அன்பான வாசக தோழமைகளே!,
அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
பரபரப்பாய் ரொம்ப எதிர்பார்ப்புடன் ஆரம்பித்த 2020, ஆரம்பித்த உடனேயே நவுத்து போன பட்டாசாய், பற்ற வைத்தும் மேல எழும்பாமலயே மடிந்து போன புஸ்வானமாய் மாறிப்போனது எல்லாருக்கும் வருத்தமே..
வாழ்வில் ஏற்ற இறக்கங்களை ஏற்றுக் கொண்டு வாழ பழகி இருந்த நம் மக்கள் இவ்வளவு பெரிய இறக்கத்தையும் ஏற்று சமாளித்ததும் இன்னும் சமாளித்து கொண்டும் இருப்பது தான் சென்ற வருடத்தின் மிகப்பெரிய சாதனையாகும்...
பெரிய எதிர்பார்ப்பு இல்லாமல், ஏதாவது அதிசயம் நடக்காதா, வாழ்க்கை மீண்டும் பழைய படி திரும்பாதா என்று சிறு ஆவலுடன், எதிர்பார்த்து ஏமாந்து போயிருந்த 2020 ஆல் இந்த முறை பெரிதாக எதிர்பார்க்காமல் கொஞ்சமே கொஞ்சமாய் நல்லது நடக்க வேண்டுமே, வாழ்க்கை பழைய நிலைக்கு திரும்ப வேண்டுமே என அனைவருமே 2021 ஐ எதிர்பார்த்து வரவேற்றிருக்க, அவர்களில் ஒருத்தியாய் நானும்...
இந்த வருடம் அனைவருக்கும் சிறப்பாய் அமைய எனது வாழ்த்துக்கள்!!
எந்த ஒரு சரிவையும், தளர்ச்சியையும், இறக்கத்தையும் வாய்ப்பாக பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்பதை நினைவில் கொண்டு 2020 ல் எனக்கு கிடைத்த நேரத்தை என் எழுத்தாய் உங்களிடம் பகிர்ந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி.. அந்த வகையில் 2020 எனக்கு ரொம்பவும் பிடித்த வருடமும் கூட....
2020 ல் முதன் முதலாக என்னுடைய கதைகள் புத்தகங்களாக Amazon ல் வெளியாகி மற்ற வாசகர்களிடமும் பெரும் வரவேற்பை பெற்றது எனக்கு சென்ற வருடத்தின் மற்றொரு போனஸ்..
இதுவரை எனது பொழுது போக்குக்காய் நான் எழுதிய கதைகளை தொடர்ந்து படித்து அதில் இருக்கும் நிறை குறைகளை சுட்டிகாட்டி என்னை ஊக்குவித்து என்னையும் ஒரு எழுத்தாளராய் அறிமுக படுத்த உதவிய அனைத்து வாசக தோழமைகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்..!
நீங்கள் அளித்த ஆதரவாலும் ஊக்கத்தாலும் எனது அடுத்த கதையுடன் இந்த புத்தாண்டில் மீண்டும் உங்களை சந்திக்க வந்திருக்கிறேன்...
காதலை வெறுக்கும் நம் நாயகியையும், தன் கவிதைகள், புதினங்களுமாய் விரிந்து கிடக்கும் கற்பனை உலகில் காதலை ஆராதித்து இனிக்க இனிக்க திகட்ட திகட்ட காதலிக்கும் நம் நாயகனையும் சேர்த்து வைத்து மதிப்பிற்குரிய திருவாளர் விதியார் ஆடும் ஆட்டம் தான்
Anda paarai tan hero pola
Mani sir pidiththa matume vachukonga no lvuuu
Happy new year🎉🌹
Frnds kuttani is
Thank you.