தன் அத்தை விடாமல் அனத்திக்கொண்டே இருந்ததால் ருக்கு மீண்டும் தன் கணவனுக்கு அழைத்தாள்...
“எங்கங்க கிளம்பிட்டீங்களா....”
“இப்போதான் ருக்கு... ஆஸ்பத்திரிக்கு வந்தேன்... நோயாளியை உள்ள கூட்டிட்டு போன உடனே பெரிய டாக்டர் கிட்ட சொல்லிட்டு உடனே கிளம்பறேன்...”
“சீக்கிரம் வாங்க... ரத்தம் வேற நிக்காம ஊத்துது...”
“மேலாக்க துணி எதையானும் வச்சு அழுத்தி கட்டு போடு... நான் ஒரு அரை மணில வந்துர்றேன்...”
“ஏற்கனவே ரெண்டு முறை கட்டு மாத்திட்டேங்க.... ரத்தம் நிக்க மாட்டேங்குது...”
“ரெண்டு மூணு துணி சேர்த்து வச்சு கட்டும்மா... இதோ பேஷன்ட் கூட்டிட்டு போய்ட்டாங்க... நான் போய் பெரிய டாக்டர்கிட்ட சொல்லிட்டு கிளம்பறேன்...”
“அச்சோ என்னங்க....”
“என்னம்மா ஏன் கத்தற....”
“என்னங்க அத்தை மயங்கிட்டாங்க...”
“தண்ணி தெளிச்சு பாரு ருக்கு.... எதுக்கும் நீ மறுபடியும் பக்கத்து வீட்டுல போய் கேட்டுப்பாரேன்...”
“இதோட மூணு வாட்டி போயாச்சு.... நம்ம கமலையும் ஒரு வாட்டி அனுப்பி கூப்பிட சொன்னேன்... யாரும் வரலை....”
“சரி விடு... நீ தண்ணி தெளிச்சு எழுப்ப பாரு... நான் போய் சொல்லிட்டு கிளம்பறேன்...”
அவன் சரியாக உள் நுழைய செல்ல அவன் வண்டியில் இருந்த அவசர தொலைபேசி அழைக்க ஆரம்பித்தது...
“என்னப்பா உடம்பு எதாச்சும் முடியலையா.... ரொம்ப சோர்வா தெரியறீங்க....”, திவ்யா கேட்டபடியே தன் தந்தைக்கு தண்ணீர் எடுத்து வந்து தந்தாள்...
இவர்கள் பேச்சுக்குரல் கேட்டு திவ்யாவின் அன்னையும் சமையலறையிலிருந்து எட்டி பார்த்தாள்...
வழக்கமாக ஓவர்டைம் வேலையையும் பார்த்துவிட்டு தாமதமாகவே வரும் கணவன் இன்று சீக்கிரம் வந்ததே அவருக்கு ஆச்சர்யமாக இருந்தது... இதில் சற்று சோர்வாக வேறு இருக்க எதுவும் பிரச்சனையாக இருக்கக்கூடாது கடவுளே என்ற வேண்டுதலுடன் அவருகக்கு தேநீர் கலந்து எடுத்துக்கொண்டு வெளியில் வந்தார்...
“என்னாச்சுங்க.... உடம்பு ஏதாவது சரியில்லையா... தலை வலிக்குதா... மொதல்ல சூடா இந்த
Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.
rombha sad ah irukku natamai
Lakshmi oda father case la alternative solution illai nalum in divya's case they can postpone the wedding, avanga accept panalana indha mathiri oru senseless creatures oda alliance kk oru kumbidu pottu mudichikalam instead of suffering for life time
There are ppl who spend lavishly and end up as a bankrupt....being economical would certainly help people at times of financial crisis....
Viraivil indha covid kk oru end card kedicha nalla irukkum….
Thank you.
Indha Corona vandhathula indiala nadantha orey nalla vishayam kuraintha selavulaiyum kalyanam panna mudiyumnnu... makkal iniyaanum lavishness kuraiththaal nallaa irukkum....