(Reading time: 9 - 18 minutes)
Unakkaagave uyir vazhgiren
Unakkaagave uyir vazhgiren

கணக்கிட்டு தான் மூடுகிறது. அதாவது இன்றைய தேதி 31. அதைப்போல் இன்று புதன்கிழமை அதாவது Wednesday. முப்பத்து ஒன்று உடன் வெனஸ்டேயில் உள்ள ஒன்பதை கூட்ட நாற்பது கிடைக்கிறது. இதுவரை ஒவ்வொரு நாளையும் மிக கவனமாக கவனித்து இதை கண்டு பிடித்துள்ளேன். இது நிச்சயம் சரியானதுதான். அந்த நாற்பது நொடிக்குள் நாம் வெளியேறி ஆகவேண்டும்.

ஆனால் இந்தக் கதவை சாப்பாடு கொண்டு வரும்போது மட்டும் தானே திறப்பார்கள்.

ஆமா தாத்தா.. ஆனால் நாம் இன்று திறக்க வைக்கப் போகிறோம்.

எப்படி குயிலி...

இந்த அறையில் நடப்பது எல்லாவற்றையும் கவனிப்பதற்காக இந்த அறையின் ஓரத்தில் கேமரா வைத்து இருக்கிறார்கள் என்றவள் வேகமாக கேமராவின் மீது அங்கிருந்த கடினமான பொருளை தூக்கி போட அது உடைந்து கீழே விழுந்தது..... ஒரு நொடிப்பொழுதில் நடந்து முடிந்துவிட்டது.

குயிலி என்ன செய்கிறாய்...

தாத்தா... இப்போது அங்கு சிசிடிவி காட்சிகள் மறைக்கப்பட்டிருக்கும். எப்பொழுது வேண்டுமானாலும் எண்ண என்று பார்ப்பதற்காக ஆட்கள் வருவார்கள். நாம் தயாராக இருக்கவேண்டும் என்றவள் அந்த கதவின் அருகில் சென்று நின்று கொண்டாள். அவளுக்குப் பின்னே ஆசீர்வாதம் தாத்தாவும் நின்றுகொண்டார்.

அவர்கள் நினைத்தது போலவே கதவு திறக்க உள்ளே நுழைந்தான் ஒருவன். அவன் தான் ஏற்கனவே குயிலியிடம் மூக்கில் குத்து வாங்கியவன்.

உள்ளே நுழைந்ததும் அவன் சிசிடிவி க்கு நேராக கண்களை திருப்ப அதற்குள் பின்னால் நின்ற குயிலி அவன் பின்பக்க கால் முட்டியில் ஓங்கி ஒரு குத்து விட்டாள்.

நிற்க முடியாமல் தடுமாறி அவன் முகம் குப்புற கீழே விழ அந்த நொடியில் வேகமாக தாத்தாவை அங்கிருந்து வெளியே தள்ளியவள் தானும் அந்த அறையிலிருந்து வெளியேறினாள்.

இவர்கள் அந்த அறையை தாண்ட முயற்சிக்க அதற்குள் மற்றொருவன் அந்த அறையை நோக்கி வந்து கொண்டிருந்தான். இவர்களைப் பார்த்ததும் வேகமாக உள்ளே வந்தவன் ஆசீர்வாதம் தாத்தாவின் கையை பிடித்து இழுக்க அதற்குள் குயிலி அவன் முகத்திற்கு நேராக தன் கைகளை ஓங்கினாள். குயிலி தன்னை தாக்குவாள் என்பதை எதிர்பார்த்திருந்தவன் போல மற்றொரு கையால் எளிதாக குயிலியின் கையை தடுத்து நிறுத்தினான்.

இருவரும் மாறி மாறி ஒருவரை அடித்துக் கொள்ள அவன் அடித்த அடிகள் ஏதும் குயிலின் மீது பலமாக விழவில்லை. ஆனால் குயிலி அடித்த ஒவ்வொரு அடியும் அவன்மீது இடியாக

8 comments

  • Semma epi jeba ma'am 👏👏👏👏👏👏 30-40seconds analysis ellam :eek: :eek: emmadiyo 😱😱 verum karpanai thano :Q: never heard before 😁😁 <br />Antha man Karthick ah ?? Andha gang-i thankku sadhagama use panuraro in name of those two rowdy brothers?? Kuyili ena panuranga kuruttu thairiyam solla mudiyala but ippadi disappoint agama face pananum illaya :sad: waiting to see what happens next.<br />Thank you and keep rocking.<br />Good night!!
  • Dear Jeba! ரொம்ப நுணுக்கமாக எழுதி அசத்தியுள்ளீர்கள். இது நிச்சயமாக திரைப்படமாக்கவேண்டிய கதை! பிரபல வார இதழ்களில் பிரசுரிக்கப் தகுதியான படைப்பு! பிரமாதம்!

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.