(Reading time: 9 - 18 minutes)
Nalla Mudivu
Nalla Mudivu

" எங்க ஓனர்கள் திடீர்னு வந்து உடனடியா பிளாட்டை காலி பண்ணச்சொல்றாங்க நாங்க எங்கே போகமுடியும்? நினைத்தவுடன், வேற இடம் வாடகைக்கு கிடைக்காதே! அதனாலே, குறைந்தது, மூணு மாசம் டயம் வாங்கித் தந்தாங்க!"

" அது ஒண்ணும் பிரச்னையே இல்லே! நீங்களே கேட்டாலே தருவாங்களே, நியாயமானது தானே, கேட்கறீங்க!"

" அவங்களுக்கு உடனடியா ஒரு மாசத்திலே நாங்க காலி செய்தா, பெரிய தொகை கிடைக்கும் போலிருக்கு, அதை எங்களுடம் நேரடியா சொல்லலே, எங்களுக்கு காதுல விழுந்தது..."

" ஓ! புரியுது! இதிலே நான் என்ன செய்யமுடியும்? உங்களுக்கு மூணுமாசம் டயம் கொடுக்கச் சொன்னால் கிடைக்கவேண்டிய பெரிய தொகையை நீ தரியான்னு கேட்பாங்களே?"

" தலைவரே! அந்தப் பெரிய தொகை எவ்வளவுன்னு நீங்க சொல்லமுடியுமா?"

" சொல்லக்கூடாதே! தர்ம சங்கடமால்ல இருக்கு!"

" சரி, எங்க காதிலே விழுகிற தொகையை சொல்றோம், ஐம்பது லட்சம்! ராணுவ ரகசியங்களே லீக் ஆகும் போது, இந்த சின்ன விஷயம் லீக் ஆகாம இருக்குமா?"

" ஓ.கே. நான் செய்யக் கூடியது, ஒண்ணுதான்! நீங்க புதுசா போகிற வீட்டின் முன்பணம் ஆறுமாத வாடகை தரச்சொல்லி கேட்கிறேன். என்னைவிட, உங்களில் ஒருவரான நம்ம வக்கீல்சார் ஓனர்களிடம் பேசினாலே போதுமே.........."

"தலைவரே! ஒரு விஷயத்தை நீங்க மறந்துடாதீங்க! நீங்க இருபது ஓனர்களும் ஆளுக்கு ஒரு கோடி பார்க்கணும்னா அது நாங்க ஒத்துழைத்தால் தான் முடியும். அதனாலே இருபது ஓனருடைய பிரச்னை இது! அதை மனதில் வைத்துச் சொல்லுங்க!"

" ஓ! மிரட்டறீங்களா? சரி, எங்களுக்கு வரக்கூடிய நல்லதை கெடுப்பதனாலே உங்களுக்கு நன்மையுண்டுனு நீங்க நினைத்தால், நான் விலகிக்கிறேன்......"

"தலைவரே! கோபமா? பேசி தீர்த்தால், உங்களுக்கும் எங்களுக்கும் சேர்த்து நன்மை கிடைக்கும்......"

" அப்ப நான் செய்ய வேண்டியது என்ன?"

" நாங்க காலி பண்ணினால் ஓனருக்கு கிடைக்கிற ஐம்பது லட்சத்திலே, பத்து லட்சம் ரூபாயை குடியிருப்பவருக்கு தரச் சொல்லுங்க! பிரச்னை சுமுகமா தீர்ந்து ஒரேமாத காலத்திலே, பில்டிங் காலி யாகி நீங்க இருபது ஓனர்களும் ஆளுக்கு ஒரு கோடியும் ஊக்கத்தொகை ஐம்பது லட்சமும் கண்லே பார்த்து கையிலே வாங்கலாம்....."

       " பத்து லட்சமா?"

எங்க ஒத்துழைப்பு எத்தனை அவசியம்னு நீங்க அவங்களுக்கு விளக்கிச் சொன்னீங்கன்னா,

3 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.