(Reading time: 9 - 18 minutes)
Ondru serntha anbu maarumo
Ondru serntha anbu maarumo

அப்பத்தா).

அவரது பார்வையின் வீச்சை தாங்காமல் பார்வதி தனது அத்தையின் முன் தலை குனிந்து நின்றாள்.

அங்க என் மகன் சோமு, அதான் உன் புருஷன் சாகக்கிடக்குறான்.... இப்ப கூட உன் பிடிவாதத்தை நீ விட மாட்டா இல்லை.

எனக்கு ஒரு சந்தேகம்.... நீ அவன்கூட சந்தோசமா தானேயே இவ்ளோ நாள் வாழ்ந்தா????? உனக்கு அவனோ இல்லை நானோ எதாவது குறை வச்சு இருக்குமோ?

இந்த வீட்டை பொறுத்த வரைக்கும் உன்னை ஒரு மகாராணியை போல தானேயே பார்த்து கிட்டான். அப்புறம் எப்படி உன்னால இப்படி அமைதியா இருக்க முடியுது.

ஒரு வருஷம் இல்ல இரண்டு வருஷம் இல்ல..... ஐஞ்சு வருஷமா என் பையன் படுத்த படுக்கையா கிடக்குறான்.

அம்மாவும் புள்ளையும் எனக்கு என்னன்னு இருக்கீங்க?... ஒரு வேளை இதுக்கு மேல அவன் பிழைக்க மாட்டான்னு முடிவு பண்ணிட்டியா.....என்று கேட்ட அடுத்த நொடி.....

அத்தை... போதும் நிறுத்துங்க.... வாய் இருக்குங்கறதுக்காக என்ன வேணுன்னாலும் பேசுறதா????

என் புருஷன் என் உயிருக்கும் மேல.... அவர் மறுபடியும் என்கிட்ட பழைய படி பேச மாட்டாரான்னு ஒவ்வொரு நாளும் நான் தவிச்சுட்டு இருக்கேன்.

அவர் இல்லாம நான் எப்படி அத்தை இருப்பேன். உங்களால எப்படி இந்த மாதிரி பேச முடியுது???? என்று கூறியவர் அதற்கு மேல் ஏதும் கூற முடியாமல் தனது சேலை தலைப்பால் வாயை முடி கொண்டு அழ ஆரம்பித்தார்.

உன்னால முடியாது இல்ல.... அப்ப நான் சொல்றதை செய் .....இந்த இத எடுத்துட்டு நீயும் உன் பையனும் உடனேயே வைத்தீஸ்வரன் கோயிலுக்கு கிளம்புங்க.... என்று மஞ்ச பை ஒன்றை நீட்டினார்.

இதுல இருக்குற பொன்னி மற்றும் ஆதியோட ஜாதகத்துக்கு பொருத்தம் பார்த்துட்டு..... இவங்க கல்யாணத்துக்கு தேதி குறிச்சுட்டு வா.... என்று தனது மருமகளிடம் கட்டளை இட்டார்.

தனது மாமியார் கூறியதை கேட்டு பார்வதி ஒரு நொடி அதிர்ந்து போனார். பேச்சியம்மாள் நீட்டிய மஞ்ச பையை வாங்க மறுத்தவாறு தலையை இடதும் வலதும் ஆட்டினாள்.

கோபத்தின் உச்சிக்கேயே சென்ற பேச்சியம்மாள் தனது மருமகளை திட்ட வாய் திறக்கும் முன்.... அதி அதனை வாங்கினான்.

நீங்க போங்க அப்பத்தா....நானும் அம்மாவும் இன்னும் கொஞ்ச நேரத்தில் வைத்தீஸ்வரன் கோயிலுக்கு கிளம்புறோம்.... நீங்க சொல்றபடியே கல்யாணத்துக்கு தேதி குறிச்சுட்டு வரோம்.

7 comments

• Thanks for your Comments AharvJo.

Geetha and Rishi update seekiram Varum ji.

Thanks for your warm wishes.
• Interesting start ma'am 👏👏👏👏👏 starting laye pazhivangum veriyoda irukare adhi 😱
Ponnu parka othukittaru but agila than kalaynam panuvarame 😍😍 ivaroda pazhivangum padalathil kuda kadhal pongudhu :D by any chance andha ponnu than agila va?? in the loss and accident pinadi agi and rishi irupangalo??? This rishi reminds me about geeta's rishi avanga rendu perum eppo varuvanga :Q:
Wish you all the best for your new series.

Thank you.

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.