(Reading time: 13 - 25 minutes)
Nenchangoodu yenguthadi
Nenchangoodu yenguthadi

தொடர்கதை - நெஞ்சாங்கூடு ஏங்குதடி!!!!!! - 02 - தனுசஜ்ஜீ

ணர்வுகள் உயிர்த்தெழுவதும் உன்னால்........

மரித்துப் போவதும்

உன்னால்......

சில மாதங்களுக்குப் பிறகு,

 வி.கே.குரூப்ஸ் கம்பெனிஸ் என்று பொறிக்கப்பட்ட அந்த மாபெரும் கட்டிடத்தின் உள்ளே அவுடி கார் ஒன்று புயல் வேகத்தில் வந்து நின்றது. காரிலிருந்து வில்லென புறப்பட்ட நாண் போல் அவன் உள்ளே செல்ல அந்த இறுகிய முகத்தோற்றமும், சீறிவரும் நடையும், அவன் கண்களில் தோன்றும் கடுமையும், பார்ப்பவரை அச்சுறுத்தும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை. எப்பொழுதும் இருக்கும் தோற்றம் தான் என்றாலும் முகம் பாறையாக இறுகி இருந்தது. இதனைப் பார்த்த அந்தப் பணியாளர்கள் இன்னைக்கு யார் மாட்ட போறாங்களோ??? என்று தனக்குள் புலம்பிக்கொண்டு தனக்கு கொடுக்கப்பட்ட வேலையினை வெகு சிரத்தையாக செய்ய ஆரம்பித்தனர். ஏனென்றால் அந்த பலியாடு நாமாக இருந்தால் என்னாகும் என்ற அச்சம்தான்.

 உள்ளே சென்றவன் ரிசிவரை எடுத்த அடுத்த நொடி அவனது பி.. பவ்யமாக வந்து நின்றாள்.இன்றைக்கு செய்ய வேண்டிய பணியினை அவன் அடுக்கிக்கொண்டே போக......எப்பொழுதும்போல் இப்பொழுதும் அவன் கம்பீர தோரணை அவளை மயக்க........ மெய்மறந்து பார்த்துக் கொண்டிருந்தாள். அதனைப் பார்த்த அவனுடைய முகம் இறுகி, வாட் ஹேப்பெனிங் ஹியர் என்று அவன் உரத்த குரலில் கத்த........ மாய வலையில் இருந்து வெளியே வந்தவள்.

 பாவம் போல் முகத்தை வைத்துக்கொண்டு பேந்த பேந்த விழித்துக்கொண்டு நிற்க......

 இவள்தான் இப்பொழுது ரசனையுடன் பார்த்தவளா என்று என்னும் அளவிற்கு முக பாவனையை மாற்ற.....

 அதனை பார்த்தவன் பெண்கள் என்றாலே நடிப்பவர்கள் தான் என்ற அலட்சிய பாவத்துடன், அவளை உறுத்து விழித்து ஆர் யூ லிசனிங் என்று கேட்க.......

 எஸ் சார்....... என்று அவள் தடுமாற்றத்துடன் கூற........

ஓகே டேக் நோட்ஸ்....... என்று அவன் கூற கூற இன்றைக்கு செய்ய வேண்டிய பணியை அவள் பதிவிறக்கம் செய்து கொண்டிருந்தாள்.

பணியினையும் கொடுத்துவிட்டு அவளை நிமிர்ந்து பார்க்க..........

 அவள் அதே ரசனை மாறா முகத்துடன் அவனை நோக்க..........

 அவன் முகம் கடுமையாக மாறி யூ ஸ்டுபிட் வாட் என்று மேசையை தட்டி ஆவேசத்துடன்

3 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.