(Reading time: 9 - 18 minutes)
Nalla Mudivu
Nalla Mudivu

தொடர்கதை - நல்ல முடிவு - 12 - ரவை

றுநாள் காலை எழுந்ததுமே நிரஞ்சனின் போன் சிணுங்கி அவரை அழைத்தது!

" செட்டியார் பேசறேன்! தூங்கறவனை எழுப்பிட்டேனா மன்னிச்சுக்க! அவசரமா ஒரு விஷயம் சொல்லணும்னு கூப்பிட்டேன்....."

" சொல்லுங்க, செட்டியார்!"

"இனிமேல் நான் அங்கே பல முறை வந்துபோகவேண்டிய அவசியம் இருக்கிறதனாலே, எனக்கு தங்க வசதியா ஒரு வீடு வேணும். என்னுடைய எண்ணம், அந்த வீட்டிலேயே உங்க குடும்பமும் தங்கினா, நான் அங்கில்லாத நேரத்திலே, நீங்க என் கடை வேலைகளை கவனிக்கவும் கட்டிட வேலைகளை மேற் பார்வையிடவும் சௌகரிய மாக இருக்கும். அதனாலே, த்ரீ பெட் ரூம் தனிவீடா, கட்டி முடிந்ததா, புதுசோ, பழசோ விலைக்கு வாங்கிடுங்க! என்ன விலை யானாலும், பரவாயில்லை. இதை மூணு வாரத்துக்குள் முடிச்சுட்டீங்கன்னா, உடனே நீங்க அந்த வீட்டுக்கு போய் இருங்க! எனக்கு அப்பப்போ தங்க, ஒரு ரூம் ஒதுக்கிட்டு ரெண்டு ரூம் நீங்க குடும்பத் தோட இருந்துக்குங்க! விலைக்கு கிடைக்கலேன்னா லீசுக்கு கிடைச்சாலும் புக் பண்ணிடுங்க! அதுவும் இல்லேன்னா, வாடகைக்கு கிடைத்தால், என்ன வாடகையானாலும் புக் பண்ணுங்க! கூடுமான வரையிலும் அந்த வீடு நம்ம கட்டிடத்துக்கு அருகிலே இருக்கட்டும். நிரஞ்சன்! நீங்க இப்ப உங்க ஆபீஸிலே என்ன சம்பளம் தராங்களோ, அதைவிட அதிகமா சம்பளம் நான் தரேன். அறுபது வயசுலே ரிடையர்மெண்ட் அது இது எல்லாம் கிடையாது. மூச்சு உள்ளவரை சம்பளம் உண்டு. உடனடியா உங்க ஆபீஸ் உத்தியோகத்தை ராஜினாமா செய்தாலும், சந்தோஷம்! சரியா?"

" செட்டியார்! ராத்திரி நல்லா தூங்கினீங்களோ? நீங்க வேகவேகமா சொல்றதைப் பார்த்தா, ராத்திரி முழுதும் இதைப்பற்றியே நினைச்சு, காலையிலே முதல் வேலையா எனக்கு போன் செய்யறீங்கன்னு நம்பறேன். செட்டியார்! என்மேலே நீங்க இத்தனை நம்பிக்கை வச்சி அன்போட நடத்தறீங்களே, எங்க குடும்பமே உங்களுக்கு கடமைப்பட்டிருக்கு! எனக்காகத்தான், இந்த வீடு வாங்க தீர்மானம் பண்ணி யிருக்கீங்கன்னு தெளிவா புரியுது. உங்களை விட்டு நானோ என் குடும்பமோ இனி எங்கும் போகமாட்டோம். நீங்களும் உங்க மனைவியும் நிம்மதியா இருங்க! எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியலே, செட்டியார்! நீங்க எங்களுக்கு கடவுளாகத்தான் தெரியறீங்க! இப்படி பரிந்து புரிந்து அன்பை அள்ளி அள்ளி தர ஆண்டவனாலேதான் முடியும் கலாவிடம் இதை சொன்னா அவள் கண்ணீரே விடுவாள். எங்கமீது இவ்வளவு அன்பு காட்டற ஒருத்தரை எங்க வாழ்க்கையிலே இப்பத்தான் பார்க்கிறோம்........"

" எனக்கு குளிருது! என்னை ரொம்ப புகழாதீங்க! நானும் என் மனைவியும் எந்த அளவு

3 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.