தொடர்கதை - நேசம் நல்கும் நயனிலன் நெஞ்சம் - 03 - சாகம்பரி குமார்
மறுநாள் காலை… ராம்குமார் தொழிற்சாலைக்கு கிளம்பினார். அவருடன் சைத்ரன் சேர்ந்து கொண்டான்.
"டாட்… போலீஸ்கார் நம்மகூட வரதா சொன்னாரே… எங்கே காணோம்?"
"உங்கண்ணன் வர்றானா இல்லையானு நீ கேட்டு வச்சிருக்கனும்.. எங்கிட்ட கேட்கற?. " அவர் சொல்லும்போதே..
"ஓ… நோ ஃபைட்… நான் வந்திட்டேன்" என்று மித்ரனும் ஓடி வந்தான்.
"பட்… நான் ஜீப்ல வர்றேன். "என்று.சொல்லி ஜீப்பில் ஏறினான்.
"ஹா… அண்ணன் ஜீப்ல வர்றான் டாட்… ஏஎஸ்பி விஸிட் வந்தார்னு இன்னிக்கு முழுக்க பெருமை அடிச்சக்கலாம்"
"அதுல என்ன பெருமைப்பா… உன்னுடைய லாயர் ஆஃபீஸிற்கு உங்கண்ணனை ஊர்வலம் கூட்டிட்டு போயேன்." என்றபடி காரில் ஏறினார்.
"ஏம்பா… என்னை மாட்டி விடறீங்க" என்றபடி சைத்ரன் காரை ஓட்ட ஆரம்பித்தான்.
'வானவில்' வாசலில் கார் நின்றபின்தான் ஜீப் வந்தது. ராம்குமாரை பார்க்கவும் அலுவலர்கள் வணக்கம் வைத்தனர்.
"வெல்கம் மித்து… அப்பாவோட ராஜ்யம் இதுதான்.." என்றார் ராம்குமார்.
"வீட்டை அம்மாவுக்கு தாரை வார்த்துட்டாராம்… அதனால் அங்கே சைலண்ட் மோட்தான். இங்கே முசுடுனு பேர் வாங்கியிருக்கார்.." சைத்ரன் விளக்கினான்.
"அப்படியா டாட்.." மித்ரன் கேட்டான்.
"என்னப்பா செய்றது. பத்து வருஷத்திற்கு முன்னாடி மும்பையிலிருந்து வந்தபோது வடகத்திகாரன்னு வொர்க்கர்ஸ்லாம் கண்ணுல விரலை விட்டு ஆட்டினாங்க… கொஞ்சம் குரலெடுத்து பேசவும்தான் சரியான ட்ராக்ல கம்பெனி மூவ் ஆச்சு…"
"நீங்க சொல்றதும் சரிதான் டாட். ஆனால் நான் பொறந்ததே இந்த ஊர்தானே… அப்புறம் நீங்க எப்படி வடநாட்டுகாரர் ஆவீங்க."
"கரெக்ட்… நானும் இந்த ஊர்காரன்தான். அது நமக்குதானே தெரியும்."
அவர்கள் பேசிக்கொண்டே நடந்தனர். அப்போது யாரோ சண்டையிடும் குரல் கேட்டது.