(Reading time: 14 - 28 minutes)
Kanavu Meippadum
Kanavu Meippadum

தொடர்கதை - கனவு மெய்ப்படும் – 25 - ஜெய்

இன்றோடு மைத்திக்கு bye bye சொல்றோம்... என்னால் முடிந்தவரை கதையைத் இழுக்காமல், போர் அடிக்காமல் கொடுத்திருக்கிறேன் என்று நினைக்கிறேன்... தவறுகள் இருந்தால் கண்டிப்பாக சுட்டிக்காட்டவும்... அடுத்த கதையில் திருத்திக் கொள்ள உதவும்... .  கிரிக்கெட் வைத்து கதை எழுத வேண்டுமென்ற என்  கனா இந்தக் கதையால்  மெய்ப்பட்டுவிட்டது...   மிக சந்தோஷமாக உணர்ந்தேன்..  அடுத்த கதை பற்றிய அறிவிப்புடன் விரைவில் வருகிறேன்.... ஒவ்வொரு அத்தியாயத்திற்கும் கமெண்ட் கொடுத்து என்னை ஊக்கப்படுத்திய உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்...

நான்கு வருடங்களுக்கு பிறகு....

“மைத்திம்மா எல்லாம் எடுத்து வச்சுண்டயா...  எதையும் விடலையே... “

“வச்சுண்டாச்சு பாட்டி.... எதையும் மறக்கலை...”

“சரி எத்தனை மணிக்கு கிளம்பணும்.... “

“ராத்திரி  பத்து    மணிக்கு கிளம்பினா போறும் பாட்டி...  போன முறை மாதிரியேதான் டெல்லி போயிட்டு அங்கேருந்து ஆஸ்திரேலிய விமானம் ஏறணும்....”, மைத்தி சொல்ல காமாட்சி பாட்டி அவளிற்கு தலை பின்னிக் கொண்டிருந்தார்...

“சரி அப்போ சாயங்காலம் கபாலி கோவிலுக்கு போயிட்டு ஒரு அர்ச்சனை பண்ணிண்டு வந்துடு.... அப்படியே முண்டகக் கண்ணி அம்மன் கோவில்லையும்....”

“சரி பாட்டி...”, மைத்தி தலையாட்டிய படி மீதி இருக்கும் பாக்கிங் வேலைகளை கவனிக்க சென்றாள்...  காமாட்சி பாட்டி  தன் கடைக்கு சென்று,  விட்ட தையல் வேலையைத் தொடர்ந்தார்....

இந்த நான்கு வருடத்தில் மைத்தி இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியில் எவரும் தொட முடியாத உச்சத்தில் இருந்தாள்...  மைத்தி பந்து வீச வருகிறாள் என்றாலே எதிரணியினர் தங்களுக்கு பாதகம் வராத சற்று பாதுகாப்பான தடுப்பு ஆட்டத்தையே ஆடுவர்...   அதேபோல்  பாட்டிங்கில் துளசி கலக்கினாள்....  இவர்கள் இருவரும் தேர்வாகாத  எந்த வெளிநாட்டு போட்டியும் இருக்காது...

மைத்தியின் விளையாட்டை போலவே அவளின் குடும்பமும் சற்று முன்னேற்றத்திற்கு சென்றது....

அனந்துவிற்கு தொடர்ந்த இரண்டு வருட சிகிச்சையில் சற்றே  முன்னேற்றம் இருந்தது....  ஓரளவு கம்பின் உதவியுடன் நடக்க ஆரம்பித்திருந்தார்...  ஓடி ஆட முடியாவிட்டாலும் தன் காரியங்களை தானே பார்க்க ஆரம்பித்திருந்தார்....  தன் இரண்டாவது மச்சினர் கிருஷ்ணனுடன் சேர்ந்து கடந்த ஒரு வருடமாக வேலைக்கும் சென்று வருகிறார்....

17 comments

• Thanks for your comments Adharv.... Yes koodi vaazhnthaal kodi nanmai... ippozhuthu amma, appa pasanga sernthu irunthaale koottu kudumbam appadinnu aayiduchu... varuthamaana vishayam... present days kids missing so many things... Short story kandipaa new year kulla thandhudaren :lol:
• :dance: dhool kalakitinga Jayanthi ma'am :hatsoff: simply soulful 👏👏👏👏👏👏 engalyum edge of the seat la udkaravachitingale ji 😁 so very lively ma'am 👌👌👌 felt like reading ones biography!!!

Mythri oda final speech was brilliant, indeed that was a remarkable message of the series to every family :hatsoff: so inspiring!!

Ovvaru aspects um semmaya eduthu sollu irukinga..... Yes family oda support and heartfelt cheer is really required to climb up the ladder and make our dream come true.... Inga vandha kutties to adults ellarume rocked :hatsoff: including kannan and coach oda extended support.👍

Dedication and hard efforts never go in vain.

Thank you for such a lovely series nattamai. Keep rocking and wish you good luck for your future endeavours.

Short story marandhudadhel. 😍😍
• Superb ending Sir ! Maithi’s speech lines were so good and would motivate many. Thanks for giving a very different and inspiring story !!
• மைத்திக்கு கிடைத்த அற்புத வெற்றி, ஜெய்க்கும்தான்! ஒரு லட்சியநோக்கோடு பீடுநடை போட்டு வெற்றிக்கோட்டை எட்டிவிட்டார், ஜெய்! மனமார்ந்த பாராட்டுக்கள்! அடுத்த தொடரும் வெற்றி பெறும், நம்புங்கள், ஜெய்!

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.