"ம்… இந்த காலத்து பசங்களை நம்பகூடாதுன்னு பாட்டி சொல்லிட்டே இருப்பாங்க. நான் கேட்டிருக்கணும்.. இப்ப பாரு காத்துல புலம்ப விட்டுட்டான்.." சத்தமாக பேசிக் கொண்டே ஹைந்தவி தன்னுடைய பல்சரை ஓட்டினாள்.
"யாரை சொல்றேப்பா?" மயூரி கேட்டாள்.
"ம்… அந்த சைத்ரனைதான்…"
"அங்கே சைத்ருனு சொன்ன"
"சொன்னேனா… அந்த அளவிற்கு எனக்கு லூசு பிடிச்சு போயிருக்கு. பப்ளிக்ல பெட்நேம் சொல்லி கூப்புடற அளவிற்கு களிமண் மண்டையா இருந்திருக்கேன். ஆனால் அவன் உஷாரு…! என்னை தெரிஞ்சவங்கனு சொல்லிட்டான்."
"அப்படியா சங்கதி… ஆனால் ஹைடி… அப்பாவுக்கு முன்னாடி அவன் எப்படி ரொமான்டிக்கா ரியாக்ட் பண்ண முடியும்.?"
"பேச வேண்டிய இடத்துல பேச மாட்டியே… இப்ப மட்டும் பாயின்ட்டா பேசு…."
"இது பாயின்ட்லாம் இல்லை. பொது அறிவுப்பா.."
"ஓகே… அப்பாவுக்கு முன்னாடி ஒளிஞ்சு ஆகணும்தான். என்னை அவனோட ஃப்ரெண்டுனு சொல்லியிருக்கலாமே… பிஸினஸ் லைக் பழக்கம் மாதிரி சொல்ல கூடாதுல்ல…"
"அது…" அவள் பதில் சொல்லுமுன் வண்டியை நிறுத்திய ஹைந்தவி...
"மயூ… இங்கே இறக்கி விடவா.. ட்யுட்டிக்கு டைம் ஆயிடுச்சுபா!" என்றாள்.
"சரி ஹைடி… இங்கிருந்து நான் ஆட்டோ பிடிச்சு வீட்டுக்கு போயிடுவேன். ஈவ்னிங் பார்க்கலாம்." சொல்லியவளை உற்று பார்த்தாள்.
இளம் ஆரஞ்சு வண்ண பிரிண்டட் சில்க்கில் மயூரி அழகாக நின்றாள். அடர்ந்த நீண்ட கூந்தல் காற்றில் அலைந்தாட… மீன் போன்ற அகன்ற விழிகள் கதை பேசும் பாவனையில் இருந்தன. இந்த தங்கநிற பேரழகியை பார்த்தால் மீண்டும் ஒரு முறை பார்க்க வேண்டும் என்ற ஆவல் கிளம்புவதை எவனாலும் மறுக்க முடியாது. ஆனால்...
Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.
Policekar neenga onnu sonneenga
Unga mommy ada cleabold panna poranga
Hyndavi superuuu
Sagi sis, kalakkalo kalakkal :)
For next epi mam
Appa pasama??? Paatti, mayu avanga amma than valarthadha solluranga?? chance irukku to be connected with her father....but something sounds fishy
Andha old fellow than mithran handle panura case ah??? Acho ippove mandai odachikanuma
Thank you .
“Ivan vera piano la murari vasikkaran” it’s a good punch.
Waiting for the next update