எப்போது லஷ்மி தூங்கினாளோ அலாரம் அடிக்கும் சத்தம் கேட்டு எழுந்தாள்.
அந்த அறையில் ஹரியில்லாமல் போகவே உட்கார்ந்தபடி யோசித்துக் கொண்டிருந்தாள். கேசவன் அந்த அலாரம் சத்தத்தில் எழுந்து அவளைப் பார்த்தார்
”லஷ்மி படுத்துக்க கால்ல வேற அடிப்பட்டிருக்கு காயம் சரியாகட்டும் அப்புறமா போய் சமையல் கத்துக்கலாம்”
”இல்லைப்பா வலி போயிடுச்சி வீக்கமும் சரியாயிடுச்சி பாருங்க” என அவள் காட்ட
”ஆமா சரியா போச்சி ஆனா நடந்தா உனக்கு வலிக்குமே”
”இல்லைப்பா வலிக்காது எப்படியும் நான் எழுந்துட்டேன் இனிமே தூக்கம் வராது இங்க இருக்கற கொஞ்ச நாள்லயாவது சமையல் செஞ்சி புண்ணியம் தேடிக்கலாமே”
”சரி ஆனா ஜாக்கிரதைம்மா ஹரி சொன்ன மாதிரி நெருப்பில வேலை செய்றப்ப துணியை பத்திராம வைச்சிக்கனும் அதுவும் நீ கட்டியிருக்க புடவை சீக்கிரமா நெருப்பு பிடிச்சிக்கும் சரியா”
”சரிப்பா நான் பார்த்துக்கிறேன்” என சொல்ல அவரும் அவளது தலையை தடவிவிட்டு
”அந்த ஹரி நல்ல பையன்தான்”
“தெரியும்பா”
”அவனை கோச்சிக்காத”
“இல்லைப்பா”
“நீ கவலைப்படாத உன் விருப்பத்துக்கு மாறா நான் உன்னை அவனுக்கு கல்யாணம் செஞ்சி வைக்க மாட்டேன் சரியா”
“சரிப்பா” என அவள் சிரித்தவாறே தலையாட்டி எழுந்து ரெடியாக ஆரம்பித்தாள்.
கீழே வந்த லஷ்மி அங்கு வேலைகளை ஆரம்பித்திருந்த ஹரியிடம் வந்தாள். அவளைப் பார்த்து குழப்பத்துடன்
”நீ ஏன் வந்த இன்னும் உன் காயம் சரியாகலை பாரு”
“எல்லாம் சரியாயிடுச்சி நான் நல்லாதான் இருக்கேன்”
”பரவாயில்லை நீ போய் தூங்கு இப்படி நீ கஷ்டப்படவேணாம்”
”நான் கஷ்டப்படறேன்னு சொல்லலையே”
“இப்ப என்ன செய்யப்போற நெருப்பில விளையாடாத கிளம்பு”
“அப்பா என்னை பத்திரமா இருக்க சொல்லிதான் அனுப்பினாரு” என அவள் சொல்லவும் அவன் அவளை முறைத்தான்
”எப்ப பாரு அப்பா அப்பான்னு என்னவோ பண்ணு போ” என சொல்லிவிட்டு சின்னாவை