(Reading time: 11 - 21 minutes)
Kanavu Meippadum
Kanavu Meippadum

“ரொம்ப சந்தோஷம்டி கோந்தே... ஆத்து கஷ்டம் தெரிஞ்சு உன்னோட உசிரான விளையாட்டே வேண்டாம்ன்னு முடிவெடுத்திருக்க...  ஆனா அதுக்கு அவசியமே இல்லை....”

“என்ன பாட்டி சொல்ற...  எல்லாம் கேட்டதானே....  பணத்துக்கு எங்க போறது....”

“ஹ்ம்ம்  நான் ஒரு முடிவெடுத்திருக்கேன்...  மாமா உங்களண்ட நானே பேசணும்ன்னு நினைச்சுண்டு இருந்தேன்....”, சுப்பிரமணியம் தாத்தாவிடம் கூறினார் காமாட்சி பாட்டி....

“நேக்கு அங்க மின்னாடி ஒரு சின்ன ரேழி இருக்கே அங்க ஒரு ரூம் மாதிரி போட்டுத் தருவேளா...  அப்படியே தனியா வாசக்கதவும் அதுக்கு வச்சுக் கொடுங்கோ.... நான் ஒரு கடை திறக்கலாம்ன்னு இருக்கேன்... “, பாட்டி கூற அனைவரும் அவரை ஆச்சர்யத்துடன் பார்த்தார்கள்....

“பாட்டி நீ என்ன சொல்ற.... நீ கடை ஆரம்பிக்க போறியா... ஆத்துக்கு யாரானும் வந்தாலே நீ ரூமை விட்டு வெளில வர மாட்ட... இதுல கடை வச்சா வர்றவாகிட்ட யார் வியாபாரம் பண்ண போறா....  ரெண்டாவது கடைக்கு சாமானெல்லாம் யார் போய் வாங்கிண்டு வருவா....”, மைத்தி கேட்க காமாட்சி என்ன சொல்லப் போகிறார் என்பதுபோல் அனைவரும் அவரை பார்த்தனர்....

“நீ சொல்றது வாஸ்தவம்தாண்டி கோந்தே...  ஆனா நம்மளை மீறி விஷயங்கள் நடக்கும்போது நம்மை கொஞ்சம் மாத்திக்க வேணும்... நான் ஒரு தையல் கடை திறக்கலாம்ன்னு இருக்கேன்... இதுவரைக்கும் தெரிஞ்சவாளுக்கு மட்டுமே தைச்சு கொடுத்துண்டு இருந்தேன்... இனிமே அதையே முழு அளவுல பண்ணப் போறேன்... அதே மாதிரி சமையல் காரியமும் பண்ணலாம்ன்னு இருக்கேன்...”, காமாட்சி பாட்டி சொல்ல மற்றவர்கள் அதை ஆட்சேபித்தார்கள்....

ஆனால் அவரின் முடிவில் உறுதியாக இருந்தார் காமாட்சி....  மற்றவர்களை தன் பேச்சால் மடக்கி தன் முடிவிற்கு ஒத்துக்கொள்ள வைத்தார்....

அதன்படியே சிறிய தையல் கடை அங்கே தொடங்கப்பட்டது....  ஏற்கனவே பாட்டியின் கை வண்ணத்தில் நம்பிக்கை இருந்ததால் நிறைய ஆர்டர்கள் வந்தன....

சுப்ரமணியத்தின் மொத்த குடும்பமுமே சியாமளாவின் பின் நின்றது....  காமாட்சி பாட்டி வேலையாக இருக்கும் சமயங்களில் யாரேனும் ஒருவர் அனந்துவை பார்த்துக்கொள்வர்.... தையல் வேலை தவிர கற்பகம் பாட்டியும், காமாட்சி பாட்டியும் நிறைய வீடுகளுக்கு சமையல் வேலைக்கு சென்றனர்...   சுப்ரமணியமும் தனிப்பட்ட முறையில் நிறைய உணவகங்களுக்கு பட்சண ஆர்டர்கள் எடுத்து செய்ய ஆரம்பித்தார்... இப்படியாக சியாமளாவின் பணத்தேவையை ஓரளவு அனைவரும் சேர்ந்து பகிர்ந்து கொண்டனர்....

மைத்தியும் தன் கனவுப் பாதையில் எந்த விதத் தடங்கலுமின்றி வீறு நடை போட்டாள்.....

தொடரும்

Next episode will be published on 9th Dec. This series is updated weekly on Wednesday mornings.

Go to Kanavu Meippadum story main page

The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. All the copyright content at chillzee.in are protected by national and international laws & regulations. We are against plagiarism! If you find our site's content copied in any other website or being broadcasted in audio / video format, we request you to let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it..
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.

11 comments

• [quote name="SriJayanthi"] may be will compensate with a short comedy story later...[/quote] :dance: willbe waiting natamai 😍😍 of course this was vera level than ma'am 👌
Good night 😃
• Thanks for your comments AdharvJo... You are my energy booster.... Actually initially thought of writing my childhood comedy memories.... since im from a joint family... Plus the 83 is the place where i spent my vacations.... My paatti house... but this story took me vera level... what to do... may be will compensate with a short comedy story later...
• Kuraigala?? Appadi endral :Q: I guess my standard commentary for the.entire series would have been "lively and realistic" :yes: Awesome and inspiring series Jayanthi ma'am :hatsoff: 👏👏👏👏 true love can make anything possible nu prove panitinga....
family eppadi ottrumaiya irukanumnu unarvu purvamaga kati.
irukinga, parents oda duties, at the same time.kids eppadi.irukanumnu series la vara ragu, kamesh badri mythri thulasi kanbichitanga :hatsoff:
The elderly group has proved that age is never an.obstacle :hatsoff:
So very elegant and heart touching :hatsoff:

I only missed to.feel.the.flavour.of your humour :sad:
Good luck for the finale.
Thank you.
• Arumai sis. Unmaiyile nalla irukku motivating a. Ethaniyo family munneri irukka karanam appalam .vadam oorugai than .. unmai than . Our family is also one such
• ஒரு குடும்பக் கதையை இதைவிட சிறப்பாக சொல்லமுடியாது! இரண்டாவதாக, பெண் குழந்தை விளையாட்டுத்துறை திறமையை வளர்ப்பதில் உள்ள கஷ்டங்களை அழகாகவும் அழுத்தமாகவும் சொல்லப்பட்டிருக்கிறது! ஜெய் ஜெயித்துவிட்டார்!

Leave your comment

In reply to Some User

Popular Reads

Recent Updates

Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.