“சூப்பர் குட் எலக்ட்ரானிக்ஸ் கம்பெனியோட எம்.டி சந்திரமௌலி இங்கே மதியூருக்கு வரக் காரணம் என்ன??” – தென்றல்வாணன்
இன்ஸ்பெக்டரின் எதிரே அமர்ந்திருந்த ப்ரியம்வதா ஆடிப் போயிருப்பது அவளைப் பார்த்தாலே தெரிந்தது. தென்றல்வாணனின் கேள்விக்கு தெரியாது என்று தலையை மட்டும் ஆட்டினாள்.
“நீங்க திருவிழால இருந்தீங்கன்னு சக்தி சொன்னாங்க” – தேன்
ப்ரியம்வதா இப்போது ஆம் என்று தலையை மட்டும் ஆட்டினாள்.
“உங்க அம்மா, அண்ணன் இரண்டுப் பேரும் உங்க கூட இருந்தாங்களா?”
“ஆமா இன்ஸ்பெக்டர்” – ப்ரியம்வதாவின் குரல் வித்தியாசமாக ஒலித்தது.
“வினாயக்கும் உங்க கூட திருவிழாக்கு வந்தாரா?” – தேன்
ப்ரியம்வதா இந்தக் கேள்விக்காக தான் கலவரத்துடன் காத்துக் கொண்டு இருந்தாள். பொய் சொல்லலாமா என்று யோசித்தாள். அம்மாவும், ராகுலும் வினாயக் வரவில்லை என்று உண்மையை சொல்லி விட்டால் புதுக் கேள்விகள், சந்தேகங்கள் வரும். உண்மையை சொல்வது தான் நல்லது.
“இல்லை இன்ஸ்பெக்டர் சார்”
ரகசியம் சொல்வதுப் போல பதில் சொன்னவளை ஆராய்வதுப் போல கூர்மையாக நோக்கினான் தென்றல்வாணன்.
அவனைப் போலவே ப்ரியம்வதாவிற்கும் வினாயக் மேல் தான் சந்தேகம் என்பது அவள் பதில் சொன்ன விதத்திலேயே அவனுக்கு புரிந்தது. ஆனாலும் அதை ஏற்றுக் கொள்ள மறுக்கிறாள். அது எதனாலாக இருக்கும் என்று அவனால் ஊகிக்க முடிந்தது. படித்த பெண்கள் கூட ஏன் தவறான முடிவுகளை எடுக்கிறார்கள்? அலைமோதிய எரிச்சலை மறைக்க தேன் எந்த முயற்சியும் செய்யவில்லை.
“அவர் உங்க ஃபிரென்ட் தான? ஏன் வரலை? எங்கே போனாரு?”
“அவரும் வரதா இருந்துது சார். கிளம்புற டைம்ல சின்ன சண்டை - - -“
“சண்டையா?”
சில மணி நேரங்களுக்கு முன் நடந்தது மீண்டும் ப்ரியம்வதாவின் கண் முன் வந்தது.
வினாயக்கை வற்புறுத்தி தன்னுடன் பொங்கல் திருவிழாவிற்கு வர சொல்லி இருந்தாள் ப்ரியம்வதா. வேலை இருக்கிறது என்று முதலில் மறுத்தவன் இறுதியாக அவளுக்காக வருகிறேன் என்று சம்மதித்திருந்தான்.
வினாயக்குடன் போவதற்காகவே மற்ற நேரங்களை விட கூடுதல் அக்கறை எடுத்து புடவை தேர்வு செய்து அணிந்துக் கொண்டாள் ப்ரியம்வதா. கலைவாணி பொங்கலுக்காக அவளுக்கு
Thank you.