”ஹரி லஷ்மிக்கிட்ட வடை டேக்சா கொடு அவளும் எல்லாருக்கும் பரிமாறட்டும்” என தாத்தா சொல்ல அலறினான் ஹரிஹரன்
”தாத்தா அவள் போட்டிருக்கற ஜாக்கெட்டுக்கு அவள் குனிஞ்சி பரிமாறினா என்னாகிறது ஒண்ணும் வேணாம் அவள் நிக்கட்டும், இதோ தொன்னையிருக்கு அதுல சர்க்கரை பொங்கல் வைச்சி தரட்டும் நான் போய் பரிமாறிக்கிறேன்” என சொல்ல அவரும் அவளை பார்த்துவிட்டு
”அம்மாடி நீ குனிய வேணாம், அங்க பாரு பொங்கல் இருக்குல்ல அதை கொஞ்ச கொஞ்சமா தொன்னையில வைச்சி கொடு ஹரி பரிமாறிடுவான்” என சொல்ல அவளும் தலையாட்டிவிட்டு நின்றுக் கொண்டே வேலைகளைச் செய்தாள்.
தீப்தி மட்டும் ஹரியிடம் வந்தாள்
”நான் வேணா வடை பரிமாறட்டுமா”
“தாராளமா இந்தா” என அவள் கையில் டேக்சா தந்துவிட்டு கலவை சாதத்தை எடுத்துக்கொண்டு ஒவ்வொருவருக்காக பரிமாறினான் ஹரி. அவன் சாதம் வைத்துவிட்டு சென்றதும் அடுத்து தீப்தி வடை வைத்துக் கொண்டே சென்றாள்.
இப்படியே 2 கோயில்கள் முடிந்த நிலையில் 3வது கோயிலுக்கு வந்த ஹரி எதேச்சையாக கௌரியை சந்தித்தான். அவளைப் பார்த்து சிரித்தான்.
”எதுக்கு இப்படி சிரிக்கற நான் ஒண்ணும் சின்ன பொண்ணு கிடையாது என் பொண்ணே காலேஜ்ல படிக்கறா”
“உனக்கு பொண்ணு இருக்கற விசயத்தை நீ வெளியே சொன்னாதான் எல்லாரும் நம்புவாங்க புதுசா பார்க்கறவங்களுக்கு நீதான் சின்ன பொண்ணா தெரியற” என சொல்லிவிட்டு மண்டபத்திற்குள் சென்று லஷ்மியிடம் வந்தான். அவளோ அவனை கோபமாகப் பார்த்தாள்.
”எதுக்கு இந்த கோபம்னு நான் தெரிஞ்சிக்கலாமா” என கேட்க
”எதுக்கு நீங்க இந்த புனிதமான கோயிலை களங்கப்படுத்தறீங்க”
”நானா நான் என்ன செஞ்சேன்”
“அந்த லேடி கூட சிரிச்சி பேச என்ன இருக்கு, இது தப்பு உங்க வயசு பொண்ணுங்க கிட்ட பழகறதே தப்பு, இதுல அந்த லேடி கூட அதுவும் கோயில்ல சே சே” என அங்கிருந்து கோபமாக சென்று தன் தந்தையிடம் நின்றுக் கொண்டாள்.
திரும்பி கௌரியைப் பார்த்தான். அவளோ அவனையே பார்த்துக் கொண்டிருக்க
”நாசமா போச்சி, ஏற்கனவே மாமா ரூபத்தில ஒருத்தர் என்ன வாழ விடமாட்டேங்கறாரு, இதுல இவள் வேற புடவைக்கு ஆசைப்பட்டு என்னை புதைகுழியில தள்ளிட்டுதான் போவா போல, இவளா வந்தா நின்னா சிரிச்சா என்னை ஏன் லஷ்மி போட்டு தாளிக்கறா, நான்