"ஓகே... மோஸ்ட்லி இங்க எந்த டைப் கம்ப்ளைன்ட் வருது.."
"டொமஸ்டிக் வயலன்ஸ்… கணவன் மனைவி சண்டை… இந்த ரிப்போர்ட்ல இருக்கு சார்" மேகலா ஃபைலை எடுத்தாள்.
"இருக்கட்டும்… நீங்க என்ன செய்வீங்க… சமாதானம் செஞ்சு அனுப்புவீங்களா… இல்ல கேஸை உடனே ஃபைல் பண்ணிடுவீங்களா?"
"அது… வந்து… புருஷன் பெண்டாட்டி சண்டைனா கௌன்சில் பண்ணுவோம்… சமாதானம் செய்ய பார்ப்போம்.. குடும்ப வன்முறைனா உடனேயே நடவடிக்கை எடுத்துருவோம்…"
"நீங்க நிறைய கட்டை பஞ்சாயத்து செய்றதா சொன்னாங்க…"
"அதெல்லாம் இல்லை சார்… பொண்டாட்டி நகையை திருடிட்டு வந்ததா ராங் பர்பஸோட கம்ப்ளைன்ட் தர்றத அப்படியே கொண்டு போக முடியாதுல்ல சார். அவங்க மோடிவ் என்னனு தெரிஞ்சுக்க விசாரிப்போம்."
"தென்… "
"அது பொய்னு தெரிஞ்சா திருப்பி அனுப்பிடுவோம்…"
"இந்த போக்ஸா… மர்டர்… கிட்நாப்பிங்.."
"அதெல்லாம் இந்த ஃபைல இருக்கு சார். அந்த மாதிரி கேஸ் நிறைய வராது சார். க்ரைம் ரேட் குறைச்சுதான் இருக்கிறது… லேடிஸ் காலேஜ்… ஸ்கூல்னு போய் கௌன்சிலிங்… அட்வைஸ்… எங்களோட ஹெல்ப் லைன் சேவைகளை புரிய வைக்கிறோம் சார்."
"அப்படியா…" என்றவன் அந்த ஃபைலை எடுத்து பார்த்தான்.
"இந்த ரிப்போர்டை யார் தயாரிச்சது…"
"ஹைந்… எஸ்ஐ ஹைந்தவி சார்." மேகலா சொல்லவும்,
"குட்… உங்களுக்கு வேறு வேலை இருந்தால் பாருங்க.. ஹைந்தவி… நீங்க வாங்க.. எனக்கு கொஞ்சம் டவுட் இருக்கு.." அவன் அட்மின் அறைக்குள் சென்றான்.
"ஹைந்தவி கேர் ஃபுல்… மாட்டிவிட்றாதே… பெண்டிங் கேஸ் பத்தி கேட்டால் சமாளிச்சு வை" மேகலா கிசுகிசுத்து அனுப்பி வைத்தாள்.
என்ன செய்ய காத்திருக்கானோ...ரோ…!. இந்த விஷயம் முன்பேயே தெரிந்திருந்தால்… அந்த சைத்ருவை… நோ...நோ… அந்த சத்ருவை ஒரு