(Reading time: 9 - 17 minutes)
Unakkaagave uyir vazhgiren
Unakkaagave uyir vazhgiren

தொடர்கதை - உனக்காகவே உயிர் வாழ்கிறேன்... - 23 - ஜெபமலர்

குயிலியின் இதயத்தை கசக்கி பிழிவது போல இருந்தது. மலை சரிவில் ஏறும் போது அவள் பட்ட வலியை விட இப்போது உணரும் வேதனை கொடுமையாக இருந்தது. 

கார்த்திக் நல்ல படியாக திரும்பி வர வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே இருந்தது. சாப்பிட பிடிக்கவில்லை... உறக்கமும் பறிபோனது. ... யாரிடமும் பேச விரும்பவில்லை... தனிமையில் அதிக நேரத்தை செலவிட்டாள். 

அவள் மனதின் வேதனையை காதல் கொண்ட மற்றொரு மனமும் உணர்ந்திட்டது போல... 

நெற்றி பொட்டில் கன்னை வைத்து இருப்பது தெரிந்தும் அதைப் பற்றி அவன் மனம் கவலை கொள்ளவில்லை... என்னவள் அங்கு தனக்காக தவிக்கிறாள் என்பது புரிய அவனுக்குள் ஒரு வித உணர்வு பரவியது... அது சுகமானதா? சுமையானதா ? அவனால் உணர முடியவில்லை... அவன் தான் இருக்கும் சூழ்நிலையை மறந்து குயிலியைப் பற்றி எண்ண தொடங்கியிருந்தான்.

நேரம் எவ்வளவு கழிந்தது... யார் என்ன பேசினார்கள் என்று எதுவும் அவனுக்கு தெரியவில்லை.. திடீரென மிக அருகில் கேட்ட துப்பாக்கி சத்தத்தில் திடுக்கிட்டு விழித்தவனுக்கு சூழ்நிலையை உணர்ந்து கொள்ள சிறிது நொடி பிடித்தது.

சூழ்நிலையை உள்வாங்கியவன் மனதில் வேகமாக திட்டத்தை போட்டான். அடுத்த நொடி மயங்கி சரிபவன் போல கீழே விழ பிரசாத் தன் பிடியை தளர்த்த பொத்தென்று அருகில் இருந்த சிறு கல்லின் மீது முகம் குப்புற விழுந்தான்.

அவன் நெற்றியில் இருந்து கீற்றாய் வெளிப்பட்ட இரத்தம் சிறிது நேரத்தில் சொட்டு சொட்டாக வடிய தொடங்கியது.

ஓடி வந்த பெண் கார்த்திக் எழுந்திரிடா என்று அவனை பிடித்து உலுக்க அவன் விழிகளோ சற்றும் திறக்கவில்லை. அந்த பெண் அழுகையோடு கார்த்திக்... கார்த்திக் என்று அரற்றிக் கொண்டே அவனை எழுப்ப முயன்றாள்.

இவன் எங்கள் கார்த்திக் தான் என்று எப்படி நம்புவது என்று உரத்த குரலில் கேட்டார் அந்த ஆண்.

சுரேந்தர்... முக அமைப்பை வைத்து உன்னால் கண்டு பிடிக்க முடியவில்லையா... அல்லது உன் உறவு அனைத்தையும் மறந்து விட்டாயா... உன் மச்சினன் ராமு உன் பொண்ணு குயிலி எல்லாரும் என் கஸ்டடியில் தான் இருக்கிறார்கள் என்று பிரதாபன் ஆக்ரோஷமாக பேச இப்போது அவர்கள் கவனம் தன் மீது இல்லை என்பதை உணர்ந்த ராகவ் மெதுவாக விழிகளை திறந்து மூடி விட்டு தன் அத்தையின் கைப்பிடியில் இருந்த தன் விரல்களால் அவளது கையை அழுத்தினான்.

அவன் நன்றாக தான் இருக்கிறான் என்பது புரிய கார்த்திக் எழுந்திரிடா என்று கத்திக்

11 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.