என் நாவலை பற்றிய சிறு குறிப்பு:
இக்கதையின் நாயகி அகிலா தனது அண்ணனுக்கு ஏற்பட்ட அநீதிக்காக நாயகன் ஆதியை பழிவாங்க திட்டம் திட்டி அவனது வாழ்க்கையில் நுழைகிறாள்.
சில சந்தர்ப்ப சூழ்நிலைகளால் ஆதியின் மீதே காதல் கொள்கிறாள். ஆனால், தனது அண்ணன் மீது கொண்ட பாசத்தால் அவனிடம் தனது காதலை மறைக்கிறாள்.
ஒரு கட்டத்தில் அகிலாவின் காதலை ஆதி உணர்ந்து கொள்கிறான். அவளிடம் தனது காதலை உணர வைக்க போராடுகிறான். அகிலாவும் ஆதியின் காதலை ஏற்று கொள்கிறாள்.
இதற்கிடையில், ஆதியின் கம்பெனி மிக பெரிய நஷ்டத்தை எதிர் கொள்கிறது. அது, மட்டுமின்றி ஆதியின் தந்தை சோமசுந்தரம் தலையில் பெருத்த அடிபட்டு கோமாவில் இருக்கும் நிலைக்கு தள்ளப்படுகிறார்.
இவைகள் நடந்த அன்றேயே அகிலாவும் காணாமல் போகிறாள்.... பின்னர், ஆதிக்கு இவை அனைத்திற்கும் காரணம் தனது தொழில் எதிரிகள் ரிஷி மற்றும் தீபக் தான் காரணம் என்று தெரிய வருகிறது.
இதில் ரிஷியின் தங்கைதான் அகிலா என்று தெரிய ஆதி நொறுங்கி போகிறான்.
காதல் என்ற பெயரில் தன்னை ஏமாற்றியவளை பழிவாங்க துடிக்கிறான். தனது தந்தைக்கு ஏற்பட்ட விபத்திற்கும் அகிலாவிற்கும் சம்மதம் உண்டு என்றும் நம்புகிறான்.
உண்மையில், அகிலா குற்றவாளியா????? அதியுடன் அவளுக்கு ஏற்பட்ட காதல் பொய்யா????
மீண்டும், ஆதியின் வாழ்க்கையில் வரும் அகிலா அவனுக்கு மகிழ்ச்சி தருவாளா???? அவள் மீது ஆதி வைக்கும் குற்றச்சாட்டை ஒத்து கொள்வாளா? என்பதை காதல் மட்டும் இன்றி அண்ணன் தங்கை பாசத்துடன் இக்கதையில் கூற இருக்கிறேன்.
ஒரு பெண் நினைத்தால் ஆக்கவும் முடியும் அழிக்கவும் முடியும் என்பதேயே இக்கதையின் மைய கருத்து.
நன்றி,
கோமதி சிதம்பரம்.
இன்னும் எவ்ளோ நேரம்தான் இப்படியே ரெண்டு பேரும் உட்கார்ந்துட்டு இருக்க போறீங்க????? என்று கேட்ட அப்பத்தாவின் கோபக்குரலில் ஆதி மற்றும் அவனது தாய் பார்வதி ஒருசேர கட்டிலில் இருந்து எழுந்து நின்றனர்.
அத்தை.... அது வந்து என்று இழுத்த தனது மருமகள் பார்வதியை கண்களால் எரித்து விடுபவரை போல பார்த்தார். அந்த வீட்டின் பெரிய மனுஷி பேச்சியம்மாள். (ஆதியின்
Like to read stories? Now you can read full novels at Chillzee KiMo. No wait time, No ads, No restrictions!!!
Ponnu parka othukittaru but agila than kalaynam panuvarame 😍😍 ivaroda pazhivangum padalathil kuda kadhal pongudhu
Wish you all the best for your new series.
Thank you.
Geetha and Rishi update seekiram Varum ji.
Thanks for your warm wishes.