டு ப்ளேட். எனக்கும் வேணும்ல"

"ஹாங் அதெல்லாம் காசியண்ணன்ட்ட வாங்கிக்கோங்க. நான் என் பையனை மட்டும்தான் கவனிப்பேன்" பூரணி அலட்டி கொண்டார்.

"இந்த வீட்டுல ரெண்டாவது பையனை ரெண்டாந்தரமாக நடத்துகிறார்கள்…"

"நீ வேறநான் அவளுடைய ஒரே  ஹஸ்பெண்ட்.. என்னையே மதிக்கறதில்லை" அப்பா அலுத்துக் கொண்டார்.

அழகான இந்த குடும்பத்தை உங்களுக்கு அறிமுகம் செய்தே ஆக வேண்டும்….

ராம்குமார் ஒரு பிஸினஸ் மேன் வீட்டிற்கான வண்ண கலவைகளில் கோடி கோடியாக சம்பாதிக்கிறார். . அவருடைய மனைவி பூரணி மனத்திலும் குணத்திலும் பரிபூரணிநிறைஞ்ச மனசுகாரங்க

மித்திரனும் சைத்ரனும் அவர்களுடைய இரண்டு புத்திரர்கள். இளையவன் சைத்ரன்  குற்றவியல் வழக்கறிஞராக  இருக்கிறான். மூத்தவன் மித்திரன்  ஏஎஸ்பியாகபணியாற்றி வருகிறான். நீண்ட நாட்கள் கழித்து டெல்லியில் இருந்து வருகிறான். இருவருக்கும் திருமணம் ஆகவில்லை.

மாலை ஐந்து மணி…

வாசலில் வந்து நின்ற ஜீப்பில் இருந்து மித்ரன் இறங்கினான். ஓடிப் போய் அவனை கட்டிக் கொண்ட பூரணி கண் கலங்கினாள்.

"ஏன் செல்லம் இவ்வளவு நேரம் ஆயிடுச்சு?"

"சாரிம்மாநான் நேரா ட்யூட்டி ஜாயின் பண்ணிட்டு வரேன்.அதுதான் லேட் ஆயிடுச்சு" பூரணியை கட்டி முத்தமிட்டான்.

"போதும்வாசலேயே படம் காட்ட வேண்டாம். உள்ளே வாங்க…" சைத்ரன் சொன்னான்.

"ஹாய்ஆபிசர்எப்படி இருக்கீங்க" மித்ரன் கூவினான்.

"டேய் அண்ணாநீ இல்லாம.."

" நான் இல்லாம கஷ்டப்பட்டியா ஸோ ஸ்வீட்…"

"நாட் லைக் தட்நீ இல்லாம ஹாப்பியா இருந்தேன். இனிமே எப்படி இருப்பேன்னு சொல்ல முடியாது"

22 comments

• You are welcome Adharvjo
Mithran is adopted son..
Yes kadhal kathai... Nor only one.
And in this story i like to link our ancient cultured school of thoughts with Today world. Mostly have the mysterious informations. Well... just follow the story.
Class lam illama sharing than..

Thank you very much
• வாழ்த்துக்களுக்கும் பாராட்டுகளுக்கும் மிக்க நன்றி சிந்துஜா.
தமிழ் எனது உயிர். கதையில் முழுவதுமாக தமிழில் எழுத முடியவில்லை. ஏனெனில் இயல்பான வாழ்வியலில் ஆங்கிலமும் கலந்து விட்டது. அதனால் தலைப்பிலாவது தமிழுக்கு முக்கியத்துவம் தர முயற்சிக்கிறேன்.

தலைப்பிற்கு விளக்கம் விரிவாக அடுத்த அத்தியாயத்தில் சொல்கிறேன். அது நயனிலன் குலம் பற்றிய கதை.

சரி  நயம்+இலன் என்றால் நியாயம் செய்யாதவன்…. அப்படி ஒரு.பெயரை தலைவி தலைவனுக்கு சூட்டுகிறாள்.  ஏனாம்…? மக்களுக்கான பணியில் ஆழ்ந்து போவதால் அவன் மனைவியிடம் காட்ட வேண்டிய காதலை மறந்து விடுகிறானாம்… அதுதான் இந்த பழி. என்னுயிர் தோழி பாடல் நினைவிற்கு வருமே…

அப்புறம் இந்த கதையின் நாயகன் மித்ரன் நாயகி மயூரியிடம் சூழ்நிலையால் நயனிலனாகி பின் மனம் மாறி அன்பிற்கான நயம் செய்கிறான். அதுதான் நேசம் நல்கும் நெஞ்சம்

மீண்டும் மிக்க நன்றி சிந்துஜா.
• Hai srivi
You are welcome. Thank you very much. Please follow this story ... This story travels in two different dimensions.
• Intriguing intro ms sagambari 👏👏👏👏👏 :hatsoff: kadhal kadhai ??? Ijit 😜😍😍
For sure kutti thambi looks.like adopted son of kr and mrs ram 😁😁😁 kandipa vennai and sunabu than 😂😂 ready to join the ride with another lively and lovely family'....Anna and thambi semma jodi 👍
Ending pages was mysterious 😱curious to know what it is... class attend pana me.ready 😍 dhool kalakunga 👌 :GL:
Thank you.
• Thanks Mrs.Fayaz..
This story travels between to human life and beyond.. So some part of the story have old style tamil.
• :clap: kathai intetesting aaga irukkumendru thonuthu :-) vaazhthugal :clap: eagerly waiting 4 next epi :thnkx: & :GL:
• அன்புள்ள சாகம்பரி சகோதரிக்கு ,
நான் உங்கள் கதைகளில் தொடர்ந்து பயணித்து கொண்டு இருக்கிறேன் , மற்ற ஆசிரியர்களை காட்டிலும் தங்களின் மொழி நடையும் கதையின் அமைப்பும் மாறுபட்டு இருப்பது :clap: எனக்கு மிகவும் பிடித்த ஒன்று :thnkx: . உங்கள் கதைகளுக்கு வைக்கும் தலைப்புகளே அவற்றை பற்றி அறிய தூண்டுகின்றன :hatsoff: . எனக்கு இந்த தலைப்பிற்கான விளக்கத்தை தாருங்கள் . மேலும் தற்பொழுது புதிதாக உருவெடுக்கும் கதாசிரியர்களுக்கு உங்களின் அனுபவங்களை பகிர்ந்தால் மிகவும் நன்றாக இருக்கும் . இந்த புதிய தொடர்கதைக்கு எனது வாழ்த்துக்களும் , எனது பெஸ்ட் wishesum :GL:

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.