(Reading time: 8 - 16 minutes)
Kaanpome ennaalum thirunaal
Kaanpome ennaalum thirunaal

அந்த வார்த்தைகள் காவியாவின் ரத்த அணுக்களுக்கு கோபத்தை உண்டாக்கி விட, “சரிம்மா...நீ என்னமோ பண்ணு...இப்ப என்னை வேலை செய்ய விடு” என்று சொல்லி விட்டு கடுப்போடு கம்ப்யூட்டர் மானிட்டருக்குள் பார்வையைப் பதித்தாள் காவ்யா.  ஆனாலும் அடிமனதிற்குள் ஒரு அச்சம் இருக்கவே செய்தது.  “ஒருவேளை இந்தப் பரிமளா, உண்மையிலேயெ ரவீந்தருக்கு உம்மா கொடுத்திடுவாளோ?”

இருபது நிமிடங்களுக்குப் பிறகு, கையில் பொள்ளாச்சி பிராஞ்ச் பற்றிய விபரங்கள் அடங்கிய பேப்பருடன் எழுந்தாள் காவ்யா.  “எங்கேடி?...மறுபடியும் மேனேஜர் ரூமுக்கா?” பரிமளம் வழி மறித்தாள்.

“இல்லை...மார்க்கெட்டிங் செக்‌ஷனுக்கு” சலிப்போடு சொன்னாள் காவ்யா.

“ஓ...அந்த ரவீந்தருக்கு டீடெய்ல்ஸ் குடுக்கவா?” என்று கேட்டு விட்டு, “ஏய்...ஏய்...நானும் வர்றேண்டி...நானும் வர்றேண்டி!” என்று கெஞ்சலாய்க் கேட்டாள் பரிமளா.  அந்த விநாடியில் அவள் கண்களில் ஆசை...ஆர்வம்...காதல்...காமம்...எல்லாம் வழிந்தன.

“ஆத்தாடி...இந்த ஆபீஸ்ல எல்லாப்பக்கமும் காமிரா இருக்கு!...நாம ரெண்டு பேரும் போய் அங்க நின்னுட்டிருந்தா மேனேஜர் அதை காமிராவுல பார்த்திட்டுக் கத்துவார்!...அதனால....நான் மட்டும் போயிட்டு வர்றேன்...அதான்  ரெக்கார்ட் ரூம்ல மீட் பண்ணி...உம்மா குடுக்கப் போறேன்!னு சொன்னியல்ல?...அங்கியே வெச்சு மீட் பண்ணிக்கோ!”  மேற்கொண்டு பரிமளத்தைப் பேச விடாமல் நடந்தாள் காவ்யா. வயிற்றெரிச்சலோடு அவளைப் பார்த்தாள் பரிமளம்.

ரவீந்தர், காவ்யாவின் முகத்தைக் கூடப் பார்க்காமல், அந்தப் பேப்பரையே கூர்ந்து பார்த்தபடி அதை வாங்கினான். பிறகு அதை வேக வேகமாய் வாசித்து விட்டு, நிதானமாய்த் தலையைத் தூக்கி, அவளைப் பார்த்து, “ஓ.கே...மேடம்!...இது போதும்!...தேங்க்ஸ்” என்று சொல்லி விட்டு அடுத்த விநாடியே மானிட்டருக்குள் மூழ்கினான்.  எதிரே ஒரு அழகு ஓவியம் நின்று கொண்டிருப்பதை அவன் ஒரு பொருட்டாகவே எண்ணவில்லை. காவ்யாவிற்கு அது ஒரு பெருத்த அவமானமாகவே இருந்தது.

இன்னதென்று தெரியாத ஒரு ஏமாற்றம் நெஞ்சுக்குள் உருவாக, நிதானமாய் நடந்து தன் செக்‌ஷனுக்கு வந்தாள் காவ்யா. “இவன் உண்மையிலேயே இப்படித்தானா?...இல்லை வேஷம் போடுறானா?”

“என்ன காவ்யா...போன வேகத்துல வந்துட்டே? அந்த ரவீந்தர் சீட்ல இல்லையா?” பரிமளம் கேட்க,

“இருந்தான்...அவ்வளவுதான்...பேப்பரைக் குடுத்தேன்...வந்திட்டேன்!...” உள்ளுக்குள் வேதனை இருந்த போதிலும் அதைக் காட்டிக் கொள்ளாமல் சாதாரணமாய்ச் சொன்னாள் காவ்யா.

“அடிப் போடி...இதுவே நானாயிருந்தால்...அதுதான் சாக்குன்னு அந்த ரவீந்தர் கிட்டே கொஞ்ச

2 comments

  • Kavi seems tobe too expressive... avanga expression parthey ellarum matter guess panurangale 😁😁 but that jollu manager is too much 👊👊👊 hero transfer agitta ivanga soga geetham pada vendumo :o interesting update sir.<br />Thank you.

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.