(Reading time: 9 - 18 minutes)
Nesam nalgum nayanilan nencham
Nesam nalgum nayanilan nencham

பாருங்க.." ஹைந்தவி சொன்னாள்.

"அப்படியா… " என்றவர் அதை வாங்கி ப்ரெஸால் அங்கிருந்த பலகையில் கோடு போட்டார். இரண்டும் ஒரு மாதிரிதான் இருந்தன.

"ரெண்டும் ஒரே ஷேட்தான" அவர் சொல்ல மயூரி முன் வந்தாள்.

"இல்லை சார்இரண்டாவது கோட்டில் டின்ட் அதிகமாக இருக்கிறது.. அதனால இன்னும் லைட் ஷேட் ஆயிடுச்சு"என்றாள்.

டின்ட் என்பது பெயின்டின் நிறத்தை வெளிர வைக்கும் கலவை. அதை சேர்க்கும் அளவை பொறுத்து அந்த நிறத்தின்  பல்வேறு ஷேட்கள் கிடைக்கும். இவ்வளவு தெளிவாக எப்படி சொல்கிறாள்? .ராம்குமார் அவளை குழப்பமாக பார்த்தார்

"இப்படித்தான் சொல்றாங்க சார்.." விற்பனையாளர் புலம்பினார்.

மீண்டும் இரண்டு பாக்ஸையும் வாங்கி பார்த்தார். இரண்டு வேறு வேறு தேதியில் தயாரிக்கப்பட்டவை. அந்த பெண் சொல்வது போல இருக்கலாமோஆனால் அவரால் வித்தியாசத்தை கண்டுபிடிக்க முடியவில்லை.

"லெட்ஸ் செக் இட் அப்வேல்ராஜன்இவங்க என்னுடைய கேபினுக்கு வரட்டும். நீங்க ப்ளான்ட் மேனஜரை ப்ராடக்ட் சார்ட்டோட வர சொல்லுங்க."என்று கிளம்பினார்.

"ம்.. உன்னுடைய பெயர்ஹைந்தவி.. அந்த பொண்ணுக்கு பதிலா நீ ஏம்மா சண்டை போடற" அவர்களுடன் பேசிக் கொண்டே நடந்தார்.

"அவள் எப்போதும் பேசவே மாட்டாள் சார்இந்த விஷயத்துல அவளுக்கு ரொம்ப நஷ்டமாயிடுச்சுஅவளே புவர்தான் சார்ட்யூரா ஹோட்டல்ல டான்ஸ் ஹால்லில் வால் பெயின்டிங் செய்து கொண்டு இருந்தாள். அவளோட வொர்க் ரொம்ப ஷார்ப்பாதெளிவா இருக்கும். இப்ப அப்படி இல்ல. பேமென்ட் தர மாட்டேனு சொல்லிட்டாங்க."

அவள் விளக்க… இப்போதும் மயூரி அமைதியாகவே இருந்தாள்

"அதுசரிமயூரி சொல்ற மாதிரி உனக்கும் இரண்டுக்கும் வித்தியாசம் தெரியுதா.."

"ஆங்எனக்கு தெரியாது சார். ஆனால் அவள் ஒரு ஓவியர் அல்லவா..  அவள் சரியாகத்தான் சொல்லுவாள்."

"சினேகிதிக்காக வாய்ஸ் தர்றியாக்கும்.. இப்போ அந்த பெயிண்ட்டோட

14 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.