(Reading time: 9 - 17 minutes)
Unakkaagave uyir vazhgiren
Unakkaagave uyir vazhgiren

கொண்டே அழுவது போல பாவனை செய்து கொண்டு அவன் உதட்டருகே தன் காதை வைத்து கொண்டு கார்த்திக் கார்த்திக் என்று சொல்லி கொண்டே அழுதாள்.

அந்த நொடி பொழுது கிடைத்த தருணத்தில், இங்கிருந்து நாம் வெளியேறனும்... தேவையான தகவல்களை எடுத்து கொள்ளுங்கள் என்று சொல்ல அவளும் புரிந்து கொண்டவளாக மீண்டும் கார்த்திக் எழுந்திரிடா என்றாள்.

என்ன சுமித்ரா மேடம்... திட்டம் போட்டு ஃபார்முலாவை மறைத்து வைத்தீர்கள். ஆனால் இப்போது நீங்களாகவே தர போகிறீர்கள்... இல்லை என்றால் உங்கள் கண்முன்னே இவன் சாவை பார்க்க போகிறீர்கள் என்று சொல்லி தன் காலால் எட்டி உதைத்தான். ராகவ் என்று அறியப்பட்ட கார்த்திக் மண்ணில் உருண்டு விழுந்தான்.

மீண்டும் அவன் வயிற்றில் ஓங்கி மிதித்த பிரதாபன் இவன் இனி எழும்ப மாட்டான் என்று சொல்லி விட்டு துப்பாக்கியை பிரசாத் வசத்தில் இருந்த குயிலியின் அப்பா சுரேந்தர் நெற்றி பொட்டில் வைத்தான்.

இப்போது இங்கு இருக்கும் தகவல்கள் எடுத்து வா சுமித்ரா என்று ஆக்ரோஷமாக கத்தினான் பிரதாபன். 

சுமித்ரா தன் கணவனையே பார்த்து கொண்டு நின்றாள். சுரேந்தரும் அவள் விழியை கவனிக்க விழிகளுக்குள் உருண்ட கருவிழி அவள் சொல்ல நினைத்ததை குறிப்பால் உணர்த்தியது.

சுமித்ரா தன் விழிகளை உருட்டி கார்த்திக்கை பார்த்து விட்டு இமைகளை மூடி திறந்து விட்டு ஒற்றை புருவம் உயர்த்தி தன் பக்கம் பார்த்ததை திரும்ப திரும்ப மனதில் கொண்டு வந்து பார்த்த சுரேந்தருக்கு ஓரளவு புரிந்தது.

கார்த்திக் மயக்கத்தில் இல்லை... தான் எதையோ செய்ய தயாராக இருக்கும் படி குறிப்பாக உணர்த்துகிறாள் என்பதை புரிந்து கொண்டார் சுரேந்தர்.

வாய் திறந்து வார்த்தைகளை வெளியே சொல்ல முடியாத இக்கட்டான தருணத்தில் நம் மனதையும் சிந்தனையையும் ஒருமனப்படுத்தி உற்று நோக்கினால் வழி பிறக்கும் என்பது உண்மை அல்லவா... அது தான் இங்கு நடந்தது. மூவரும் தாங்கள் செயல்பட வேண்டிய தக்க நேரத்திற்கு காத்திருந்தனர்..

சுமித்ரா... தங்கள் வசம் இருந்த சில ஓலை போன்ற பொருட்களை எடுத்து வந்து இது தான் இங்கு நாங்கள் தெரிந்து கொண்டது. அனைத்தையும் இதில் குறித்து வைத்திருக்கிறோம் என்று சொல்ல பிரதாபன் சுமித்ரா அருகில் வந்தான்.

அதற்குள் இரண்டடி பின்னால் எடுத்து வைத்தவள் நீ என் கணவனை விட்டால் தான் இந்த தகவல்களை தருவேன் என்றாள்.

11 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.