(Reading time: 13 - 25 minutes)
Nenchangoodu yenguthadi
Nenchangoodu yenguthadi

 அதுக்கு நான் என்ன பண்ண முடியும் மேன்.

எனக்கு தெரிஞ்சு அனிதா நல்ல பொண்ணு தாண்டா . உன் வாழ்க்கை நல்லா இருக்கும் நீ அனிதாவ சூஸ் பண்ணா.

 ஸ்டாப்பிட் கார்த்திக் உன்கிட்ட பல தடவை சொல்லிட்டேன் இந்த டாபிக் என்கிட்ட பேசாதனு.

 எவ்ளோ நாள் நீ இப்படி இருக்க போறதா உத்தேசம்.

 நீ எவ்ளோ நாள் இருக்க போற.... அதுக்கு கார்த்திக்கிடம் பதில் இல்லை. அவனது வாழ்வு எதை நோக்கி செல்கிறது என்று அவனுக்கே தெரியவில்லை ஆனால் இப்பொழுது அவளை கண்டவுடன் அவனுக்கு ஏதோ ஒரு பிடிப்பு வந்த உணர்வு ஆனால் அதை யாருக்கும் தெரியப்படுத்தவும் விரும்பவில்லை.

கார்த்திக்கின் அமைதியை கண்ட கதிரும் சரி விடு மச்சான் கடைசி வரைக்கும் எனக்கு நீ உனக்கு நா என்று அவனை இறுக்கமாக கட்டிப்பிடித்து கன்னத்தில் முத்தமிட........

 அட ச்சீ..... நகுந்து போ என்ற அவனை தள்ளிவிட.....

 என்ன மச்சான் இப்படி பண்ணிட்டியே என்று அவன் நமுட்டு சிரிப்புடன் கூற......

கதிரை முறைத்துப் பார்த்த கார்த்திக்கும் அவனது முகபாவனை கண்டு சிரித்து விட்டான் அனைவரிடமும் கடுமையான முகத்துடன் நடந்து கொள்ளும் கதிர் கார்த்திக்கிடம் மட்டும் அவனது குழந்தைத்தனம் வெளிப்படுவது ஏன்???? அவனிடம் மட்டும் சகஜமாக இருப்பது ஏன்????? இத்தனைக்கும் கார்த்திக்கு என்ன செய்துவிட்டான் இவனுக்கு??????

அடுத்த நிமிடம் வாடா நீயும் இன்டர்வுயு ல ஜாயின் பண்ணிக்கோ சேர்ந்து செலக்ட் பண்ணுவோம்.

கண்டிப்பா மச்சான் என்று அவன் காரணத்துடன் கூற இன்டர்வியூ நடக்க ஆரம்பித்தது.

 அதில் வந்த எவரையும் கதிருக்கு பிடிக்கவில்லை கார்த்திக் அவர்கள் யாரையும் கண்டுகொள்ளவே இல்லை அவனுடைய இலக்கு யார் என்று நமக்கே தெரியும்.

 அவளின் வரவுக்காக தான் அவன் காத்திருந்தான் எப்பொழுதும் போல கடைசியாக அவளும் நுழைந்தாள்.

மே ஐ கம் இன் சார்.

 அவள் குரல் வந்த மறுநொடி கார்த்திக்கின் முகம் கடுமையை பூசிக்கொண்டது.

ஆனால் கதிர் எப்பொழுதும் பெண்களை கண்டாலே வெறுப்பவன் இவளை கண்டவுடன் அவன் முகத்தில் ஒரு கனிவு ஏன் என்று அவனுகுமே தெரியவில்லை. அமைதியாக யெஸ் கம் இன் என்று கூறியவன் அமர சொல்ல.

3 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.