(Reading time: 13 - 25 minutes)
Nenchangoodu yenguthadi
Nenchangoodu yenguthadi

சொல்லுங்க என்று அவன் சிரிப்பு மாறாமல் கேட்க,

எங்கே அவளுக்கு வார்த்தை வரும் முதன் முதலாக தன்னை பார்த்து சிரிப்புடன் பேசியது தன்னவன் தானா ......இல்லை நான் கனவுலகத்தில் எங்காவது இருக்கிறேனா........ என்று ஃபிரீஸ் ஆகி அவள் நிற்க,

அதை கவனித்த கதிர்...... முகத்தை மாற்றிக் கொண்டு டேபிளை ஓங்கி தட்ட....

அதில் மோன நிலையை கலைந்தவள். திருதிருவென்று முழிக்க...... அவள் முழித்த முழியில் கதிர் இதழோரத்தில் குறுநகை வந்ததோ.....

சார் லஞ்ச்.........

ஓ... ஒகே நீங்க போங்க.......

அவள் மந்திரித்த கோழி போன்று அறையைவிட்டு வெளியேற.....

ஏன்டா அந்த பொண்ண போட்டு இந்த பாடு படுத்துற..

நா என் வேலைய தான் செய்றேன்.

ம்க்கும்...... கொஞ்சம் அன்பா பேசுனா தான் என்ன......

ஏன்டா உன்ன மாறி நானும் பைத்தியம் புடிச்சி அழையனுமா........ இந்த காதல் கன்றாவிலாம் என்ன நெருங்க நா விடமாட்டேன் காட் இட்.

மச்சான் எனக்கு என்னமோ நீ சீக்கிரமாவே காதல் நோயாள அட்டாக் ஆகப் போறனு பச்சி சொல்லுது.

என்ன மச்சான் பசி வந்தா சொல்லுடா இப்புடி பஜ்ஜி சொல்லுது வட சொல்லுதுனு. என்ன கலாய்க்காதடா என்று அவன் உரக்க சிரிக்க.......

கார்த்திக் தான் தலையில் அடித்துக் கொண்டான்.

இப்படியே இனிமையாக அவர்களது அன்றைய பொழுது கழிய .....

மறுநாள்........

டிப்டாப் ஆக உடை அணிந்து 7 மணிக்கே ரெடியாகி நின்றுகொண்டிருந்த கார்த்திக்கை...... வழிவிரித்து கதிர் நோக்க...

என்ன மச்சான் டிசர்ட் ஓட சுத்திட்டு இருக்க....... உனக்கு வேலையில கொஞ்சம் கூட சின்சியாரிட்டி இல்லயே மச்சான் என்று அவன் கவலைப்படுவது போல் தாடையை வருட_.....

அட நாயே காலங்காத்தால ஏன் பீபி ஏத்தவே இப்புடி சுத்திட்டு இருக்கியா என்று அவன் கையில் கிடைத்த பொருட்களை தூக்கு அவன் மேல் வீச.....

டேய் கொலகாரி பாவி........ என்ன விட்டுடா -.... என்று அவன் ஓடிச்சென்று கார் நிற்கும் இடத்தை அடைந்தான். ஏதோ உற்சாகம் அவன் மனதில் ஊற்றாக பெருக... அதே வேகத்துடன் அவன் காரினை இயக்கினான்.

3 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.