தப்பான ஒருவனின் பேராசையால் கதாநாயகி தன் கொள்கையின்படி வாழ முடியாமல் தவிக்கிறாள். அவளை அந்த தப்பானவனிடம் இருந்து எப்படி காப்பாற்றுகிறான் கதாநாயகன் என்பதை சொல்லும் கதை இது.
அன்பான வாசகர்களே
இக்கதையானது ஏற்கனவே சில்ஸியில் வெளியான இதற்கு பெயர்தான் காதலா என்ற கதையின் இரண்டாம் பாகமாகும், இக்கதை வெறும் பொழுது போக்கிற்காக எழுதப்பட்ட கற்பனை கதையாகும். யார் மனதையும் புண்படுத்தும் நோக்கில் இதை எழுதவில்லை இதற்கு முன் வந்த கதைகளுக்கு ஆதரவு தந்தது போல இக்கதைக்கும் ஆதரவு தருமாறு வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன் நன்றி
ஊட்டி
மலைகளின் ராணி ஊட்டி எங்கு பார்த்தாலும் பனி மேகங்களின் வரவேற்புகள் பார்ப்பவர்களின் கண்ணை மட்டும் இல்லை உள்ளத்தை கொள்ளை கொள்ளும் பேரழகி. ஊட்டி பெயரை கேட்டாலே மனதும் உடலும் குளிரும். பனிமேகங்களை தன் ஆடையாக உடுத்திக்கொண்டு மக்களை போக்குகாட்டும் குறும்பு பெண் அவள். குழந்தைகள் காதலர்கள் வயதானவர்கள் என அனைத்து வயதினருக்கும் ஊட்டி என்றால் உற்சாகம்தான்.
பள்ளி விடுமுறையோ ஹனிமூனோ உடனே அனைவர் மனதிலும் தோன்றுவது இந்த பனிகளின் அழகு நிறைந்த ஊட்டிதான். பல மாநிலங்களிலிருந்தும் மக்கள் இங்கு வந்து சென்றாலும் அவர்களின் பார்வைகளுக்கு இன்னும் அதே அழகுடன் காட்சி தருவாள். பூமிதாயின் எழில் கொஞ்சும் அழகுகளில் இவளும் ஒருத்தி ஊட்டி.
”அம்மா அங்க பாருங்க சூப்பராயிருக்குல்ல” என தீப்தி தன் தாய் வாணியிடம் கேட்டாள்.
தீப்தி பெயருக்கேற்ப ஒளியை போன்ற அழகானவள். மாடர்ன் உலகத்தில் என்றோ அடியெடுத்து வைத்தவள் நவநாகரிக யுவதிகளின் வரிசையில் இவளது இடமும் உண்டு. அவள் செய்யும் எந்த செயலிலும் புதுமை மிளிரும். பேஷன் டிசைனிங் படிப்பில் நல்ல முறையில் தேர்வு பெற்று பல பேரின் பாராட்டுக்களைப் பெற்றவள். பேஷன் உலகத்தில் புகழ் பெற்ற ஜாம்பாவான்களின் பெயர் பட்டியிலில் தன் பெயரையும் இணைக்க போராடும் அழகி. இன்று தன்னை ரசிக்காமல் இந்த பனி மேகங்களை ரசிக்கிறாள்.
”ஆமா சூப்பராதான்யிருக்கு” என்றாள் வாணி.
தீப்தி போன்ற ஒளிரும் அழகை பெற்றெடுத்தவள் அவளின் அடக்கமான அழகான அம்மா