மாமா என்று புதியவரின் நெஞ்சில் முகம் புதைத்து அழுத குயிலியைப் பார்த்ததும் இது தான் கார்த்திக் அப்பாவோ என்று பார்த்தார் ஆசிர்வாதம்.
நெஞ்சில் சாய்ந்து இருந்த குயிலியை அணைத்து கொண்டே, நீங்க நினைக்கிறது சரி தான். நான் கார்த்திக் அப்பா ராமசந்திரன் தான். கார்த்திக்கு எல்லா உண்மைகளும் சில மாதங்களுக்கு முன்பே தெரியும் என்று சொல்ல அதுவரை விம்மி கொண்டு இருந்த குயிலி தலையை நிமிர்த்தி மாமா... கார்த்திக்கு எப்போ உண்மை தெரியும்...
அவன் அமெரிக்காவில் இருந்து இங்கு வருவதற்கு முன்பே தெரியுமாம்...
ஓ... என்று விரக்தியாக கூறியவள் அப்படி என்றால் நான் அவனைத் தேடி வந்த போது நான் யாரென்று தெரிந்தும் என்னை விரட்டி இருக்கிறான்....
அப்படி இல்லைமா... பழையது எல்லாம் நினைவு வந்தும் உன்னோட முகம் மட்டும் அவனுக்கு தெரியாமல் போய்விட்டதுமா... உன்னை கண்டு பிடிக்க தான் அவன் இந்தியாவிற்கு வந்தான்.
அந்த அளவு அவன் மனதில் நான் தூரமாக போய் விட்டேன். அதனால் தான் என் முகம் அவனுக்கு மறந்து விட்டது.
ஐயோ... அப்படி இல்லைமா... குயிலின் முகத்தை தெரியாமல் தடுத்தது குழழியின் முகம்...
குழழியியா... அது நான் தானே
அது நீ தான்... ஆனால் இந்த உண்மை அவனுக்கு தெரியாதே... குயிலின் முகத்தை நினைவுக்கு கொண்டு வர நினைக்கும் போதெல்லாம் அவனுக்கு தெரிந்தது குழழியாக அறிமுகமாகிய உன் முகம் தான்.... நீ அவனுக்குள் ஒரு அங்கமாக இருப்பதால் தான் குயிலி முகம் தெரியவில்லையோ என்று நினைத்து தன் சந்தேகத்தை தீர்க்க முயற்சி செய்தான். ஒரு வேளை நீ குயிலியாக இல்லை என்றால் குயிலி உயிரோடு இருக்காளா என்று தெரிந்து கொள்ள வேண்டுமே என்று பல முயற்சிகளில் இறங்கிய வேலையில் தான் நீ வீட்டிற்கு வந்தது. புஷ்பா உன்னை பூங்குழலி என்று நிரூபிக்க முயற்சி செய்ததும் நீதான் குயிலி என்று உறுதியாக தெரிந்து விட அவன் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லைமா...
அந்த மகிழ்ச்சியில் தான் என்னை வீட்டை விட்டு வெளியே துரத்தி விட்டானோ...
அப்படி இல்லைமா... அந்த சமயம் உண்மையை ஏற்றுக் கொண்டால் அனைவருக்கும் பிரச்சினை வரும் என்று தான் சொல்லவில்லை.
அந்த அனைவர் யார்... நாம் இருவரும் அவன் கண் முன்னே தானே இருந்தோம். அப்பொழுதே நம்மை அழைத்து கொண்டு வெளியே சென்று இருக்கலாமே...
வெளியே சென்று விட்டால் உங்களை போய் விட்டு வாங்க என்று அனுப்பி வைத்திருப்பார்கள்
Kuyili kashta pattu kandupidicha details ellam eppo use agum??? Will she start her journey to help Karthick???
Kuyili oda parents anga irundhu escape aga mudiyalaiya or were they hiding??? Avangaloda inventions ellam ena pananga
Curious to see what happens next....
Thank you and keep rocking 👍