(Reading time: 7 - 14 minutes)
Lock Down
Lock Down

நல்லதில்லை....”, ரங்கன் சொல்ல, தன் தந்தையை சரியாக படுக்க வைத்த லக்ஷ்மி அக்கம் பக்கத்தில் யாரேனும் உள்ளனரா என்று பார்க்க வெளியில் வந்தாள்...

லக்ஷ்மி சென்று தன் வீட்டிற்கு அருகில் இருப்பவர்களை தனக்கு உதவ வருமாறு அழைத்தாள்... அடுத்த பத்து நிமிடத்தில் அந்த தெருவே அவர்கள் வீட்டின் அருகில் கூடி,  அடுத்து என்ன செய்வதென்று பேச ஆரம்பித்தார்கள்...

“ஏம்மா லக்ஷ்மி...  அப்பாக்கு எப்போ இப்படி ஆச்சு...  மூச்சு, பேச்சில்லாம இருக்காரே...”

“நெஞ்சை என்னமோ பண்றது... மோர் கலக்கித் தான்னு கேட்டார் அக்கா.... எடுத்துண்டு வரதுக்குள்ள மயங்கிட்டார்....”

“என்னாச்சு ராமா, ஆம்புலன்ஸ் கிடைச்சுதா....”

“இல்லை சார்... ரிங் போகுது... யாரும் எடுக்க மாட்டேங்கறாங்க....”

“நானும் பத்து நிமிஷமா ட்ரை பண்ணிட்டேன் ராமு அண்ணா... லைனே கிடைக்கலை....”

“லக்ஷ்மி இப்படியே பேசிட்டு இருக்கறது வேஸ்ட்... ஆம்புலன்ஸும் கிடைக்க மாட்டேங்குது... நான் வீட்டுக்கு போய் காரை எடுத்துட்டு வரேன்... அப்பாவை உடனே பக்கத்துல இருக்க ஹாஸ்பிடல் கூட்டிட்டு போய்டலாம்... நீ போய் அவரோட பழைய மெடிக்கல் ரிப்போர்ட்ஸ் எடுத்துக்கோ...”, பக்கத்து வீட்டில் இருக்கும் ராபர்ட் சொல்ல லக்ஷ்மி உள்ளே ஓடி தேவையானதை எடுத்து வைத்தாள்...

ராபர்ட்டுடன் இன்னும் இரண்டு மூன்று பேர் சேர்ந்து ரங்கனைத் தூக்க செல்ல, அவர் தலை தொங்கிப் போய் கிடந்தது...

தொடரும்

Next episode will be published on 13th Jan. This series is updated weekly on Wednesdays.

Go to Lock down story main page

8 comments

• Thanks for your comments AdharvJo... Actually Robert passed by the street and came to hetp the family... Missed that line... will try to include in the next epi... Kalyanam postpone aagumaa nirkuma divya nilai enna paarkalaam...

Indha Corona vandhathula indiala nadantha orey nalla vishayam kuraintha selavulaiyum kalyanam panna mudiyumnnu... makkal iniyaanum lavishness kuraiththaal nallaa irukkum....
• Car vachikittu ambulance kk try panittu time waste panurare indha neighbor facepalm
rombha sad ah irukku natamai :sad: at the same time realistic too (y)
Lakshmi oda father case la alternative solution illai nalum in divya's case they can postpone the wedding, avanga accept panalana indha mathiri oru senseless creatures oda alliance kk oru kumbidu pottu mudichikalam instead of suffering for life time :angry: In fact is a good chance to know more abt the groom's family :yes:

There are ppl who spend lavishly and end up as a bankrupt....being economical would certainly help people at times of financial crisis....

Viraivil indha covid kk oru end card kedicha nalla irukkum…. :sad:
Thank you.
• இப்போதுள்ள மத்தியதர குடும்பத்தின் அவலநிலையை இதைவிட நிதர்சனமாக வேறு யாராலும் காட்டமுடியாது! ஜெய்! பிரமாதம்!

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.