(Reading time: 13 - 25 minutes)
Nenchangoodu yenguthadi
Nenchangoodu yenguthadi

அவள் உள்ளே வந்து அமரும் வரை குனிந்தபடியே இருந்தவன் அப்பொழுதுதான் நிமிர்ந்தான்.

 அவனை கண்ட அடுத்த நொடி அவள் அதிர்ச்சியுடன் மிரண்ட விழிகளுடன் அவனை நோக்கினாள். பின்பு தன்னை சமன் செய்து தைரியத்தை வரவழைத்துக்கொண்டு, சர்டிபிகேட்டை கதிரிடம் நீட்ட.....

 அதனை பார்த்தவன் கேள்வி கேட்க விளையும் பொழுது கார்த்திக் கதிரின் கையை பிடித்து தான் பார்த்துக் கொள்வதாக சைகை செய்துவிட்டு அவன் அவளிடம் கேள்வி கேட்க தொடங்கினான்.

 உங்க பெயர் என்ன??? என்று கேட்க....

( அது தெரியாம தான் சிஸ்டர்கிட்ட என் பேர் சொல்லி கேட்டானா லூசு லூசு......என்று தனக்குள் புலம்பிக்கொண்டு)

தேன்மொழி சார் என்று அவள் சிறு சிரிப்புடன் கூற.....

பேரு தானே கேட்டேன் அதுக்கு எதுக்கு இப்படி இளிச்சுட்டு இருக்கீங்க....

தேன்மொழிக்கு சுறுசுறுவென்று கோபம் வேற கண்ணை மூடி தன்னை சமன் செய்து கொண்டாள்.

 ஓகே என்ன படிச்சு இருக்கீங்க......

 பிஎஸ்சி கம்ப்யூட்டர் சார்.

 உங்க அம்மா அப்பா என்ன பண்றாங்க......தெரிந்தும் கேட்டான்.

 சிறிதும் சலனமில்லாமல் ஐ டோண்ட் ஹவ் பேரண்ட்ஸ் சார்.

அவள் ஒவ்வொரு பாவனையையும் பார்த்து கொண்டு இருந்தவன். அப்பொழுது தான் மேல் நெற்றியில் உள்ள குங்குமத்தை பார்த்தவன். கல்லாய் இறுகி போனான்.

 திருமணமானவள் என்ற நினைவே அவனுக்கு கசந்தது.

 ஆர் யூ மேரிட்?? இன்று அவன் கரகரப்பான குரலில் கேட்க........

 அவள் முகத்தில் எந்த மாறுதலும் இல்லாமல் எஸ் சார். என்று கூற

 இதற்கு மேல் அவனால் எந்த கேள்வியும் கேட்க முடியவில்லை.

யூ ஆர் அப்பாயின்டட்...... நாளைக்கு வந்து ஜாயின் பண்ணிக்குங்க.

அவள் நம்ப முடியாத அதிர்ச்சியுடன் சார்.

யூ மே கோ நவ் மிஸஸ் தேன்மொழி.

அவள் முகத்தில் மலர்ந்த சிரிப்புடன் இருவரிடமிருந்து விடைபெற்றாள்.

 ஆனால் கார்த்திக்கால் சிரிக்க முடியவில்லை அமைதியாக அந்த இடத்திலேயே அமர்ந்திருந்தான்.

3 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.